எய்ட்ஸை ஒழிக்க என்ன வழி ?



திருச்சி A .முஹம்மது அபூதாஹிர்
தோஹாகத்தர்
thahiruae@gmail.com





Ø  “எய்ட்ஸ்” நச்சு மரத்தின்
வேர்களை விட்டு விட்டு
கிளைகளை மட்டும் வெட்டுவது
அது அழிந்திடவா வகை செய்யும்?
அல்ல !
      வளர்ந்திடவே வகை செய்யும்!
Ø  “எய்ட்ஸ்” நச்சுமரத்தின் வேர்களை
ஆழத்திலேயே வெட்டிடுங்கள்!
விழிப்புணர்வு முரசினை
விரைவாக கொட்டிடுங்கள் !
Ø  சிவப்பு விளக்கு பகுதிகளை
மூடுங்கள்!
சினிமாவில் ஆபாசத்தை
தடுங்கள் !
Ø  காம நாவல்களை
தீயிலிடுங்கள்!
எழுத்தில் காமன் வராமலிருக்க
வேலியிடுங்கள்!
Ø  பெண்களை மட்டும் “விபச்சாரி” என்று விலங்கிடும்
பாரபட்சத்தை விலக்கிடுங்கள் !
விபச்சார குற்றமிழைக்கும் 
ஆண்களுக்கும் விலங்கிடுங்கள் !

Ø  ஆசைகளுக்கு
அணை போடுங்கள்!
அது இயலாவிடில்
இல்லற வாழ்விற்கு துணை தேடுங்கள் !
Ø  மன இச்சைப்படி
வாழ்வதை விடுங்கள் !
மனசாட்சிப்படியே
எப்பொழுதும் நடங்கள் !
v   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாய்த்தமிழே

எங்களுக்கு சொந்தமானது

பயங்கரவாதம் - சிலுவை முதல் துப்பாக்கி வரை !