விடாமுயற்சி

 பேராசிரியர் அ. முஹம்மது அபூதாஹிர்      

றுதியான நம்பிக்கை!

உடன்பட்டு உழைக்கும் கை!

கரடு முரடான பாதைகள்!

காயங்களோடு நகரும்  பாதங்கள்!

ரு நூற்றாண்டுக்கும்  மேல்,

இடைவிடாத போராட்டம்

நமக்கு கிடைத்தது  சுதந்திரம்!

பல நூறு ஆண்டுகள்

தொடர்ந்த ஆயுவுகளால்

பிறந்தது  நவீன இயந்திரம்!

 

காதில் விழும்

வசை சொற்கள் !

காலில் விழும்

கடுங்கற்கள் !

 

மக்கு முயற்சி,

மூச்சுக்காற்று!

விடாமுயற்சி

வாழ்வின் சுழற்சி!

 

டக்கையில்  கீழே விழுந்து விழுந்து,

உடலெல்லாம் ரணம்!

இலக்கை கடக்காமல்  விடுவதில்லை,

ஆம்! இடைவிடாத பயணம்!

 

விடாமுயற்சி

நிச்சயம் இலக்கை

தொடாது போகாது!

உழைப்பும் உறுதிப்பாடும்

எப்போதும் வீணாய் ஆகாது!

 

ள்ளிரவில்

உறங்கும் விண்மீன்கள்!

நாளை என்ன செய்வதென,

விழித்திருக்கும் கண்கள்!

 

திர்ஷ்டமும்,

அதிசயமும் ,

நம் அகராதியில் கிடையாது!

அயராமல்

அமராமல் உழைத்தால்,

தோல்வி நம்மை அடையாது!

 

வரெஸ்ட் சிகரத்தை விட

உயரத்தில்  பாய்ச்சல்!

பசிபிக் கடலின்  

ஆழத்தில் நீச்சல்!

 

டி! படி!

தொடர்ந்து படி!

முயற்சியால்   கிடைக்கும்

வாழ்வில் உயர்ந்தப்  படி!

 

 

 

 

 

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாய்த்தமிழே

எங்களுக்கு சொந்தமானது

பயங்கரவாதம் - சிலுவை முதல் துப்பாக்கி வரை !