லைலத்துல் கத்ர் இரவு

லைலத்துல் கத்ர் இரவு


ரமலான் மாதம் நோன்பு கடமையாக்கப் பட்டது நீங்கள் பயபக்தியுடை யோராக ஆவதற்கே என்று கூறுகிறது குர்ஆன். யார் ஈமானுடனும் நன்மையை எதிர்ப் பார்த்தும் ரமலானில் நோன்பு நோற்ப்பாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.
ரமலானில்  நோன்பு மட்டுமல்லாது தருமங்கள் செய்தல் ,குர்ஆன் ஓதுதல்,இரவு வணக்கங்கள் புரிதல்,இன்னும் உம்ரா செய்தல் என வேறு பல நன்மையான காரியங்கள் செய்யவும் சமூகத்தை அறிவுறுத்தி பல நபி மொழிகள் பேசுகின்றன.நன்மைகளின் பருவக்காலமான ரமலானில் இன்னும் அதன் உச்சக் கட்டமாக கடைசிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் நின்று வணங்கி,பாவமன்னிப்பு கேட்டு   “லைலத்துள் கத்ர் “ என்னும் இரவை அடைந்து மனிதன் தன் வாழ்வினை பரிசுத்தப் படுத்திக் கொள்வதன் மூலம் இன்னும் அவன் அபரிதமான நன்மைகளை பெற்று சுவனம் செல்லும் அறிய வாய்ப்பினை பெறுகிறான்.
மிகவும் குறுகிய காலங்களின் சில இரவுகளின் அவன் செய்யும் வணக்கங்கள்,ஆம் அவை   பெற்றுத் தருவதோ ஆயிரம் மாதங்கள் நின்று வணங்கிய நன்மைகளை.மனிதனின் குறுகிய ஆயுள் காலம், உடல் வலிமை அவனின் உலக தேவைகளை நிறைவேற்றுதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டால் அவனால் நீண்ட காலங்கள் வணக்கங்கள் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. ஞானமிக்கவனும் கருணை மிக்கவனுமாகிய உயர்ந்தோனாகிய அல்லாஹ்வின் அளவற்ற அருளால் நாம் இந்த “லைலத்துள் கத்ர் “ என்னும் இரவை எந்த சமூகமும் கிடைக்கப் பெறாத அரிய வாய்ப்பை நாம் பெற்றுள்ளோம். எதிர் காலத்தில் எப்போது நம்மை மரணம் அடையுமோ என நமக்குத் தெரியாது ரமலானின் கடைசிப் பத்தின் iஇந்த சில இரவுகளை நம் வாழ்வின் முக்கியத் தருணம் என கருதி நல்லமல்கள் செய்ய வேண்டும்.
ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் குர்ஆன் இறக்கப் பட்டது என்று கூறும் குர்ஆன் அது ரமலானில் “லைலத்துள் கத்ர் என்னும் இரவில்  இறக்கப் பட்டதாக கூறுகிறது  என கூறுகிறது. இதோ குர்ஆனில்
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். என்று உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகிறான்.அதன் சிறப்பைப் பற்றி அவனே குர்ஆனில்  பேசுகிறான் “ கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்.
நபி (ஸல்) அவர்கள் ரமலானில் கடைசிப் பத்து இரவுகளில் பள்ளியில் இதிகாப் இருந்து “லைலத்துள் கத்ர்” வணக்கங்கள் புரிந்து இருக்கிறார்கள்.நபியவர்களின் மனைவிமார்கள்  வீடுகளில் இதிகாப் இருந்து “லைலத்துள் கத்ர்” வணக்கங்கள் புரிந்து இருக்கிறார்கள்.
லைலத்துல் கத்ர் இரவை தேடுமாறும் அதில் அல்லாஹ்வின் மன்னிப்பைத் தேடுமாறும் நபி (ஸல்) அவர்கள் இட்டக் கட்டளையை அன்னை ஆயிஷா (ரலி ) செய்த அறிவிப்பு இமாம் முஹம்மத் இஸ்மாயில்  புகாரி (ரஹ் ) அவர்களின் நபி மொழி தொகுப்பில் வந்துள்ளது இதோ:
 “ரமலானின் கடைசி பத்து நாள்களில், ஒவ்வொர் ஒற்றைப்படை இரவுகளில் (21,23,25,27,29) லைலத்துல் கத்ர் இரவை தேடுங்கள் லைலத்துள் கத்ர் இரவில், நாயனே நிச்சயமாக நீ பிழை பொறுப்பவன். ஆதலால், என்னை மன்னிப்பாயாக என, கூற வேண்டும் என்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.”
ரமலானில் இருபத்தேழாம் நாளுக்கு மாட்டும் முக்கியத்துவம் கொடுத்து வணக்கங்கள் புரிவது,அவ்விரவை விழாவை போன்று கொண்டாடுவது, அவ்விரவில் இனிப்புகள் பகிர்வது,பள்ளிவாசலை அலங்கரிப்பது ஆகியன குர்ஆனிலோ நபி வழியிலோ இல்லாத விசயங்களாகும்.எனவே இவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.மார்க்கத்தில் இல்லாத இந்த அனாச்சாரங்ககளை ஆதரிப்பவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்.
அற்ப ஆயுள் கொண்ட நமக்கு ஆயிரம் மாதம் இரவுகளின் வணக்கங்கள் செய்யும் வாய்ப்பை சில இரவுகளில் தந்து நம்மை பரிசுத்தப் படுத்த நாடும் கருணையாளனாகிய அல்லாஹ்வுக்கு  நன்றிகளை சமர்ப்பித்து நமக்கு அந்த இரவுகளின் முழு பயனையும் அடைய அவனின் அருள் வேண்டுகிறேன்.
பாவத்தை விட்டும் தவிர்ந்துக் கொள்ள சக்தியும், நற்காரியங்கள் புரிவதற்குரிய திறனும் அல்லாஹ்வின் உதவிக் கொண்டே ஒழிய இல்லை. அவன் மிக உயர்ந்தோணும் கண்ணிய மிக்கோனுமாக இருக்கிறான்.
திருச்சி A.முஹம்மது அபூதாஹிர்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாய்த்தமிழே

எங்களுக்கு சொந்தமானது

பயங்கரவாதம் - சிலுவை முதல் துப்பாக்கி வரை !