வரியெல்லாம் குருதி !


                                                                    - திருச்சி ஏ எம் அப்துல் காதர் ஹசனி 
                                                                                     ++++++++++++++++++++ 

ஆம்! 
குருதி குடித்து குடித்து 
குண்டான ஏகாதிபத்தியங்கள்! 

பணத்திற்காக 
பிணந்தின்னும் 
வல்லரசுகள்! 

குண்டுவெடித்து 
சிலர் செத்தால் 
அது பயங்கரவாதம் ! 
குண்டு போட்டு 
பலரை கொன்றால் 
அது பயங்கரவாத ஒழிப்பு போர் ! 


ஒருவன் யாசித்தும் 
அவனை பட்டினி போட்டால் 
அது மனித தன்மையற்ற செயல் ! 
ஐ நா கண்டிக்கும்! 

பொருளாதாரத்தடை விதித்து 
ஒரு நாட்டிற்கே பட்டினி போட்டால் 
அது புதிய பொருளாதார கொள்கை ! 
ஐ நா பாராட்டும் ! 

மனித உயிர்களை 
ஏற்றுமதி செய்தாவது 
அணு ஆயுதங்களை 
இறக்குமதி செய்வோம் ! 
இது 
புதிய பாதுகாப்புக்கொள்கை ! 

ஜாக்கிரதை ! 
யாரும் விமர்சனம் 
செய்து விடாதீர்கள் !! 
தேச துரோகியாகிவிடுவீர்கள் ! 

நீதி கேட்டு 
போராடாதீர்கள் ! 
அநீதமிழைக்கப்படுவீர்கள் ! 

ஐக்கிய நரிகளின் 
மாமந்தைகளில் 
ஆடுகளுக்கு 
ஒருபோதும் 
நீதி கிடைக்கப்போவதில்லை ! 

உலக அரசியலை 
ஒருவரியில் எழுதிவிட 
நினைத்தேன். 
வரியெல்லாம் குருதி !
---------------------------------------------------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாய்த்தமிழே

எங்களுக்கு சொந்தமானது

பயங்கரவாதம் - சிலுவை முதல் துப்பாக்கி வரை !