வன்புணர்ச்சி செய்பவனும் பயங்கரவாதிதான்

                                                     திருச்சி A.முஹம்மது அபூதாஹிர்
சட்டங்களின்  நோக்கமே அது  பாதிக்கப் பட்டவன்  நீதி  பெறுவது ,தவறிழைத்தவன்  தண்டனை  பெறுவதே .நிருபயா வன்புணர்ச்சி கொலை வழக்கில் மைனர் கொலையாளி  விடுவிக்கப் பட்டது நிருபயா குடும்பத்தினருக்கு  இழைக்கப் பட்ட  அநீதியாகும்.இது நாட்டின் சட்டம் தங்களை எப்படியும் காப்பாற்றும் என மிகுந்த நம்பிக்கை  கொண்டு குற்றவாளிகள் இன்னும் அதிகம் அதிகம் பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகள் செய்யவும் ஊக்கப் படுத்தும் .மேலும் நிருபயா குடும்பம்  போன்ற பாதிக்கப் பட்ட பெண்களும் ,குடும்பங்களும் நீதி மன்றங்களின் மீது  நம்பிக்கை இழப்பர் .வெளிநாட்டில் இருந்து வந்து குண்டு வைப்பவன் ,நாட்டின் மீது போர் தொடுப்பவன், கலவரம் உண்டாக்குபவன் மட்டும் பயங்கரவாதி அல்ல .இந்த நாட்டின் சமூகத்தின் சரி பாதியான பெண்கள் மீது வன்புணர்ச்சி செய்பவன் ,ஆசிட் ஊற்றுபவன் ,வரதட்சணைக்காக கொடுமை செய்பவன் ,கொலை செய்பவன் அவனும் பயங்கரவாதிதான் .தேசம் எனபது வரை படத்தில் அல்ல. தேசம் எனபது மக்கள்தான் .பெண்களுக்கு எதிரான கொடுமை மற்றும் கொலைகளில் ஈடுபடும் ஒவ்வொருவனும் பயங்கரவாதிதான் .இது போன்ற தீர்ப்புகள்  மூலம் ஒரு குற்றவாளி நேர்முகமாக காப்பற்றப் படுகிறான் .பல குற்றவாளிகள் மறைமுகமாக உருவாக்கப் படுகின்றனர் .காட்டு மிராண்டிகளை தூக்கில் இடுவது காட்டு மிராண்டித்தனம் என்றால் பாதிக்கப் பட்டவனுக்கு என்ன நீதி .எதிர் காலத்தில் இன்னும் மற்ற பெண்கள் பாதிக்கப் பட மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் .இது நிருபயா போன்ற பாதிக்கப் பட்ட குடும்பங்கள் வைக்கும் வாதம் .
 ______________________________________________________________________________

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாய்த்தமிழே

எங்களுக்கு சொந்தமானது

பயங்கரவாதம் - சிலுவை முதல் துப்பாக்கி வரை !