உழைப்பே உயர்வு
இஸ்லாம் உழைப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கின்றது மதங்கள்
என்று சொல்லப்படுபவைகள் அனைத்தும் மனிதர்கள்
உழைப்பை விட்டும் ஒதுங்கி இருப்பதை போற்றுகின்றன. சம்பாதிப்பது என்பது அது உலக உலக
ஆசையை தூண்டுவது என்று அவை கருதுகின்றன இஸ்லாத்தின்
ஐந்து அடிப்படையான கடமைகளுக்கு அடுத்து ஆறாவது கடமை ஹலாலான முறையில் உழைத்து சம்பாதிப்பது என நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்
பரிசுத்த குர்ஆனில் அல்லாஹுத்தஆலா நீங்கள் தொழுகையை முடிந்து
விட்டால் உலகில் பரவிச்சென்று அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள் என்று கூறுகின்றான் மனிதன்
உழைப்பதை பொருள்
தேடுவதை அல்லாஹ்வின் அருள் தேடுவது என்று குர்ஆன்
குறிப்பிடுகின்றது பொருள் வேறு அருள் வேறு என்று உலகில் வேறுபடுத்திப் பார்க்கக் கூடிய
மார்க்கங்களுக்கிடையில் மனிதன் நேரான வழியில் பொருளீட்டுவதை அருளீட்டுவது என
அருமையாக உரைக்கும் மார்க்கம் இஸ்லாம்.
இஸ்லாம் அல்லாத வேற்று சமூகங்களும் உழைப்பை மெச்சுகின்றன
திருக்குறளில் இப்படி ஒரு குறள் வந்துள்ளது
தெள்நீர்
அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கு இனியது
இல்
அதன் பொருள்
இதுதான்
“தன் உழைப்பினால்
சம்பாதித்துத் தான் சமைத்த கூழ், தெளிந்த நீர்
போல இருப்பினும் தன்
உழைப்பினால் கிடைத்த அந்த உணவை
உண்ணுவதைவிட இனிமையானது
வேறு ஒன்றுமில்லை”.
கவிஞர் சுரதா கூறுகிறார் “ உழைப்பே இன்றி
உலகில் வாழ்ப்வன் . கரும்பில் தோன்றும் வெறும்பூப் போன்றவன்”
கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் கடவுள் நம்பிக்கை ஆகியவற்றின் மூலம்
நீங்கள் வாழ முடியும் என்கிறார் பென் கார்சன்
கவிஞர் தேசிய
வினாயகம்பிள்ளை சொல்கிறார்
கைத்தொழில் ஒன்றை
கற்றுக் கொள்
கவலை உனக்கில்லை
ஒத்துக் கொள்
எத்தொழில் எதுவும் தெரியாமல்
இருந்திடல்
உனக்கே சரியாமோ? என்று
இஸ்லாம் உழைப்பை மெச்ச மட்டுமல்ல்ல அதனை உச்சத்திற்கே கொண்டு செல்கிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் கையால் உழைத்து உண்பதை
விட சிறந்த உணவு எதுவுமில்லை என்று குறிப்பிட்டார்கள் மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் ஆடுகளை மேய்த்து இருக்கின்றார்கள் அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுடைய வியாபார நிறுவனத்தில் பணியாற்றி இருக்கின்றார்கள்
அனைத்து நபிமார்களும் உழைத்து உண்பவர்களாகவே இருந்திருக்கிறார்கள்
என்று வரலாறு பதிவு செய்திருக்கின்றது. ஆடு மேய்க்க கூடியவர்களாகவும், விவசாயம் செய்யக்கூடியவர்களாகவும் மற்றும் பணியாற்ற
கூடியவர்களாகவும் துணி வியாபாரம் செய்ய கூடியவர்களாகவும் இருந்திருக்கின்றார்கள் அரசராக
இருந்த தாவூத் அலைஹிஸ்ஸலாம் தன் கைகளால் உழைத்து உண்ணக்கூடியவராக இருந்தார் என்று நபியவர்கள்
குறிப்பிட்டுள்ளார்கள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு இளைஞர் வந்து உதவி
கேட்ட போது அவரிடம் ஒரு கோடரி ஒன்றைக் கொடுத்து அதனால் உழைத்து சம்பாதித்து உண்ணுமாறு
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பணித்தார்கள்
உழைப்பு என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் கண்ணோட்டத்தில் மிகுந்த
வரவேற்பு உரியதாகவும் கண்ணியத்திற்குரியதாகவும் சிறப்புக்குரியதாகவும் பார்க்கப்படுகின்றது
ஹஜ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் துணி வியாபாரம் செய்யக்கூடியவராக இருந்திருக்கிறார்கள் அவர்கள் கலீபாவாக பதவி ஏற்ற
பின்னர் தம்முடைய வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வியாபாரத்திற்காக துணிகளை
எடுத்துக் கொண்டு சென்ற போது மற்ற சஹாபாக்கள் அவரை தடுத்து நீங்கள் இனி மக்களுடைய பிரச்சனைகளை
நோக்க வேண்டி இருக்கிறது நிர்வாகம் செய்ய வேண்டியிருக்கிறது எனவே நீங்கள் ஒரு குறிப்பிட்ட
ஒரு தொகையை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள் அது
உங்களுடைய குடும்பத்திற்கு உதவும் என்று குறிப்பிட்டதாக நாம் வரலாற்றில் பார்க்கின்றோம்
மேலும் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மிகுந்த
அறிவாளியாக இருக்கின்றார்கள். மிகப்பெரும் வீரராக இருந்திருக்கிறார்கள் அதே நேரத்தில்
அவர்கள் குடும்பத்திற்காக கூலி வேலை செய்து அவர்கள் சம்பாத்தியத்தை தந்திருக்கின்றார்கள்
எந்த அளவுக்கு என்றால் ஒரு யூதனிடம் சென்று அவர்கள் பணி செய்து இருக்கிறார்கள் ஒரு
மிகப்பெரிய அல்லாஹ்வுடைய தூதருடைய மருமகனாக இருக்கக்கூடியவர்கள் மிகப்பெரும் ஒரு அறிவாளியாக
இருக்கக்கூடியவர்கள் சமூகத்தில் மிக முக்கியமான அந்தஸ்த்தில் இருக்கக்கூடியவர்கள் அதே நேரத்தில் அவர்களுடைய வாழ்க்கை
தேவைகளை அவர்கள் உழைத்து தான் பூர்த்தி செய்து செய்துள்ளார்கள் பாருங்கள்!
இஸ்லாமிய சட்ட உலகின் மிகச்சிறந்த அறிஞராகத் திகழ்ந்த இமாம் அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி
அலைஹி அவர்கள் அவர்கள் துணி வியாபாரம் செய்திருக்கின்றார்கள் அதன் மூலம் தான் தங்கள்
வாழ்க்கையினுடைய தேவைகளை பூர்த்தி செய்து இருக்கிறார் என்பதையும் நாம் அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும்
வயதுக்கு வந்த ஒவ்வொருவர் மீதும் தொழுகை எப்படி
கடமையோ அதேபோன்று வயதிற்கு வந்த இளைஞர்கள் மீது அதாவது புத்தி சுவாதீனமுள்ள திடகாத்திரமான
வாலிபர்கள் ஒவ்வொருவரும் கட்டாயமாக உழைத்தே தம் தங்கள் வாழ்க்கையின் தேவைகளை பூர்த்தி
செய்ய வேண்டும்.
மற்றவர்களுடைய பொருட்களில் மற்றவர்களுடைய சம்பாத்தியங்களில் உழைப்பில் சாப்பிடுவது என்பது அவர்களுக்கே உரிமை என்று குறிப்பிட்டாலும்
கூட அது அவர் கொடுப்பவர்களுக்கு அவனுடைய கடமைகள் முடிந்த பிறகு இவர்களுக்கு
கொடுப்பது அது தர்மமாகவே கருதப்படுகிறது தவிர
அது அவர்களுக்காக யார் செலவழிக்கின்றார்களோ அவர்களுக்கு இவர்கள் மீது கடமை என்பது இல்லை
இன்று இளைஞர்கள் சம்பாதிப்பது என்று வரும்போது கௌரவமான பணி என்று
காத்திருந்து காலங்களை வீணாக்குகிறார்கள் இன்னும் சிலர் தங்களுடைய பெற்றோர்கள் தங்களுடைய
மூதாதைகள் சேர்த்த சொத்திலே உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு காலத்தை தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.
நிச்சயமாக அல்லாஹுத்தஆலா அதைப்பற்றி அவர்களிடம் கேள்வி கேட்பான்
அதற்கு அவர்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும் இந்த உலகத்தில் விதவைகளும் அனாதைகளும்
மற்றவர்களால் கைவிடப்பட்ட வயதானவர்கள் கூட
தெருவோரங்களில் காய்கறிகளை விற்றுக்கொண்டு இன்னும் சிலர் தெருக்களில் நடந்து சென்று
தெருத்தெருவாக சென்று கூவி கூவி அவர்கள் வியாபாரம் செய்து கொண்டு இருப்பதை நாம் காண்கின்றோம்
சிலர் சொற்ப பணத்திற்காக மிக நீண்ட நேரம் உழைத்து கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி உழைக்கக்கூடிய
இருக்கின்றார்கள். இவர்கள் நன்றாக படித்து சும்மா இருக்கக் கூடியவர்களை விடவும் அல்லாஹ்வுடைய
பார்வையில் மிகவும் சிறந்தவர்களாக இருக்கிறார்கள் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கின்றார்கள். எனவே நாம் எப்பொழுதுமே
உழைக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும் உழைப்பு என்பது நம்முடைய ரத்தத்திலே ஊறிய உணர்வாக இருக்க வேண்டும். ஏனென்றால் நம்முடைய
உணவு ஹலாலாக இருக்க வேண்டும் ஏனென்றால் மார்க்கத்திலே
அது ஹலாலான உணவாகவும் கருதப்படுகின்றது
உழைப்பு என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் படி ஹலாலான முறையில் நேர்மையான முறையில் உழைப்பதையே குறிக்கின்றது
உழைப்பு என்பதிலே வியாபாரமும் அடங்கும் மேலும் அலுவலக பணிகளும் அடங்கும் உழைக்கக்கூடிய
நேரத்திலே அதிலே நாம் எந்தவிதமான குறைவும் செய்யாமல் இருக்க வேண்டும் எப்படி நாம் அதற்காக
நாம் நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தில் ஒரு ரூபாய் குறைவது கூட விரும்ப மாட்டோமோ அதே போன்று கொடுக்கப்பட்ட நேரத்திலே நாம் ஒரு நிமிடத்தை கூட
வீணாக்காமல் நாம் நமக்கு ஊதியம் கொடுப்பவர்களுக்கு நேர்மையான முறையில் சம்பாதித்துக்
கொடுக்க வேண்டும் அலுவலகத்தில் வேலை செய்யக்கூடியவர்கள் அந்த நேரங்களில் நாம் சார்ட்டிங்
செய்வது வீணாக பேசுவது உறங்குவது இவை எல்லாம் நம்முடைய உழைப்பிலுள்ள ஹலாலை குறைக்க
கூடியதாக இருக்கின்றது மேலும் வியாபாரத்து பணியில் உதவி செய்யக் கூடியவர்கள் அல்லது
வியாபாரம் செய்யக் கூடியவர்கள் அது உழைப்பாக இருப்பதால் அதிலும் மக்களை ஏமாற்றாமல்
நாம் பணியாற்ற வேண்டியது இருக்கின்றது. அப்பொழுதுதான் அந்த உழைப்பு ஹலாலானதாக இருக்கும்
ஹலாலான உழைப்பின் மூலம் பெறக்கூடிய சம்பாத்தியம் நம்முடைய வாழ்க்கையில் பிரதிபலிக்கக்
கூடியதாக இருக்கின்றது. ஹலாலானதாக இருந்தாலும் ஹராமானதாக இருந்தாலும் நாம் எதை ஈட்டினோமோ
அதனுடைய பிரதிபலிப்பு நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் ஹலாலான சம்பாத்தியம் மூலம் நம்முடைய பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும்
நம்முடைய சந்ததிகளுக்கு அது மிகச்சிறந்த வாழ்க்கையை
கொடுக்கும் அல்லாஹ்விடமும் நம்முடைய கேள்வி கணக்கு இலகுவாக இருக்கும். அல்லாஹ்விடம்
அதற்கு நன்மை கிடைக்கும், மேலும் ஹலாலான முறையில்
உழைப்பதன் மூலம் நாம் நம்முடைய வாழ்க்கையில் நம் வாழ்க்கையின் பரக்கத் உடையவர்களாக
பாக்கியம் உடையவர்களாக ஆகின்றோம்
யா அல்லாஹ் கஞ்சத்தனத்தை விட்டும் கோழைத்தனத்தை விட்டும் சோம்பேறி
தனத்தை விட்டும் மற்ற மனிதர்கள் மிகைப்பதை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக என்று பிரார்த்தனை
செய்யுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள் இந்தப் பிரார்த்தனை
நம்முடைய வாழ்க்கையிலே மிகவும் முக்கியமானதாகும்.நபியவர்கள் பாதுகாப்பு தேடிய
மேற்கண்ட அனைத்தும் உழைப்பிற்கு எதிரான விஷயங்கள் ஆகும்.
உமர் ரலியல்லாஹு அன்ஹு காலத்தில் பள்ளிவாசளில் தங்கி ஒருவர்
எப்போதும் தொழுதுக் கொண்டே இருப்பதாகவும்
அவருடைய சகோதரர் அவருக்காகவும் சேர்த்து
போருளீட்டுவதாகவும் சொல்லப் பட்டது. உமர் அவர்கள் உழைக்கும் அவரின் சகோதரர்
அவரை விட சிறந்தவர் என்றார்கள்.மற்றொரு அறிவிப்பில் ஒருவர் எப்போதும் பள்ளியில்
தங்கி தொழுதுக் கொண்டே இருக்கிறார் என்று சொல்லப் பட்ட போது வானம் தங்கமும் வெள்ளியையும்
கொட்டிக் கொண்டு இருக்காது என்றும் அவருக்கு கசையடி கொடுக்குமாறும் கடமையான தொழுகை
நேரம் தவிர மற்ற நேரங்களில் உழைத்த பாடுபடுமாறு கட்டளையிட்டார்கள்.
கால்களும் கைகளும் அசையும் வரை நாம் உழைப்போம். இவ்வுலகில்
நாள்கள் நமக்கு இருக்கும் வரை பொருளீட்டுவோம்.
ஹலாலான முறையில் உழைத்து
நம் குடும்பத்திற்கு செலவழித்து
ஏழை, அநாதை மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு தர்மம் செய்வது எதிர்காலத்தில் நம்
பிள்ளைகளை யாரிடமும் கையேந்தாமல் விட்டு விட்டு இவ்வுலகை விட்டு விடை பெறுவோமாக
ஆமீன்.
கருத்துகள்
கருத்துரையிடுக