நம்பிக்கைதான் வலிமை.!      



திருச்சி A .முஹம்மது அபூதாஹிர்
தோஹாகத்தர்
thahiruae@gmail.com


                                                                         
இங்கு கம்பெனியில் நுழைவுச்சீட்டு
சான்றிதழ் படிப்புதான்..,எனினும்
சான்று பகர்வது
உன்னை சிறந்தவன் என்று
உன் கடின உழைப்புதான்...!

நம்பிக்கைதான் வலிமை
நம் கைகள் அதனை வழிமொழிகிறது!

போராட்டங்கள் மட்டும்
நடக்காதிருந்திருந்தால்
நாடுகள் இன்னும் அடிமைத்தனத்திலேயே இருந்திருக்கும்!

ஆராய்ச்சிகள் மட்டும்
செய்யாதிருந்திருந்தால்
உலகம் இன்றும் இருளிலேயே இருந்திருக்கும்!


முயற்சி மட்டும் செய்யாதிருந்திருந்தால்
முழு உலகமும்
முட்காடுகளாகவே நிறைந்திருக்கும் !

கஷ்டங்கள்
வாழ்வின் கெட்ட காலமல்ல!

பத்து மாத கஷ்டம்தான்
ஒரு பெண்ணை அன்னையாக்குகிறது !

முட்களுக்கு நடுவே தான்
ரோஜாக்கள் பூத்து வந்திருக்கின்றன

வாட்களுக்கு நடுவேதான்
ராஜாக்கள் ஆட்சியை காத்து வந்திருக்கின்றனர்!
 
நம் விடியல்கள் நம்பிக்கையோடு இருக்கட்டும்!
பொழுது புலரும் முன்
நம் கைகள் பணியை செய்து முடித்திருக்கட்டும்!

                                                          (இது கம்பெனி மாத சஞ்சிகைக்காக எழுதப்பட்டது)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாய்த்தமிழே

எங்களுக்கு சொந்தமானது

பயங்கரவாதம் - சிலுவை முதல் துப்பாக்கி வரை !