இசையும் கண்ணீரும்...!
காஷ்மீரில் மூன்று முஸ்லிம் பெண்கள் ‘ராக்’ எனும்
மேற்கத்திய இசைக்குழுவை நடத்திவருகிறார்களாம்.
இது கூடுமா என்ற கேள்வி எழுந்தபோது
முஃப்தி பஷீருத்தீன் எனும் மார்க்க அறிஞர்
‘கூடாது’ என்று சொல்லிவிட்டார்.
அவ்வளவுதான். பத்திக்கிச்சு நெருப்பு.
உடனே இஸ்லாம், முஸ்லிம், பத்வா என்று மார்க்கத்தின்
மீதான தாக்குதல் தொடங்கிவிட்டது.
இதுவா இன்றைய காஷ்மீர் பிரச்னை?
அங்கு ஒவ்வொரு நாளும் நடைபெறும்
அடக்குமுறைக்கும் அநீதிகளுக்கும் உயிரிழப்புகளுக்கும்
இன்னும் ஒரு தீர்வும் வந்தபாடில்லை.
இராணுவம் பிடித்துச் சென்ற தங்களின் மகன்கள்
உயிரோடு இருக்கிறார்களா இல்லையா
என்றே தெரியாத தாய்மார்களின் கண்ணீர் நின்றபாடில்லை.
வீட்டிலுள்ள ஆண்களை வெளியேற்றிவிட்டு,
பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்தும்
அயோக்கியத்தனம் குறைந்தபாடில்லை.
இராணுவம் அளவுக்கு அதிகமாக அடர்த்தியாக இருக்கும்
எல்லாப் பகுதிகளிலும் பாலியல் வன்கொடுமைகள்
ஒரு பொழுதுபோக்கு செயல்போல் அரங்கேறுகின்றன.
இவர்களுக்கு ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம்தான்
பாதுகாப்பு அளிக்கிறது என்று நீதிபதி வர்மா கூறியிருக்கிறார்.
அதை ஆராய்ந்து தீர்வு காண வழியில்லை.
ஆனால் ராக் மியூசிக் பற்றி விவாதிப்பதுதான்
இன்றைய ஊடகங்களுக்குத் தலைபோகிற விஷயம்..!
என்ன கொடுமைங்க இது..!
-சிராஜுல் ஹஸன்
கருத்துகள்
கருத்துரையிடுக