உன்னோடு இருந்த நாட்கள்
Ø அன்பே
பூக்கள்
எதுவும் பேசியதில்லை
உன்னைத்
தவிர !
Ø அருகில்
பலர்
இருந்தாலும் தனிமையையே உணர்கிறேன்
நீ
இங்கே என்னுடன் இல்லாததால் !
Ø முள்ளாய் குத்திய
என்
வாழ்க்கைப் பாதையில்
அழகியப்
பூவாய் வந்தவள் நீ !
Ø புயலடித்த
என்
வாழ்க்கையில்
ஒதுங்க
அமைதித் தீவாய் வந்தவள் நீ !
Ø உன்னுடன் இருந்த
நாட்கள்
எல்லாம்
என்
கண்ணுடன் இருக்கிறது!
Ø நீ என்னுடன்
தினமும்
இருப்பது போல
எனக்கு
கனவுகள் வருகிறது !
Ø சுட்டெரித்த
வெயிலில் ஒதுங்க
நிழலாய் வந்தவள் நீ
சுற்றி இருந்த இருளில் நடக்க
நிலவாய் வந்தவள் நீ!
Ø நீ அன்பென்னும் அலை கடலின்
தண்ணீர்
!
நீ
என்னை கைப்பிடித்த நாள்
எனக்கு
வந்தது ஆனந்தக்கண்ணீர்!
Ø வானவில் தோன்றியப் பக்கம்
உனது
வண்ணமுகம் பார்த்தேன் !
தென்றல்
வீசிய திசையில்
உனது
காலடி ஓசைக் கேட்டேன்
Ø ரோசா மலர் சிரிக்க
தண்ணீர்
துளிகள் தெறித்தது
கடும்
உரைப்பனி வீசிய நேரத்தில்!
பாச
மலர் நீ சிரிக்க
உன்
ஆனந்தக்கண்ணீர் தெறித்தது என் மேல்
உன்னுடன்
பேசிய நேரத்தில் !
Ø ஆழிய கடலின்
அலைகளின்
மொழியை
உன்னுடன்
அளவளாவியப் பின்
நான்
அறிந்தேன்!
அகராதியில்
படித்த
வார்த்தைகள்
அனைத்தையும்
உன்னைப்
பார்த்தப்பின்
நான்
மறந்தேன்!
Ø மலர்கள் அனைத்தும்
உன்னை
அடைய யுத்தம் செய்து
ரத்தம்
வந்தது !
வாள்கள்
எல்லாம்
உன்னை
நெருங்க முனைய
முனைகள்
உடைந்து
வாசனை
வந்தது!
Ø முடிந்த தேதிகளை
நான்
கிழித்தப் பின்பும்
உன்னுடன்
கழித்த நாட்கள் மட்டும்
என்னிடமே
திரும்பி வந்தது !
எதிர்வரும்
நாட்களோ
உன்னை
வரவேற்ப்பதற்காக
என்னிடமே
விரும்பி வந்தது !
__________________________________
எல்லா வரிகளும் அருமை
பதிலளிநீக்குஇந்த கவிதையில் எனக்கு பிடித்தவரிகள்
"உன்னுடன் இருந்த
நாட்கள் எல்லாம்
என் கண்ணுடன் இருக்கிறது! "
எல்லா வார்த்தைகளும் உங்கள் கவிதைலேயே முடிந்துப் போல் எண்ணத்த தோன்றுகிறது. இனி மற்றவர்கள் கவிதை எழுத எந்த வார்த்தை என்று சொல்ல ......!!!!