துன்பங்கள் ஏற்படும் தருணம்...............


                                                   திருச்சி A.முஹம்மது அபூதாஹிர்
                                                                                         thahiuae@gmail.com

நாம் நமக்கு துன்பங்கள் ஏற்படும் போது மற்ற அனைவரை விட்டும் தனிமைப் பட்டது போன்று உணர்கிறோம்.நாம் மட்டுமே துன்பத்தில் இருப்பதாக நினைக்கிறோம்.அதை விட்டும் விடு பட வழியே இல்லை என்று நினைக்கிறோம்.அதற்காக புலம்புகிறோம் அழுகிறோம்.
எந்த துன்பமும் நாம் மட்டும் புதிதாக அடைவதில்லை.நமக்கு முன்னரும் நாம் வாழும் காலத்திலும்,நம்மை சுற்றி இருக்கும் மக்களும் ஒவ்வொருவரும் ஒரு துன்பத்தை அடைந்தோ அல்லது அடைந்துக் கொண்டேதான் இருக்கின்றனர்.எந்த துன்பமும் விடுபட முடியாதது இல்லை.ஒரு நாள் துன்பத்தை விட்டும் ஒவ்வொருவரும் விடுபடத்தான் செய்கின்றனர்.
நாம் துன்பம் அடையும் தருணம் நாம் அடைந்துள்ள இன்பங்களை நினைத்துப் பார்த்தல், பொறுமையை மேற்க் கொள்ளல்,சமயோஜிதமாக சிந்தித்து அதை விட்டும் வெளி வர முயற்சி செய்தல்,படைப்பாளன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தல் ஆகியன நம்மை துன்பத்தை விட்டும் வெளி வரச் செய்யும்.
துன்பங்கள் அல்லாஹ்வின் சோதனையாக இருக்கிறது. அல்லாஹ் மனிதர்களை  சோதிக்கிறான் .“மனிதர்கள் விசுவாசம்  கொண்டோம் என்று சொன்னால் மட்டும் அவர்கள் சோதிக்கப் படாமல் .விடப் படுவார்களா? என குர்ஆன் கேட்கிறது
“துன்பத்துடன்தான் இன்பம் இருக்கிறது”. என்று குர்ஆன் சுபச் செய்தி சொல்கிறது.
மேலும் மனிதர்கள் எந்த துன்பமும் பீடிக்கும் போது உண்மை விசுவாசிகள் “நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கிறோம்,அவனிடமே நாம் மீள இருக்கிறோம்” என்று கூறுமாறு குர்ஆன் கட்டளையிடுகிறது.
கஷ்டம் வரும் தருணம் “பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் ஈடேற்றம் தேடுங்கள் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான் ” என்று குர்ஆன் கூறுகிறது.
நபி முஹம்மது (ஸல்) அவர்கள் சோதனைகள் சூழப் பட்ட போது சகோதரர் மூஸாவுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக அவர்  இதை விட அதிகமாக சோதனைகள் கொடுக்கப் பட்ட போதும் பொறுத்துக் கொண்டார் என்ற கூறினார்கள். நாம் மட்டும் புதிதாக சோதிக்கப் படுவதில்லை.நமக்கு முன்னர் பலரும் சோதிக்கப் பட்டுள்ளனர் என்பதை அறியும் போது உலகின் நியதி துன்பம் என்பது அனைவருக்கும் வரும் என்பதும் புரியும்  அது ஆறுதலாகவும் அமையும்..
_____________________________________________________________________________
  





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாய்த்தமிழே

எங்களுக்கு சொந்தமானது

பயங்கரவாதம் - சிலுவை முதல் துப்பாக்கி வரை !