மாற்றுக்கொலையாளிகள்
- திருச்சி ஏ எம் அப்துல் காதர் ஹசனி
-------------------------------------------------------------------------------
அரிவாளெடுத்து
வெட்டினால்தான்
கொலையா என்ன?
அநீத தீர்ப்பெழுத
நீதிமன்றத்தில்
சுத்தி எடுத்து
தட்டினாலும்
கொலைதான் !
நீதிமன்றத்தில்
சுத்தி எடுத்து
தட்டினாலும்
கொலைதான் !
துப்பாக்கியால்
சுட்டு
கொன்றால்தான்
கொலையா என்ன?
சுட்டு
கொன்றால்தான்
கொலையா என்ன?
அநியாயக்காரனுக்காக
சட்டத்தையே
விட்டு கொடுப்பதும்
கொலைதான் !
ஊழியம் புரிவதாய்
உரக்க பேசி
ஓட்டு வாங்கியதும்
ஊரையே மறந்து போன
அரசியல் வாதி
ஒரு மாற்றுக்கொலையாளி !
சட்டத்தையே
விட்டு கொடுப்பதும்
கொலைதான் !
ஊழியம் புரிவதாய்
உரக்க பேசி
ஓட்டு வாங்கியதும்
ஊரையே மறந்து போன
அரசியல் வாதி
ஒரு மாற்றுக்கொலையாளி !
கடமையை செய்ய
கையூட்டு
கேட்கும்
அலுவலனும்
ஒரு மாற்றுக்கொலையாளி !
கையூட்டு
கேட்கும்
அலுவலனும்
ஒரு மாற்றுக்கொலையாளி !
கலை என்ற பெயரில்
அசிங்கத்தையும்
ஆபாசத்தையும்
அரங்கேற்றம்
செய்யும்
யாராயினும்
மாற்றுக்கொலையாளி தான் !
அசிங்கத்தையும்
ஆபாசத்தையும்
அரங்கேற்றம்
செய்யும்
யாராயினும்
மாற்றுக்கொலையாளி தான் !
குடித்து
கெடுபவனும்
குடியால்
குடியை
கெடுப்பவனும்
தீர்க்கமான
மாற்றுக்கொலையாளி !
கெடுபவனும்
குடியால்
குடியை
கெடுப்பவனும்
தீர்க்கமான
மாற்றுக்கொலையாளி !
நடந்த ஒன்றை
நால்வகையாய் சித்தரித்து
முச்சந்தி சிரிக்க வைக்கும்
மூட ஊடகத்தவனும்
மாற்றுக்கொலையாளி தான் !
நால்வகையாய் சித்தரித்து
முச்சந்தி சிரிக்க வைக்கும்
மூட ஊடகத்தவனும்
மாற்றுக்கொலையாளி தான் !
மனிதக்கொலைகளின்
விலைகளை
நிர்ணயிப்பதே
மாற்றுக்கொலையாளிகள் தான் !
விலைகளை
நிர்ணயிப்பதே
மாற்றுக்கொலையாளிகள் தான் !
என்னை குத்தி
காட்டுவதுபோல்
இருக்கிறது என்று
நீ நினைத்தால்
தயவு செய்து
இது உனக்கு தான் !
திருந்திக்கொள் !
காட்டுவதுபோல்
இருக்கிறது என்று
நீ நினைத்தால்
தயவு செய்து
இது உனக்கு தான் !
திருந்திக்கொள் !
உனக்கில்லை
என்று
நீ நினைத்தால்
கண்டிப்பாக
நீ அவனில்லை !
என்று
நீ நினைத்தால்
கண்டிப்பாக
நீ அவனில்லை !
கருத்துகள்
கருத்துரையிடுக