வேசிக்குக் கூட....


திருச்சி A .முஹம்மது அபூதாஹிர்                            


Ø  வேசிக்கு கூட
 பணம் கொடுத்துதான்
        அனுபவிக்க போகிறான்!
        ஆனால்  இந்த பாவி
        வாழ்வில் தன்னை நேசிக்க வருபவளிடம்
 வரதட்சணை கேட்டு யாசிக்கிறான்!


Ø  கந்து வட்டிக் காரன் கூட
தான் தந்தற்கு அதிகமாகத்தான்
காசு கேட்கிறான் !
கரும்பாய் தன்னை
தந்து விட்டவளிடமே 
இவன் காசு பறிக்கிறான்

Ø  நீ ஒன்றும்
        அவளுக்கு வாழ்க்கை கொடுக்கவில்லை!
        வாழ்க்கையை
 இருவரும் சமமாக பகிர்ந்து கொள்கிறீர்கள் !

Ø  உனக்கு
அவள் துணி துவைக்கிறாள் !
உனக்கு
அறுசுவை உணவு சமைக்கிறாள்!

Ø  முத்தம்
கொடுக்கிறாள் !
        முற்றும்
தம்மையே கொடுக்கிறாள்!

Ø  பிள்ளை
பெத்து கொடுக்கிறாள்!
ஆம்
தன்னையே செத்து கொடுக்கிறாள்!

Ø  கைக்கூலி
வாங்குபவர்கள்
 கருணை
இல்லாதவர்கள் !

Ø  காருனின் பேராசையின்
`       வாரிசுகள் !
 சொரணை இல்லாத அவர்கள்
        சொர்க்கம் செல்ல இயலாதவர்கள்!


Ø  கோடி பவுன்
 நகையாய் இருந்தாலும்
        ஒரு துளி நீர் குடிக்க  - அது
 தந்ததில்லை !
        அதை தேடி நாடி
        போன குடிகள்
அழியாமல் இருந்ததில்லை !

Ø  நகைகள் பீரோக்களுக்குள் 
இதுவரை
 வீடு விட்டு வீடு 
மாறி கொண்டே வருகிறது !
ஆனால் 
அதனால் ஏற்பட்ட 
பகைகள் மட்டும் 
இன்னும் வீடுகளுக்குள்
      எரிந்து கொண்டுதான் இருக்கிறது!
****************************************************************************************
Top of Form


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாய்த்தமிழே

எங்களுக்கு சொந்தமானது

பயங்கரவாதம் - சிலுவை முதல் துப்பாக்கி வரை !