இடுகைகள்

2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உன்னோடு இருந்த நாட்கள்

Ø     அன்பே பூக்கள் எதுவும் பேசியதில்லை உன்னைத் தவிர ! Ø     அருகில் பலர் இருந்தாலும் தனிமையையே உணர்கிறேன் நீ இங்கே என்னுடன் இல்லாததால் ! Ø     முள்ளாய் குத்திய என் வாழ்க்கைப் பாதையில் அழகியப் பூவாய் வந்தவள் நீ ! Ø     புயலடித்த என் வாழ்க்கையில் ஒதுங்க அமைதித் தீவாய் வந்தவள் நீ ! Ø     உன்னுடன் இருந்த நாட்கள் எல்லாம் என் கண்ணுடன் இருக்கிறது! Ø     நீ என்னுடன் தினமும் இருப்பது போல எனக்கு கனவுகள்  வருகிறது ! Ø      சுட்டெரித்த  வெயிலில் ஒதுங்க  நிழலாய் வந்தவள் நீ சுற்றி இருந்த இருளில்  நடக்க  நிலவாய் வந்தவள் நீ! Ø     நீ அன்பென்னும் அலை கடலின்   தண்ணீர் ! நீ என்னை கைப்பிடித்த நாள் எனக்கு வந்தது ஆனந்தக்கண்ணீர்! Ø     வானவில் தோன்றியப் பக்கம் உனது வண்ணமுகம் பார்த்தேன் ! தென்றல் வீசிய திசையில் உனது காலடி ஓசைக் கேட்டேன் Ø     ரோசா மலர் சிரிக்க தண்ணீர் துளிகள் தெறித்தது கடும் உரைப்பனி வீசிய...

வேசிக்குக் கூட....

திருச்சி A . முஹம்மது அபூதாஹிர்                             Ø   வேசிக்கு கூட   பணம் கொடுத்துதான்           அனுபவிக்க போகிறான்!           ஆனால்   இந்த பாவி           வாழ்வில் தன்னை நேசிக்க வருபவளிடம்   வரதட்சணை கேட்டு யாசிக்கிறான்! Ø   கந்து வட்டிக் காரன் கூட தான் தந்தற்கு அதிகமாகத்தான் காசு கேட்கிறான் ! கரும்பாய் தன்னை தந்து விட்டவளிடமே  இவன் காசு பறிக்கிறான் Ø   நீ ஒன்றும்           அவளுக்கு வாழ்க்கை கொடுக்கவில்லை!           வாழ்க்கையை  இருவரும் சமமாக பகிர்ந்து கொள்கிறீர்கள் ! Ø   உனக்கு அவள் துணி துவைக்கிறாள்   ! உனக்கு அறுசுவை உணவு சமைக்கிறாள்! Ø   முத்தம் கொடுக்கிறாள் !          முற்றும் தம்மையே கொடுக்கிறாள்! Ø   பிள்ளை பெத்து கொடுக்க...

அன்பே !

                                  A. முஹம்மது அபூதாஹிர்                                              thahiruae@gmail.com Ø   அன்பே மலர் சூடி நீ வருவது அழகுதான் ! மலர்ந்த முகத்துடன் வா அதை விட அது மிகுந்த அழகு !     Ø   நெத்திச்  சூடியை விட நிரந்தர அழகு புத்தியால் சூடு Ø   அணிந்துக் கொள் காதில் தோடு ! அதை விட அழகு , நல்ல விசயங்களுக்கு உன் காதைக் கொடு ! Ø   எதுக்குப் பவுடர் ? முகத்துக்கு அழகு புன்னகையால் பூசு ! Ø   ஒதுக்கு லிப்டிக்கை , உதட்டுக்கு அழகு பிறர் மனம் புண்படாமல் பேசு ! Ø   மூக்குத்தியெல்லாம் எனக்குப் பிடிக்காது ! மற்றவரைக் குத்திப் பேசாதே அது போதும் ! Ø   நீ கொலுசு அணிந்து வருவது        அழகுதான்   !        பண...

என் அன்பு அன்னையின் தியாகங்கள்

திருச்சி A.முஹம்மது அபூதாஹிர்  thahiruae@gmail.com அம்மா ஒன்பது பிள்ளைகளை தனது வயிற்றில் சுமந்து அத்தனை பேருக்கும் தனது இரத்தத்தை பாலாக தந்திருக்கிறார்கள். அம்மா பிள்ளைகள் தூங்க எத்தனையோ இரவுகள் விழித்திருகிறார்கள் . அம்மா எனக்கு விவரம் தெரிந்த நாட்களில் இருந்து எவ்வளவோ ஆண்டுகள் ஒரு நேரம் உணவு , அதிகம் நீர் மட்டுமே அருந்தி இருக்கிறார்கள் .பிள்ளைகளுக்காக அடுப்பங்கரையில் விறகு அடுப்பில் ஊதி ஊதி அவர்களின் கண்கள் எரிந்து இருக்கிறது.கால் வலிக்க அடுப்பங்கரையில் நின்று இருக்கிறார்கள்.ஆனால் கடைசியில் சமைத்தப் பின் பிள்ளைகளுக்கு உணவைப் பகிர்ந்து விட்டு தாம் பசியோடு போய் படுத்துக் கொள்வார்கள் . நான் சொல்வேன் “ எங்கள் அம்மாவின் வயிறு நிரம்பி இருந்தது நாங்கள் அவர்களின் வயிற்றில் இருந்தக் காலம் மட்டும்தான் . பசியோடு எத்தனையோ நாட்கள் இருந்த அம்மா ஒரு நேரம் கூட தம் பிள்ளைகளை பசியுடன் விட்டு விட வில்லை .சமைத்து கொடுத்தார்கள் .அத்தனை பிள்ளைகளுக்கும் சமமாக கொடுத்தார்கள் . அம்மா மிகவும் எளிமையாகவே இருப்பார்கள் .எப்போதும் காட்டன் சேலைதான் அணிவார்கள் .அதனையும் கிழிய கிழிய ஓட்டுப் போட்டு ...