தகைசால் தமிழர் முனீருல் மில்லத்
|
பேராசிரியர்அ .முஹம்மதுஅபூதாஹிர்,திருச்சி |
|
|
ஆண்டு ஆயிரத்துதொள்ளாயிரத்துநாற்பது, அப்போது அண்டிப்பிழைக்கவந்தவர்கள், நாட்டைஆண்டுக்கொண்டிருந்தார்கள்! ஆங்கிலேயரின்கொடுமைகளால், ஆயிரக்கணக்கான மண்ணின்மைந்தர்கள் மாண்டுக்கொண்டிருந்தார்கள்!
அப்போது காயிதேமில்லத் தாய்த்திருநாட்டின்விடுதலைக்கு உரிமைக்குரல்கொடுத்துக்கொண்டிருந்தார்!
சிராஜுல்மில்லத் தந்தைக்குதிருமறைமொழிபெயர்ப்பில் உதவிக்கொண்டிருந்தார்!
முனீருல்மில்லத் பேராசிரியர் காதர்மொஹிதீன் முஹம்மது ஹனீப், காசிம்பீபி மகனாய் உலகில்தோன்றியிருந்தார்!
புதுக்கோட்டைதிருநல்லூர் அவர்பிறந்தஊராகும்! அவரின்வருகையால் மலைக்கோட்டைதிருச்சிநகர் அடைந்ததுபெரும்பேறாகும்!
சென்னைப்பல்கலைக்கழகம் வரலாற்றுப்பாடத்தில் அவர்பெற்றதங்கப்பதக்கத்தால் பெருமையடைந்தது.
தன்னைவருமாறுஅழைத்த ஜமால்முஹம்மதுகல்லூரி அழைப்பைஏற்றார் மாணவர்சமூகம்மகிமைஅடைந்தது!
சிலரின்உளறலானது பாடத்தில்வரலாறானது! இவரால்தான்உண்மையானவரலாறானது ஊரறியலானது!
|
வரலாற்றில் வகுப்புவாதத்தைபோதித்து மக்களைபிரிக்கிறார்கள் வகுப்பில் உண்மைவரலாற்றைபோதித்து மக்களைஒன்றுசேர்த்தவர்!
பால்யவயதிலேயே காயிதேமில்லத்தை அவர்படித்தார்! பதினாறுவயதினிலே முஸ்லிம்லீக்கை கரம்பிடித்தார் !
பதினைந்துஆண்டுகால சரித்திரபேராசிரியர்அவர் சமூகம்எனும்சமுத்திரத்தில் சங்கமமானார்!. முஸ்லிம்லீக்கில் அங்கமானார்!
தலைவரானப்பின்பும்கூட தன்கைகளையே தலையணையாய்வைத்து தரையில்எளிமையாய்படுத்தார்!
சாக்கடைஎனப்பட்ட அரசியல்பாதையில் பொன்மனம்கமழும் பூக்கடைவிரித்தார்!
வேட்டியினிலும்,கட்டும்வீட்டினிலும் முழுநாட்டினிலும் அரசியல்வாதிகளுக்குஊழல் அடையாளம்ஆகிவிட்டது! கறைபடியாதது இவரதுகைலிமட்டுமல்ல இவரதுஇருகைகளும்தான் ஆனால்இவரும்அரசியல்வாதிதான்!
அரசியலுக்கு சாணக்கியன்தான்தகுதி என்பதைதகர்த்தார்! சாமான்யனும் அரசியல்வர புதுவிதிவகுத்தார்!
|
|
நீடாமங்கலம்முதல் நியூயார்க்வரை அவர்நிறையமுழங்கிஇருக்கிறார்! ஐக்கியஜமாஅத்சபைகள்முதல் ஐநாசபைவரை ஆலோசனைகளைவழங்கிஇருக்கிறார்!
ஆறுவித்தியாசங்கள்தேடும் தலைவர்களுக்குமத்தியில், ஒருவித்தியாசமும்பார்க்காதவர்! பிறரிடம்நூறுவித்தியாசம்இருந்தாலும் ஒத்தகருத்தைஒன்றையாவதுதேடிஎடுத்து மத்தகருத்தைவிட்டுவிடுவார்!
அப்பாவிஇளைஞர்களைதூண்டிவிட்டு சிறைகேணியில்தள்ளிவிட்ட தலைவர்களேஅதிகம்! அவர்களைவிடுவித்து உயர்வுஏணியில்தூக்கிவிட்ட உத்தமர்அவர்!
“ரப்புக்கும்வாஹித்உம்மத்தன்வாஹிதா” திருகுர்ஆன்வசனத்தையும்” “ஒன்றேகுலம்ஒருவனேதேவன்” திருமூலர்மந்திரத்தையும் ஒப்பிட்டுசமரசத்தில்நின்றவர்!
அரபகத்தில்இருந்துதமிழகத்திற்கு வந்தமார்க்கமல்லஇஸ்லாம், அதுதமிழகத்தின்சொந்தமார்க்கம்என, சரித்திரஏட்டின்படிநின்று சரியாகசொன்னவர்!
வேலூர்தொகுதி நாடாளுமன்றஉறுப்பினராகஇருந்து எல்லாபகுதிமக்களுக்காகவும்பேசியுள்ளார்! முஸ்லிம்லீக்தலைவராகஇருந்து இந்து மக்களுக்காகவும் குரல்கொடுத்திருக்கிறார் !
அவர்சார்மினார்அளவுஉயரம், மாநிலதலைவராய்இருந்தபோதும், தன்னைசார்ந்திருப்பவரையும் சமமாககருதினார்! இப்போதுஅவர்தேசியதலைவர் குதுப்மினார்அளவிற்குஉயர்ந்திருந்தாலும் குடிசையின்அருகிலும் நெருங்கிவருவார்!
|
இசையும், வசையும் அவருக்குஒன்றுதான் அதைஅவர்பெரிதுபடுத்தியதுஇல்லை! தன்னைஎதிர்ப்போரை அவர்சிறிதுபடுத்தியதும்இல்லை! இவரைபடிக்காதவரிடமும் ஏன்பிடிக்காதவரிடமும்கூட, புண்படுத்தாதவார்த்தைகளில் புன்னகையில், அவர்மனதைதொட்டுவிடுவார்! மற்றவர்கள்இவரை புண்படுத்தும்பேசினாலும் மன்னித்துவிட்டுவிடுவார்
காயிதே மில்லத் உருவில் அவர் இருக்கிறார்! காயிதே மில்லத் தெருவில் அவர் வசிக்கிறார்!
அவர்தகைசால்தமிழர்என்றால் அதுமிகையானதுஅல்ல பாரதரத்னாவிருதேதரப்பட்டாலும் அவருக்குஅதுவியப்பானதுஅல்ல
அவர்உரையாற்றியதெல்லாம் மணிவரி! மணிச்சுடரில் அவர் உரைநடைமுழுவதும் பொன்வரி!
முஸ்லிம்சமூகத்தின் முகவரி முஸ்லிம்லீக்கின் முதல்வரி முனீருல்மில்லத் பேராசிரியர்காதர்மொஹிதீன்
|
கருத்துகள்
கருத்துரையிடுக