ஜமால் முஹம்மது கல்லூரி


  திருச்சி A .முஹம்மது அபூதாஹிர்
       B.Com,M.A (1999-2004)
       தோஹாகத்தார்





Ø  ஜமால்
நல்ல மாணவர்களை மட்டுமல்ல
சமூகத்திற்கு
முக்கியமானவர்களை தந்திருக்கிறது !

Ø  பி .காம் ,பி.எஸ்ஸி மட்டுமல்ல
பல ஐ .ஏ.எஸ் ஐ .பி. எஸ்ஸுக்களை தந்திருக்கிறது!
எம் .ஏ,எம் .பி ஏ மட்டுமல்ல
பல எம.பி  எம் .எல் ஏக்களை தந்திருக்கிறது

Ø  முனைவர் பட்டத்திற்காக மட்டுமே ஆராயும்
நவீன உலகில்
சமூகதுயரங்களை ஆராய்ந்து தீர்வுமுனைபவர்களை
தந்திருக்கிறது !

Ø  தங்கப்பதக்கத்திற்கு மட்டுமே
முக்கியத்துவம் கொடுக்கும் கல்வி உலகில்
தனிமனித ஒழுக்கத்திற்கும்
முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது !

Ø  அதனுடைய சுவர்களில்
சாயம் இருக்கலாம்!
ஆனால் அதில் அதை உருவாக்கியவர்களின்
தியாகமிருக்கிறது !

Ø  அது
கல் மண் கலவையில்தான்
கட்டப்பட்டது !
ஆனால் அது
நல் மனம் படைத்தோரின் கவலையால்
எழுப்பப்பட்டது!

Ø  அங்கு படிக்கும்போது
மாணவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள் !
அவர்கள் சமூகத்தில் சிறகடிக்கும் போது
ஜமால் மகிழ்ச்சியடைகிறது !

Ø  பெரும்பாலும் கல்லூரிகள் சீட்டுக்கொடுப்பது
பணம்,இனம் பார்த்து!
ஜமால் சேர்த்துக் கொள்கிறது அனைவரையும்
ஓரினமாய் பார்த்து !

Ø  கல்லூரியை நிறுவிய
கொடை வள்ளல்கள்
காஜா மியான் ராவுத்தரும் ,ஜமால் முஹம்மதும்
கல்விக்களித்த உதவிகளை,
அதில் பயனடைந்தவன் எனும் முறையில்
நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன் !
நாயனிடம் அவர்களின் மறுவுலகப் பதவிகளை
உயர்த்துமாறு மனமுருகிப் பிரார்த்திக்கிறேன் !

Ø  அறுபதாண்டுகளைக் கடந்து
ஜமாலின் பணிகள் தொடர்கிறது
அதன் இந்நாள் மாணவர்களுடன் !
அமீரகத்தில் பதினைந்தாண்டுகள் கடந்து
அதன் சேவை விரிகிறது
அதன் முன்னாள் மாணவர்களுடன் !
Ø  ஜமால் முஹம்மது கல்லூரி
பல்கலைக் கழகமாய்  மலரட்டும் !
யு .ஏ .இ ஜமால் முன்னாள் மாணவரமைப்பு
பல சேவைகள் புரிந்து வளரட்டும்

v   





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாய்த்தமிழே

எங்களுக்கு சொந்தமானது

பயங்கரவாதம் - சிலுவை முதல் துப்பாக்கி வரை !