அவள் (மகளும், மனைவியும்)
முனைவர்.A. முஹம்மது அப்துல் காதர்
அவள் என்னோடு
என் இதயத்தோடு
எப்படி கலந்து இருந்தாள்
சரித்திரத்தின்
இடமும் காலமுமாய்
சமுத்திரத்தின்
ஆழமும் நீளமுமாய்
சரீரத்தின்
ரத்தமும் சதையுமாய்
இலக்கியத்தின்
எதுகையும் மோனையுமாய்
இலக்கணத்தின்
நிகழ்ந்து நிகழ்ந்து கடக்கும்
எதிர்காலமாய்
என் பயணத்தில் நயனமாய்
என் உயிரின் நளினமாய்
என்னை நகர்த்திக்
கொண்டே இருக்கும்
நவரச நங்கை
மேகமூட்டத்தில்
மெல்லிசையாய்
பெய்யும் மழை
அவளை எழுத
முயற்சிக்கிறேன்
என் மொழி
தடுமாறுகிறது
ஓயாமல் ஓடும்
நதியின் பேரழகை
ஒற்றைப் பார்வையில்
தோற்கடித்து விட்டாள்
மாலை நேரத்து சூரியனின்
மயக்கும் அழகை
தன் சிரிக்கும் விழிகளால்
சரித்து விட்டாள்
பௌர்ணமி
நிலவின் பரவசத்தை
தன் முக வசம்
வைத்துக்கொண்டாள்
கருத்துகள்
கருத்துரையிடுக