குடித்தவன் வாழ்க்கை .....


திருச்சி A.முஹம்மது காசிம்
ஜித்தா – சவூதி அரேபியா
Ø  குடிகாரன்
ரோட்டில் மயக்கத்தில்!
குடும்பத்தினர்
வீட்டில் கலக்கத்தில்!

Ø  குடிக்க துவங்கிய போது,
அவன் வீட்டில்
வறுமையும் குடியேற துவங்கியது!

Ø  மது அவனைக் குடிக்கும் முன்,
குடுவையில்
அவன் ஆயுளை அளந்து கொண்டான்!

Ø  முதலில்
மதிகெட்டுப்  போனது !
   போதையில் பாதை மாறிப் போனது!

Ø  கடைசியில்
வாழ்க்கை தறிக்கெட்டுப் போனது
அவன் விதியே கோரமாய் முடிந்துப் போனது!

Ø  கோமான்கள் கோபுரத்தில்
குடித்து அடிக்கும்
பெருமை கொண்டாட்டம் !
Ø  குடிசைவாசிகள்
வயித்துக்கே வழியின்றி
வறுமையில் திண்டாட்டம் !

Ø  அப்பன்
குடியை தொட்டான்
பையன்
பாதியில் படிப்பை விட்டான் 

Ø  மில்லியில் துவங்கிய குடியால்,  
வீட்டில் உள்ள சல்லியும்
மில்லியானது!

Ø  கவலையை போக்க ,
கணவன்
கள்ளை குடிக்க போனான் !
வறுமையை போக்க,
மனைவி
கல்லை உடைக்க போனாள் !

Ø  “குவாட்டர் “அடிக்கும் போது ,
குடும்பத்திற்கு  
தெரியவில்லை!
புல்” அடித்து வந்த போதுதான், 
புரிந்துக் கொண்டாள்
மனைவி !

Ø  குடித்தவன்
வாழ்க்கை 
பாடையில் முடிந்ததுவிட்டது!
குடும்பத்தினர்
வாழ்க்கை 
வீதியில் தொடங்கிவிட்டது! 

Ø  குடியினால்
அழிந்த ராஜ்யங்களின்
சரித்திரங்கள் அதிகம்!  
குடியினால்  
குடும்பங்களில் விளைந்த
தரித்திரங்களும் அதிகம்! 

****************************************************************************************************************

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாய்த்தமிழே

எங்களுக்கு சொந்தமானது

பயங்கரவாதம் - சிலுவை முதல் துப்பாக்கி வரை !