இடுகைகள்

டிசம்பர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மூடனின் கிளிக் கூண்டில்

திருச்சி A. முஹம்மது காசிம் tiruchykhasim@gmail.com Ø   படித்தவன் கணினியில் ஜோசியம் பார்க்கிறான்! பாமரன் கரடி ஜோசியம் பார்க்கிறான்! Ø   தனது விதியே தெரியாமல்  வீதிக்கு வந்த  ஜோதிடனுக்கு அடுத்தவனுக்கு நாளை தேதியில் நடப்பது  தெரியுமாம் அவனுக்கு! Ø   சோம்பேறிக்கு பூனை குறுக்கே போனாலும் கெட்ட நேரம் தான்! சாமார்த்தியக்காரனுக்கு எல்லா நேரமும் நல்ல சகுனம் தான்! Ø   மூடன் வைத்திருக்கும் கிளிக் கூண்டில் ஆறு அறிவை அடகுவைக்கிறான் படித்தவன்! Ø   பொண்ணுக்கு , மாப்பிள்ளை பொருத்தமும் , சுப ராகும்  பார்த்துதான்  கல்யாணம் நடந்தது! ஆனால், அதுவோ, வெகு சீக்கிரமாய் விவாகரத்தில் முடிந்தது ! Ø   உனக்கு கண்டம் என்று ஜோசியன் பேச்சைக்கேட்டு தன்னை தானே அழித்துக் கொண்டவர் பலர்!      ஆம் அவர்களின் வாழ்க்கை தற்கொலையில் முடிந்தது! Ø   ஜோதிடன் படிச்சவனுக்கு கூட தெரியாத பல வித்தைகளை காட்டுவான்! தன் பாச்ச...

பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: விளாசித்தள்ளிய சசி தரூர் உரை

எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் சசி தரூர். 189 ஆண்டு பாரம்பரியம் மிக்க 'ஆக்ஸ்போர்டு யூனியன் சொசைட்டி'யில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஆற்றிய உரைதான் இணைய உலகில் இந்த வாரத்தின் வைரல். பிரிட்டனால் காலனியாதிக்க நாடுகள் பலன் பெற்றனவா, சுரண்டப்பட்டனவா எனும் விவாதப் பொருளில் நடந்த விவாதம் அது. காலனியாதிக்கத்தால் பிரிட்டன் எவ்வளவு சுரண்டியது என்று பேச ஆரம்பித்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தன்னுடைய 15 நிமிஷ உரையில், அன்றைய இந்தியாவை அப்படியே கண் முன் கொண்டுவந்த நிறுத்தியதோடு, பிரிட்டனின் சுரண்டல்களையும் அம்பலப்படுத்தினார். இணையத்தில் லட்சக்கணக்கானோரால், பார்க்கப்பட்ட / கேட்கப்பட்ட / பேசப்பட்ட சரி தரூரின் உரை இந்திய நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் மோடி வெளிப்படையாக சசி தரூரைப் பாராட்டினார். உலகின் 10-ல் 9 பங்கு நிலப்பரப்பை ஆக்ரமித்திருந்த மேற்கத்திய காலனியாதிக்க அராஜகங்களை இன்று நினைவுகூர்வது வெறும் வரலாற்றுப் பக்கங்களை புரட்டி பார்க்கும் நிகழ்வு மட்டும் அல்ல. ஒருவகையில், காலனியாதிக்கம...

வரியெல்லாம் குருதி !

                                                                    - திருச்சி ஏ எம் அப்துல் காதர் ஹசனி                                                                                       ++++++++++++++++++++  ஆம்!  குருதி குடித்து குடித்து  குண்டான ஏகாதிபத்தியங்கள்!  பணத்திற்காக  பிணந்தின்னும்  வல்லரசுகள்!  குண்டுவெடித்து  சிலர் செத்தால்  அது பயங்கரவாதம் !  குண்டு போட்டு  பலரை கொன்றால்  அது பயங்கரவாத ஒழிப்பு போர் !  ஒருவன் யாசித்தும்  அவனை பட்டினி போட்டால்  அது மனித தன்மையற்ற செயல் !  ஐ நா கண்டிக்கும்!  பொருளாதாரத்தட...

நிலா

- திருச்சி A. முஹம்மது அபூதாஹிர்                                             நிலாவை   வரச்சொல்லி குழந்தைக்கு அமுதூட்டினாள் அம்மா ! Ø    தன்   காதலியைப்   பார்த்து நிலாவே தன்னுடன் வந்திருப்பதாக குதூகலித்தான் இளைஞன் ! Ø    நிலாவைப்   பார்த்து பூமியில் சந்திர ராசி சொன்னான்  அஞ்ஞானி ! Ø    நிலாவில் அடியெடுத்து வைத்து விட்டதாக அறிவித்தான்  விஞ்ஞானி ! Ø    நிலா வழக்கம் போல அன்றும் ஒளி வீசியது ! இவையெல்லாம்  தனக்கு தெரியாது என பேசியது ! ************************************ ********************

வன்புணர்ச்சி செய்பவனும் பயங்கரவாதிதான்

                                                     திருச்சி A.முஹம்மது அபூதாஹிர் சட்டங்களின்  நோக்கமே அது  பாதிக்கப் பட்டவன்  நீதி  பெறுவது , தவறிழைத்தவன்  தண்டனை  பெறுவதே .நிருபயா வன்புணர்ச்சி கொலை வழக்கில் மைனர் கொலையாளி  விடுவிக்கப் பட்டது நிருபயா குடும்பத்தினருக்கு  இழைக்கப் பட்ட  அநீதியாகும்.இது நாட்டின் சட்டம் தங்களை எப்படியும் காப்பாற்றும் என மிகுந்த நம்பிக்கை  கொண்டு குற்றவாளிகள் இன்னும் அதிகம் அதிகம் பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகள் செய்யவும் ஊக்கப் படுத்தும் .மேலும் நிருபயா குடும்பம்  போன்ற பாதிக்கப் பட்ட பெண்களும் , குடும்பங்களும் நீதி மன்றங்களின் மீது  நம்பிக்கை இழப்பர் .வெளிநாட்டில் இருந்து வந்து குண்டு வைப்பவன் , நாட்டின் மீது போர் தொடுப்பவன் , கலவரம் உண்டாக்குபவன் மட்டும் பயங்கரவாதி அல்ல .இந்த நாட்டின் சமூகத்தின் சரி பாதியான பெண்கள் மீது வன்புணர்ச்சி செய்பவன் , ஆசிட் ஊற்...

நாம் நினைத்தவாறே

                                                  திருச்சி A.முஹம்மது அபூதாஹிர்                                                                        thahiruae@gmail.com இவ்வுலகில் ஒவ்வொரும் மற்றவர்கள் தாம் விரும்பியது போல, அல்லது தாங்கள் இருக்கும் சூழ்நிலைக்கு உட்பட்டு மற்றவர்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.அப்படி அவர்கள் ஆக்க விரும்பும் மக்கள் அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப மாற தவறும் பொது அவர்கள் மீது கோபப் படுகின்றனர். குறிப்பாக குடும்பங்களில் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள். மாமனார் மாமியார் தங்களின் மருமகள்கள் தாங்கள் கூறுவதற்கு இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். சமூகங்களில் ஆசிரியர்கள் தங்களின் மாணவர்கள்,சமூகப் பிரமுகர்கள் தங்களின் சமூக  மக்கள், இப...

துன்பங்கள் ஏற்படும் தருணம்...............

                                                    திருச்சி A. முஹம்மது அபூதாஹிர்                                                                                          thahiuae@gmail.com நாம் நமக்கு துன்பங்கள் ஏற்படும் போது மற்ற அனைவரை விட்டும் தனிமைப் பட்டது போன்று உணர்கிறோம்.நாம் மட்டுமே துன்பத்தில் இருப்பதாக நினைக்கிறோம்.அதை விட்டும் விடு பட வழியே இல்லை என்று நினைக்கிறோம்.அதற்காக புலம்புகிறோம் அழுகிறோம். எந்த துன்பமும் நாம் மட்டும் புதிதாக அடைவதில்லை.நமக்கு முன்னரும் நாம் வாழும் காலத்திலும்,நம்மை சுற்றி இருக்கும் மக்களும் ஒவ்வொருவரும் ஒரு துன்பத்தை அடைந்தோ அல்லது அடைந்துக் கொண்டேதான் இருக்கின்றனர்.எந்த துன்பமும் விடுபட ...

பிணந்தின்னி கழுகுகள்

                                     A. முஹம்மது அப்துல் காதிர் ஹசனி மக்கள், அரசியல் சேற்றில் செத்து மிதக்கும்  சோதனை எலிகள்! அரசியல்வாதிகள், சாவு களத்தையும் சாதகமாக்கும் சாதனை புலிகள்! அரசியல் சாசனங்களை விட அரசியல்வாதிகளின் ஆசனங்கள் வலிமை வாய்ந்தவை ! மரங்கொத்தி பறவைகளாய் சுரண்டலை தொடங்கும் அரசியல்வாதிகள் பிணந்தின்னி கழுகுகளாய் மாறிவிடுகிறார்கள் ! ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை பெருச்சாளிகளோடு ஒப்பிடாதீர்கள் ! பெருச்சாளி தன்னை தற்காத்துக்கொள்ள மண்ணில் தான் பொந்திடுகிறது ! அரசியல் வாதியோ தன்னை காப்பாற்ற சட்டத்திலே பொந்திடுகிறான்! பெருச்சாளிகள் வயிற்றுப்பசிக்காக மட்டுமே வளைய வருகின்றது! அரசியல்வாதிகளோ பணப்பசிக்காகதான் வளைந்து வருகின்றார்கள் ! அரசியல்வாதிகளை நச்சு பாம்புகளோடு ஒப்பிடாதீர்கள் ! பாம்புகள் உயிரை காக்க எதிரிகளை மட்டுமே கொட்டுகின்றது! அரசியல்வாதிகள் பதவியைகாக்க நண்பர்களையே கொட்டுவார்கள் ! பஞ்சோந்தி தன் நிறத்தை மட்டுமே மாற்றிகொள்கிறது அரசியல்வாதியோ சுற்றி இருப்பவர்...

அன்பின் மழை

திருச்சி A. முஹம்மது அபூதாஹிர் thahiruae@gmail.com Ø   தம் சக மனித இனம் அணைக்கட்டுகள் நிரம்பி வெளியேற்றப் பட்ட போது அன்பு மனம் கொண்டு கட்டியணைத்து அவர்களை வரவேற்றார்கள் பலர் ! Ø   நீர் பலரின் உடமைகளை எடுத்துச் சென்றதால் கண்ணீரோடு இருந்தவர்களுக்கு  அவர்கள் உணவும் உடையும் கொடுத்து அரவணைத்தார்கள்! Ø   அலை   இந்து சகோதரனை அடித்துச் செல்ல வந்த போது முஸ்லிம் சகோதரன் தடுத்து காப்பாற்றினான்! கிறிஸ்தவ சகோதரனை வெள்ளம் கொண்டுச்  செல்ல வந்த போது இந்து சகோதரன் கை பிடித்து காப்பாற்றினான்! Ø   வார்த்தைகளால் ஏசிய மனிதர்கள் அன்பால் பேசிக் கொண்டார்கள்! Ø   மனிதாபிமானத்தில் எல்லா மக்களும் முன்னணியில் இருந்தார்கள்! அரசியல்வாதிகள் அனைவரும் அங்கே தோற்றுப் போனார்கள்! Ø   பள்ளிவாசலில் இந்துக்கள்! கோவிலில் சென்று உணவளித்த முஸ்லிம்கள்! மத வெறியர்கள் எல்லாம் மறைந்துப் போனார்கள்! Ø   காந்தியின் வரலாற்றில் புதிய பதிப்பு வெளியிடப் பட்டது! “மக்களை காப்பாற்ற வந்த அனைவரும் ...