விஸ்வரூபம் எதிர்க்கப் படுவது ஏன் ?
திருச்சி A.முஹம்மது அபூதாஹிர் – தோஹா – கத்தார்
விஸ்வரூபம் எதிர்க்கப்படுவதுக் குறித்து சிலர் இப்படி கேட்கின்றனர் இதற்க்கு முன்னர் விஜயகாந்த் ,அர்ஜுன் ,கமல் போன்றோர் நடித்த படங்களில் முஸ்லிம்கள் தீவிரவாதியாக காட்டப்பட்டனரே. அப்போது எதிர்க்காத நீங்கள் இப்போது ஏன் எதிர்க்கின்றீர்கள் .எதிர்க்காமல் விட்டதன் விளைவுதான் உச்சக்கட்டமாக இவ்வளவு இழிவாக முஸ்லிம்களை சித்தரித்து படம் எடுக்கப்பட்டுருக்கிறது .
சமீப காலத்தில்தான் பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு போன்ற கொடுமைகள் எதிர்த்து போராட்டம் நடக்கிறது .தாழ்த்தப்பட்டவர்கள் இழிவுப்படுத்தப் படுவது எதிர்த்துப் போராட்டம் நடத்தப் படுகிறது .அதற்கென்று அவர்கள் இவ்வளவு நாள் ஏன் பேசாமல் இருந்தனர் என கேட்க முடியுமா ?
அவர்கள் விழிப்புணர்வு அடைந்துள்ளனர் என்றுதானே எடுத்துக் கொள்ளவேண்டும் ?ஏன் ஒரு சமுதாயத்தின் விழிப்புணர்வை மான உணர்வை காழ்ப்புணர்வோடு எடுத்துக் கொள்ள வேண்டும் ?ஒரு சமூகத்தை இழிவுபடுத்துவது படத்தை எடுத்த நபருக்கு உள்ள சுதந்திரமாம் .இழிவுப்படுத்தப் படும் சமூகம் எதிர்த்துக் குரல் கொடுப்பதுக் கூட பயங்கரவாதமாம் .என்ன நாகரீகம்?.அடுத்த சமூகத்தை இழிவுப்படுத்துவது .அவதூறாக சித்தரிப்பது சுதந்திரம் என்னும் பெயரில் அழைக்கப்படுவது முஸ்லிம்களின் மீதான தாக்குதல் அல்ல . மனித நாகரீகம் மற்றும் சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகும் .
ஒரு சமூகம் இழிவுப் படுத்தபடுதற்கு எதிராக அது போராடுவதே மதவாதம் என்று பார்க்கப் படுகிறது என்றால் என்ன பேச்சுரிமை என்ன கருத்துரிமை என்ன எழுத்துரிமை வாழுகிறது இந்த நாகரீக சமூகத்தில் ?
கத்தியை வைத்து குத்த வருபவனுக்கு சுதந்திரம் .தடுக்க எங்களுக்கு சுதந்திரமில்லையா ?
அபாண்டமான கருத்தை சொல்ல கமலுக்கு சுதந்திரம் .அது வேண்டாம் என வாய் திறந்தால் மதவாதம் .பிற்போக்குவாதம் .
இதே போன்று இந்த நாட்டில் அவதூறான பல படங்கள் தடுக்கப் பட்டபோது அமைதியாய் இருந்த கருத்து சுதந்திரம் காத்த அறிவு ஜீவிகள் இப்போது ஏன் அலறுகிறார்கள் ?
முஸ்லிம்களுக்கு எதிராக அவர்கள் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்கள் மன்னிக்கவும் விஷரூபம் எடுத்திருக்கிறார்கள் .“ஏன் முஸ்லிம்கள் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க இதில் போய் கவனம் செலுத்த வேண்டும் ?” என விஸ்வரூபம் பற்றிய தொலைக்காட்சி விவாதங்களில் நெறிப் படுத்துபவர்கள் தங்கள் நியாயத்தை சொல்ல வரும் முஸ்லிம் தலைவர்களை திசைத் திருப்புகின்றனர்.
முஸ்லிம்களை இவைப் போன்று தவறாக சித்தரித்து அதன் விளைவு என்ன வென்றால் நவீன தீண்டாமை சப்தமின்றி இந்நாட்டில் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது .
வன்முறைகள், கலவரங்கள், இனப் படுகொலைகள் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது .இராணுவத்தில் வேலையா ? முஸ்லிம் காட்டிக் கொடுப்பான் என்ற தவறான எண்ணம் .அரசு வேலை மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைகளில் பாரபட்சம் . சில இடங்களில் வீடுக் கொடுப்பதில்லை .பாஸ்போர்ட் விசாரணைக்கு வந்த ஒரு காவலர் இப்படி கேட்கிறார் பாய் என்ன பாகிஸ்தான் போகிறீர்களா ? என்று.பஸ் ஸ்டான்டில் யார் பக்கத்திலும் ஒரு பொருளை விட்டு விட்டு ஒரு முஸ்லிம் தேநீர் அருந்த ,அல்லது சிறு நீர் கழிக்கச் சென்றால் கூட பாய் என்ன குண்டு வைத்து இருக்கிறீர்களா எடுத்துக் கொண்டுப் போங்கள் என்று சில இடங்களில் சொல்லுவதுண்டு
மேற்க் கூறப் பட்ட மோசமான விளைவுகளை விதைத்தது பத்திரிக்கைகள் , தொலைக்காட்சிகள் மற்றும் இதுப் போன்ற விஷரூப திரைப்படங்கள்தான் .
அச்சம், அது மற்ற சமூகத்தில் இருந்து ஒதுக்கப்படுதல் , சந்தேகக் கண்ணோடு மற்ற மக்களால் பார்க்கப் படுதல் ஆகியவற்றைக் கொண்ட ஒரு சமூகம் எப்படி அது இயல்பான வாழ்க்கை எப்படி வாழ முடியும்?
எனவதான் மனித சுதந்திரம் ,சமூக நீதி நாடும் மக்கள் இதுப் போன்ற கமலின் கருத்து பயங்கரவாதப் படங்கள் தடை செய்யப் படவேண்டும் என வேண்டு கோள் வைக்கின்றனர் .
ஒரு படம் ஆயிரம் வார்த்தை சொல்லும் என்பார்கள் .இந்த ஒருபடம் ஆயிரம் குண்டுகளுக்கு சமமானவை .
கர்சன் பிரபால் பிரிவினை ஏற்ப் படுத்தப் பட்ட காந்தியின் தேசம் கமல ஹாசனால் பிரிவினை ஏற்ப்படுத்தப் பட்டு விடக் கூடாது எனபது தேசப் பற்றுள்ள இந்திய சமூகத்தின் கவலையாகும் .
நிச்சயம் ஆங்கிலேயரின் சதியை முறியடித்து விரட்டிய எமது முன்னோர்கள் அமெரிக்கர்கள் இதுப் போன்று படங்கள் மூலம் பிரிவினை செய்ய முயலுவதையும் தடுக்க நல்ல முன்மாதிரியை விட்டு சென்றுள்ளார்கள் .
அதுதான் அஹிம்சை. அஹிம்சை வழி நின்று எதிர்ப்போம் , ஜெய் ஹிந்த் !
கருத்துகள்
கருத்துரையிடுக