தலைவர்கள்
திருச்சி A.முஹம்மது அபூதாஹிர்
தோஹா - கத்தர்
thahiruae@gmail.com
Ø வெள்ளையர்கள்
சுதந்திரத்திற்கு
முன்
கொள்ளையடித்து
கொண்டுச் சென்றது
இங்கிலாந்து!
தலைவர்கள்
சுதந்திரத்திற்குப்
பின்
கொள்ளையடித்து
கொண்டுப் போய்
போடுவது சுவிட்சர்லாந்து!
Ø மக்கள்
வாய்ப்பு வசதிகள்
பெறத்தான் வாக்களிக்கிறார்கள்!
அரசியல்வாதிகள்
தாங்கள் வாய்ப்பு
வசதி பெறத்தான் வாக்கு கேட்கிறார்கள்!
Ø தேசத்தின் கொடிகள்
எங்களின் கைகளில் !
தேசத்தின் கோடிகள்
அவர்களின் கைகளில்!
Ø தேசப் பற்று
மக்களிடம் !
தேசத்தின் வங்கிப்
பற்று
தலைவர்களிடம் !
Ø தங்கள் உயிரையே தருவதாக
தலைவர்கள்
சொல்கிறார்கள்!
தொண்டர்கள்தான்
தீக்குளிக்கிறார்கள்!
Ø நாட்டின் பணமெல்லாம்
அவர்களிடம்தான்
இருக்கிறது!
இருக்கிறது!
எனவேதான் நாட்டிற்காக தங்களை அர்ப்பணம் செய்திருப்பதாக
அவர்கள் சொல்கிறார்கள்!
அவர்கள் சொல்கிறார்கள்!
கருத்துகள்
கருத்துரையிடுக