கோடையும் வாடையும் !
திருச்சி . A.முஹம்மது அபூதாஹிர்
தோஹா - கத்தார்
thahiruae@gmail.com
Ø கொளுத்துகின்ற
கோடை வெயில்
கொடுமையானது !
அதைவிடை வரதட்சணையால்
பலபெண்கள்
உயிரோடு
கொளுத்தப்பட்டது
மிக கொடுமையானது!
Ø வசந்த காலத்தின்
தென்றலைப் பார்க்க
ஆசைப்பட்டவர்கள்
வரதட்சணை தீயின்
வாடைக் காற்றில்
வாடி வருகிறார்கள் !
Ø மே,ஜூன்,ஜூலை
வாடைக் காற்றால்
உடலெல்லாம் வியர்த்து
விட்டது !
வரதட்சணையின் தீ
ஜுவாலை
எமது சகோதரிகள்
பலரின் உயிரை
கரித்து விட்டது !
Ø எத்தனை டிகிரி
வெயிலடித்தாலும்
குறைவானது !
படித்த டிகிரிக்கு
வரதட்சணை
வாங்குவதுதான்
மிகவும் மோசமானது !
Ø கோடையின்
கத்திரி வெயிலடித்தது
வீட்டில் இருக்க முடிய வில்லை !
எங்கள் புத்திரிக்கு
திருமணம் நடந்தது
வீட்டை விற்காமல்
இருக்க முடிய வில்லை !
Ø அறுபது டிகிரி வெயிலடித்தால்
குளிர் பானம்
குடிக்கலாம் !
அறுபது பவுன்
வரதட்சணை கொடுத்தால்
அவ்வளவு பணத்துக்கு எங்கே
போவது ?
Ø பாரன்ஹீட்டை விட
படு வேகமாக உயர்கிறது
பவுன் ரேட்!
வெயில் கூட
இறங்குகிறது
ஜீரோ டிகிரி
செல்சியசுக்கு!
பவுன் விலையோ
எகுறுகிறது
ஏழைகள் தொட முடியாத தூரத்திற்கு!
Ø கோடையில்
குளிர்ச்சிக்கு
ஊட்டிக்கு
போகிறார்கள் !
வரதட்சணை கொடுமையால்
வீட்டையே விற்றவர்கள்
எங்கே போவார்கள்?
Ø மகனுக்கு நிலாவைக் காட்டும்
அன்பான அம்மாக்கள்
மாமியாராகும் போது
மருமகளுக்கு
சூரியனாகி விடுகிறார்கள் !
தாய் பேச்சை
கேட்காத பிள்ளைகளும்
வரதட்சணை என வரும்போது
வாய் மூடி
விடுகிறார்கள்!
Ø பாலைவனத்தில்
நீர் அங்கே
இருப்பது போல்
தெரிகிறது
ஆனால் அங்கே
இருப்பது கானல் நீர் !
கலயாணத்தில்
இங்கே பெண்ணை
பெற்றவர்கள்
சிரிப்பது போல்
தெரிகிறது
அவர்களுக்குள்
மறைந்திருப்பது கண்ணீர் !
Ø கோடை மழை இன்று வரும்
வானிலை அறிக்கையால்
உள்ளம் குளிர்ந்தது !
“கொடுமையான வரதட்சணை,
இந்நிலை என்று மாறும் ?”
உள்ளம் கொதிக்கிறது !
Ø கோடையின் வாடை காற்று !
காய்ந்து போகும் இலை!
தலை வலி, மயக்கம்
என்ற நிலை !
அவை கொடியதல்ல
வரதட்சணையை விட !
பெண் சிசுக்கொலை!
இளம் பெண்களின்
தற்கொலை!
மாமியார்கள் செய்யும்
ஸ்டவ் படுகொலை
இவைதான் கொடியது
கோடையை விட !
Ø கொதிக்கும் கோடையின்
அக்கினியின் கொடுமையை
குளிர்பானம் குடித்து
தடுத்து விடலாம் !
கொதித்தெழு சகோதரா !
இந்த அக்கிரமத்தை
எதிர்த்து!
நீ மனம் வைத்தால் வைத்தால்
நிச்சயம் தடுத்து விடலாம் !
ஜில்லுனு ஒரு
கல்யாணம் எப்போது ?
(வரதட்சனை கொடுமை கோடை வெயிலுடன் ஓர் ஒப்பீடு
.இது துபையில் “கோடையும் வாடையும்” என்ற
தலைப்பில் வெளியிடப்பட்ட ஒரு தமிழ் சங்க மலருக்காக எழுதப்பட்டது. )
கருத்துகள்
கருத்துரையிடுக