பேராசிரியர் . அ முஹம்மது அபூதாஹிர் தமிழே நீ எங்களுக்கு தாயானவள்! நான் உனக்கு சேயானவள்! நீ இங்குப் பிறந்தவள் ! சிவகங்கைச்சீமையின் திருமகள்! திரவியம் தேடி இடம் பெயர்ந்தாய் இப்போது சிங்கப்பூரின் மருமகள்! நீ பெரும்பாலான மொழிகளுக்கு நீதான் பாட்டி ! திராவிட மொழிகள் எல்லாம் உனது பேத்திகள்தான் ! நீ தோன்றியதில் பார்த்தால் நீதான் மூத்தவள் ! தோற்றத்தில் பார்த்தால் இன்றும் நீ இளையவள்தான் ! எழுத்துக்கள் எல்லாம் உன் கழுத்துக்கள் ஆகும் ! “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” உன் கருத்துக்கள் ஆகும் ! மெல்லினமும் வல்லினமும் உன் அங்கங்களாகும் ! மேதினியில் பூம்புகாரும் மதுரையும் நீ வாழ்ந்த சங்கங்க...
பேராசிரியர் . அ முஹம்மது அபூதாஹிர் வரலாறு இல்லாத அவர்களிடம் அருங்காட்சியகம் இருக்கிறது. ஆச்சரியப்படுகிறீர்களா ? அதில் உள்ளவை பாக்தாத்துக்குச் சொந்தமானவை ! விஞ்ஞானிகளை கொடுமைப்படுத்திய அவர்களிடம் அறிவியல் ஆய்வுக்கூடம் உள்ளது. வியப்பாக இருக்கிறதா ? அதில் உள்ளவை முஸ்லிம் ஸ்பெயினுக்குச் சொந்தமானவை ! . கருப்பு தங்கம் இல்லாத அவர்களிடம் வங்கிகளில் பெருமளவு இருப்பு உள்ளது. அதில் உள்ளவை அரபுகளுக்குச் சொந்தமானவை. நாடோடியாக வந்த அவர்கள் ஒரு நாட்டை ஆக்கிரமித்துள்ளனர் , அது பலஸ்தீனருக்குச் சொந்தமானது. அவர்களுக்கு எதுவும் சொந்தமில்லை ; எங்களிடமிருந்து அபகரித்துக் கொண்டார்கள். எங்களிடம் இப்போது எதுவும் இல்லை. நாங்கள் ஏமாந்துவிட்டோம்.
அனைத்து நாடுகளும் சுதந்திர தினம் கொண்டாடும் வேளையில் ஒரு நாடு அடிமைப் படுத்தப்பட்டுக் கிடக்கிறது ! நாஸிசத்தால் விரட்டப் பட்ட சமூகம் , சியோநிசத்தால் அடுத்த சமூகத்தை கொடுமைப் படுத்துகிறது ! வந்தேறிகள் அந்த பூமிக்கு வாரிசுகளானார்கள் ! சொந்த பூமிகாரர்கள் அகதிகளாய் ஆனார்கள் ! வெள்ளை அங்கி வாடிகனே ! வெள்ளை மாளிகை வாஷிங்டனே ! இயேசுவின் ரத்தம் உலக மக்களின் பாவங்களுக்காக சிந்தப்பட்டது எனில் (கிறிஸ்தவ நம்பிக்கைப் படி ) இயேசு பிறந்த பூமியில் பிஞ்சு சிசுக்களின் ரத்தம் யாரின் பாவத்திற்காக சிந்தப் படுகிறது? பயங்கரவாதம் சிலுவையில் தொடங்கி துப்பாக்கிகள் வரை ! ஏரோது மன்னன் தொடங்கி யஹுத் பராக் வரை ! சமாதான பிரபுவின் வாரிசுகளே ! சிலுவை மரணம் மட்டும்தான் துயரமானதா? ஜெருசலத்தில் இயேசு இரத்தம் சிந்தப்பட்டது மட்டும்தான் கொடூரமானதா? துப்பாக்கிகளால் கொல்லப்படும் பச்சிளம் குழந்தைகள் உயிர்கள்? பீரங்கிகளால் தாக்கப்பட்டு பீச்சிட்டு வரும் அப்பாவி மக்களின் இரத்தங்கள் ? உங்கள் கண்ணுக்கு தெரிவதில்லையா ? அல்லது நீங்கள் க...
கருத்துகள்
கருத்துரையிடுக