மன்மோகன் சிங்க்

திருச்சி A.முஹம்மது அபூதாஹிர் 

thahiruae@gmail.com



புரோகிராம் செய்யப் பட்ட ரோபட் நடை, சோனியா காந்தியின் அறிக்கையை அப்படியே ஸ்பெல்லிங் மிஸ்டேக் இன்றி அழகாக உச்சரிக்கும் கேம்பிரிட்ஜ் ஆங்கிலம்,எத்தனை வினாக்கள் எழுப்பினாலும் சரியாக மூன்று நான்கு வார்த்தைகளுக்கு மிகாமல் பதிலளிக்கும் திறமை ,பல பிரச்சினைகள்,ஊழல்கள் கண்டும் பேசாமல் எப்போதும் சைலன்ட் மோடில் இருக்கும் அடக்கம் ஆகிய அற்புத குணங்கள் கொண்ட பத்தாண்டு கால பிரதமர் மன்மோகன் சிங் தானும் ஓய்வு பெற்று காங்கிரஸ் கட்சியையும் அடுத்த ஐந்தாண்டு காலம் ஓய்வெடுக்க வழி வகை செய்துள்ளார்
எதிர்க் கட்சிகள் காரசார பிரச்சாரம்,தொடர்ந்து காலையில் எழுந்ததும் காம்ப்ளான் விளம்பரம் மாதிரி தொடர்ந்து மோடி பற்றிய விளம்பரம்,
மோடி மனைவி பெயரை மறைத்தார்,இளம் பெண்ணை உளவுப் பார்த்தார்,குஜராத் கலவரத்தை அடக்கத் தவறினார்,குஜராத் மற்ற மாநிலங்களை விட பொருளாதரத்தில் பின் தங்கி இருக்கிறது எத்தனையோ ஆய்வறிக்கைகள் வெளியிடப் பட்டது. எனினும் இந்த குற்றச்சாட்டுகள் இருந்தும் பி ஜே பி வெல்கிறது என்றால் காங்கிரஸின் மக்கள் நலனில் அக்கறை இல்லாத ஆட்சிதான்.நாளைக்கு பி ஜே பி வருவதால் பிரச்சினை என்று பார்ப்பதை விட இப்போதைக்கு காங்கிரஸைதான் மக்கள் பிரச்சினையாக பார்க்கிறார்கள்
காங்கிரஸ் அதன் மீது பி ஜே பி சொல்லும் சீக்கியர் இன படுகொலைக்கு பதில் சொல்லுவது இருக்கட்டும்,ஆனால் அது குஜராத் பி ஜே பி ஆட்சியில் நடந்த முஸ்லிம் இனப் படுகொலை பற்றி பெரும்பாலும் காங்கிரஸ் பேசவே இல்லை.
பி ஜே பி பாபரி மஸ்ஜிதை இடித்து விட்டு அந்த இடத்தில் கோவில் கட்டுவதை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது.ஆனால் தனது ஆட்சியில் இடித்து தரை மட்டமாக்கப் பட்ட பள்ளியை கட்டித் தருவேன் என்ற நரசிம்மராவின் வாககுறிதியை காற்றில் வீசியது.
காங்கிரஸ் ஆட்சியில் நடைப் பெற்ற ஆதர்ஸ், ஸ்பெக்ட்ரம் ,ஆசியன் கேம்ஸ் உட்பட எந்த ஊழல் குறித்தும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை.மக்கள் சொத்து கொள்ளை அடிக்கப் பட்டதை பற்றி கவலைப் பட்டதை விட தாமும் தம் கூட்டணி தலைவர்களும் அடித்த கொள்ளை பொருட்களை காப்பாற்றுவதற்கும்.கொள்ளை அடித்தவர்களை காப்பாற்றுவதற்கும் அது முழு முயற்சி எடுத்தது.
விலை வாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியன பற்றி கவலைப் படாத அரசு பொருளாதார முன்னேற்றம் இந்த ஆண்டு மூன்று சதவீதம் முன்னேற்றம், பங்குச்சந்தை புள்ளி உயர்வு என மேட்டுக்குடி மக்களுக்கு மட்டுமே பயன் தரும், பாமர மக்களுக்கு புரியாத அறிக்கையை பட்ஜெட் என்ற பெயரில் தாக்கல் செய்தது.
அஸ்ஸாம் முஸ்லிம் இனப் படு கொலை,கஷ்மீரில் ராணுவம் அத்துமீறல் உட்பட எதற்கும் சரியான நடவடிக்கை எடுக்காத காங்கிரஸ்,நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என அறிக்கை விட்டே காலத்தை தள்ளியது.
சின்னக் குழந்தைகளுக்கு சாக்லேட் காட்டி இங்கு வா தருகிறேன் என ஏமாற்றுவது போல சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எங்களுக்கு வாக்களியுங்கள் நாங்கள் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு தருகிறோம் என ஒவ்வொரு தடவையும் ஏமாற்றியது.
காலஞ்சென்ற காங்கிரஸ் தலைவர்கள் சுதந்திரத்திற்கு பாடுபட்டனர்.மறுப்பதற்கில்லை.ஆனால் அதை பயன் படுத்தி சுதந்திரப் போரட்ட்த்திர்க்கே சம்பந்தம் இல்லாத இன்றைய தலைவர்கள் அதை கூறி ஓட்டுக் கேட்பது.இன்னும் நேரு இந்திரா பெயர் கூறி வாக்கு சேகரிப்பது ஆகியனவெல்லாம் இன்று மக்கள் கேட்க தயாராக இல்லை.இப்போது காங்கிரஸ் என்ன செய்து இருக்கிறது என்றுதான் பார்க்கிறார்கள்.
மோடிக்கு ஆதரவான அலை வீசியது என்ற பி ஜே பியின் கருத்தை மறுத்தாலும் காங்கிரஸுக்கு எதிரான அலை வீசியதை சோனியா கூட இப்போது மறுக்க மாட்டார் .
பத்து ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்த மன்மோகன் அடக்கமானவர்,பணிவானவர்,அமைதி யானவர் ,அதிர்ந்து பேசாதவர் என்று பிரிவு உபசார நிகழ்ச்சியில் பெருமையாக பேசப்பட்டது .
வரலாற்றில் அவர் அஸ்ஸாமில் முஸ்லிம்களுக்கு எதிரான இனப் படுகொலை நடந்த போது அமைதியாக இருந்தார்,தம் அமைச்சர்கள் ஊழல் செய்த போதும் எதிர்த்துக் கேட்காமல் இருந்தார்,சீக்கிய ,மற்றும் முஸ்லிம் படுகொலை செய்தவர்களிடம் மவுனமாக இருந்தார் ,கடைசியில் காங்கிரஸை தோல்விப் படுகுழியில் போட்டு அடக்கம் செய்தார் என பதியப் படும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாய்த்தமிழே

எங்களுக்கு சொந்தமானது

பயங்கரவாதம் - சிலுவை முதல் துப்பாக்கி வரை !