மூடனின் கிளிக் கூண்டில்
திருச்சி A.முஹம்மது காசிம்
tiruchykhasim@gmail.com
Ø படித்தவன்
கணினியில் ஜோசியம் பார்க்கிறான்!
பாமரன்
பாமரன்
கரடி ஜோசியம் பார்க்கிறான்!
Ø தனது விதியே தெரியாமல்
வீதிக்கு வந்த ஜோதிடனுக்கு
அடுத்தவனுக்கு
நாளை தேதியில் நடப்பது
தெரியுமாம் அவனுக்கு!
Ø சோம்பேறிக்கு
பூனை குறுக்கே போனாலும்
கெட்ட நேரம் தான்!
சாமார்த்தியக்காரனுக்கு
எல்லா நேரமும்
நல்ல சகுனம் தான்!
Ø மூடன்
வைத்திருக்கும்
கிளிக் கூண்டில்
ஆறு அறிவை அடகுவைக்கிறான்
கிளிக் கூண்டில்
ஆறு அறிவை அடகுவைக்கிறான்
படித்தவன்!
Ø பொண்ணுக்கு ,
மாப்பிள்ளை பொருத்தமும் ,
சுப ராகும் பார்த்துதான்
கல்யாணம் நடந்தது!
ஆனால்,
அதுவோ,
வெகு
சீக்கிரமாய் விவாகரத்தில் முடிந்தது !
Ø உனக்கு கண்டம் என்று
ஜோசியன்
பேச்சைக்கேட்டு
தன்னை தானே
அழித்துக் கொண்டவர் பலர்!
ஆம்
அவர்களின்
வாழ்க்கை
தற்கொலையில்
முடிந்தது!
Ø ஜோதிடன்
படிச்சவனுக்கு கூட தெரியாத
பல வித்தைகளை காட்டுவான்!
தன் பாச்சா பழிக்கும் வரை,
எல்லோரையும்
ஏமாற்றுவான்!
ஏமாற்றுவான்!
*********************************************************************
கருத்துகள்
கருத்துரையிடுக