தாய்த்தமிழே
பேராசிரியர் . அ முஹம்மது அபூதாஹிர்
தமிழே
நீ எங்களுக்கு தாயானவள்!
நான்
உனக்கு சேயானவள்!
நீ இங்குப் பிறந்தவள் !
சிவகங்கைச்சீமையின் திருமகள்!
திரவியம் தேடி இடம் பெயர்ந்தாய்
இப்போது சிங்கப்பூரின் மருமகள்!
நீ பெரும்பாலான மொழிகளுக்கு
நீதான் பாட்டி !
திராவிட மொழிகள் எல்லாம்
உனது பேத்திகள்தான் !
நீ தோன்றியதில் பார்த்தால்
நீதான் மூத்தவள் !
தோற்றத்தில் பார்த்தால்
இன்றும் நீ இளையவள்தான் !
எழுத்துக்கள் எல்லாம்
உன் கழுத்துக்கள் ஆகும் !
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்”
உன் கருத்துக்கள் ஆகும் !
மெல்லினமும் வல்லினமும்
உன் அங்கங்களாகும் !
மேதினியில் பூம்புகாரும் மதுரையும்
நீ வாழ்ந்த சங்கங்களாகும் !
கீழடியில் தோண்டிப்பார்த்தால்
நீதான் அகிலத்தில் மூத்தக்குடி !
திருக்குறள் அடிகளை ஊன்றிப்படித்தால்
நீதான் அறிவில் முதற்படி !
நவீன காலத்தில் காலத்தில்
பாரதியாரால்
ரொம்ப ஞானமிக்கவளானாய் !
பாரதிதாசனால்
நிரம்ப மானமிக்கவளானாய்!
அவ்வை
உன்னை படித்த அறிவு மகள் !
கண்ணகி
அதிகாரத்தையே எதிர்த்து நின்ற உன் மகள்!
புறநானூறால்
நீ வீரத்தில் பீரங்கியானாய் !
அகநாநூறால்
காதல் கணைகளில்
நீ கவிதை பூங்காவானாய்!
நீதான்
கருப்பையில் நான் கேட்ட மொழி !
கற்பை ,ஒழுக்கத்தை
எனக்கு காட்டிய மொழி !
வாய் வழியாக
வாழையடி வாழையாக
பல்லாயிரமாண்டு வாழ்பவளே
என் தாய் வழியாக
உன்னை சுவாசித்து பத்தாண்டுகளுக்கு மேல்
நான் வாழ்கிறேன்!
உன்னை வாசித்து
உன்னில் யோசித்து
உன் அறிவில் யாசித்து
வருமாண்டுகளில்
நானும் வாழ்வேன் !
கருத்துகள்
கருத்துரையிடுக