மகளிர் மதுக்கடை !


- திருச்சி ஏ எம் அப்துல் காதர் ஹசனி
-------------------------------------------------------
டெல்லியில் 
மகளிர் மதுக்கடை !
தலைநகர்
குடிமகளுக்கு
கொடுத்த சுதந்திரம் !
தேசத்தை விட்டு
மேற்கு ஓநாய்கள்
ஓடிவிட்டாலும்
அதன் காலடிகள்
தேடி ஓடும்
கோழை ஆடுகளின்
எண்ணிக்கை
குறையவில்லை !
சமத்துவம்,
பெண்ணியம்
பேசிய காலம்
போய்விட்டது !
இது தனிஇட
ஒதுக்கீட்டின்
காலம் !
குழாயடிகளில்
தண்ணீர்
குடங்களோடு
சண்டை
போட்ட பெண்களை
குடி கடைகளில்
குவாட்டர்
பாட்டில்களுக்காக
அழைக்கிறார்கள் !
குடிமகன்கள்
போதையில்
கிடந்தால்
நாய்கள்
கடந்து போகும் !
குடிமகள்கள்
போதையில்
கிடந்தால்
நாய்கள்
இழுத்து போகும் !
பெண்ணியம்
பேசும்
கண்ணியவான்களே !
உங்கள் கோரிக்கை
நிறைவேற்றப்பட்டுவிட்ட து!
இனி
கற்பை அழிக்கும்
மருந்தை
காசுகொடுத்து
கண்ணியமாய்
வாங்கி கொள்ளட்டும்
கன்னியர்கள் !
சோறு குலைந்தாலே
ஏற்று கொள்ளாத
ஆண் சமூகம்
பெண்குடியால்
ஊரே குலையபோகிறதே
எப்படி சகிக்கப்போகிறது ?
ஆண்கள்
மட்டும் குடித்தால்
ஆணாதிக்கம் !
பெண்களும்
சேர்ந்து குடித்தால்
அது வல்லாதிக்கம் !
யாரும் போராடாதீர்கள் !
இந்தியா வல்லரசாக
போகிறது !

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாய்த்தமிழே

எங்களுக்கு சொந்தமானது

பயங்கரவாதம் - சிலுவை முதல் துப்பாக்கி வரை !