டிசம்பர் -18 சர்வதேச அரபி தினம்
அ .முஹம்மது அபூதாஹிர்
அரபி உதவிப் பேராசிரியர்
ஜமால் முஹம்மது கல்லூரி
இன்று
டிசம்பர் பதினெட்டு,
சர்வதேச அரபி தினம்!
பலஸ்தீன் சிரியா என,
அரபு மக்களின் கதறல் மொழிகளை கேட்காத,
ஐ நா சபை ஓர் கல் மனம்!
அரபுக்களுக்கு,
அது ஒப்புக் கொண்ட ஒன்றே ஒன்று,
அதுதான் சர்வ தேச அரபு தினம்!
அரபி,
வெள்ளை மாளிகை
முதல்,
நம்மூர் மளிகை வரை பேசப்படும் மொழி !
ஸ்வீட் கடையில்
ஹல்வா,
தேனீர் கடையில்
காபி,
தினத்தந்தியில்
சிந்துபாத்,
பதிப்பகத்தில்
அசல்,
ஜெராக்ஸ் கடையில்
நகல்,
வங்கியில்
கடன் பாக்கி,
கோர்ட்டில்
மனு தாக்கீது,
மளிகை கடையில்
சர்க்கரை ,
இன்ஷா அல்லாஹ்
அல்லாஹ் நாடினால் நடக்கும் என்றார்,
அமெரிக்காவின் புதிய அதிபர்
ஜோ பிடன்!
அல்லாஹ்
அவன் ரஹ்மான் ரஹீம்
என்றார்,
நமது நாட்டு பிரதமர் நரேந்திர மோடி!
அலி பாபாவும் நாற்பது திருடர்களும்,
அரபு படத்தின்
தமிழில் கதாநாயகர் எம் ஜி
ஆர்!
அலாவுதீனும் அற்புத விளக்கும் ,
அரபு கதையின்
தமிழில் உலக நாயகன் கமலஹாசன்
!
கதம் கதம் அரபியில் பேசிய
பாபா!
ஊழலை கதம் கதம் ஆக்க
கட்சி ஆரம்பிக்க போகிறாராம்!
அநியாயமாய் சுங்க வசூல் நடக்கிறது
டோல்கேட்டில்
பயணிகள் கதறல்!
நியாயமாய் மகசூலுக்கு இனி விலை கிடைக்காது
விவசாயிகள்
அரசின் புதிய வேளாண் ஷரத்தால் குமுறல்!
தாசில்தார் முன்சீப்
வக்கீல்
தமிழ்நாட்டில் அதிகாரிகள்
அரபு மொழியில் அழைக்கப் படுகிறார்கள்!
சட்டம் அமலுக்கு வந்தது
என
அரபியில்தான் அறிவிப்பு செயகிறார்கள்!
வாக்காளர் முகாமில்
பெயர் சரி பார்ப்பு !
எங்களின் பெயர்
அதில் விடப்பட்டுள்ளது
என்கிறது ஒரு தரப்பு!
தமிழ் மொழியில்
அரபி வார்த்தைகள்
அன்றாடம் வரும்!
எண்ணிப் பார்த்தால்
அமுத சுரபியாய்
தமிழில் அதிகம் வரும்!
(குறிப்பு : ஹல்வா, காபி, அசல், நகல், பாக்கி, தாக்கீது, சர்க்கரை, இன்ஷா
அல்லாஹ் ,அல்லாஹ், ரஹ்மான், ரஹீம், கதம் கதம் ,பாபா, வசூல், மகசூல்,
ஷரத்து, தாசில்தார், முன்சீப், வக்கீல், அமல், முகாம், தரப்பு ஆகியன தமிழில் வழக்கில்
உள்ள அரபி மொழி வார்த்தைகளாகும்)
கருத்துகள்
கருத்துரையிடுக