புகை

 
திருச்சி A .முஹம்மது அபூதாஹிர்
தோஹா - கத்தர்
thahiruae@gmail.com


Ø  உன்னை பிறர்
எதிர்த்தால் அது பகை!
உன்னையே நீ
எதிர்த்தால் அது புகை!

Ø  புகைக்க, புகைக்க
வாழ்வு உன்னை பகைக்கிறது !
புகை உள்ளே இழுக்க இழுக்க
இறப்பு சீக்கிரமாய் உன்னை அழைக்கிறது!

Ø  புத்துணர்வுக்கு புகைக்கப் போய்
புற்றுநோய்த்தான் வந்தது !
மன நிம்மதிக்குப் புகைக்க போய்
மாரடைப்புத்தான் வந்தது !

Ø  ஒட்டு பீடி பழக்கம்தான்
கட்டு பீடியாய் மாறியது!
தெரியாமல் ஆரம்பித்த பழக்கம்
வழக்கமாய் மாறியது !

Ø  இழவு புகைத்தவனுக்கு
வாழ்வு விற்றவனுக்கு !

Ø  அரிவாளுடன்
அவனுடைய எதிரில் இருப்பவனிடம் போன போது
சீக்கிரமாய் அவன் அகன்றான் !
அவனருகில் போய்
சிகரெட்டுகளை புகைத்த போது
அவன் இறந்தான்!

Ø  ஆற்றின் ஆழப்பகுதி ஆபத்து என
அறிவிப்பு பலகை பார்த்தால்
அவ்விடம் விட்டு அகல்கிறார்கள்
சிகரெட்டின் அட்டைப் பகுதியில்
புகைத்தல் உடலுக்கு கேடு என
அதை படித்த பின்தான் புகைக்கிறார்கள்!



Ø  நண்பா !
   கவலை மறக்க புகைக்கிறாய்!
பசியால் மக்கள் படும் அல்லல் நினைத்து
கவலைப்படு!
எவ்வளவு  சிகரெட்டுகளை புகைக்கிறாய்?
ஏழை மக்களுக்கு
அந்த காசை கொடு !

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாய்த்தமிழே

எங்களுக்கு சொந்தமானது

பயங்கரவாதம் - சிலுவை முதல் துப்பாக்கி வரை !