மருத்துவமனைகள்
மருத்துவமனைகள்
முதலில்
கல் மற்றும் மண்ணால்
கட்டப்படுகின்றன !
பின்னர்
மருத்துவர்களின் கல் மனத்தால்
அவை உயர்த்தப்படுகின்றன!
அவற்றின் தூண்கள்
நோயாளிகளின் எலும்புகள்
அவற்றின் அஸ்திவாரம்
நோயாளிகளின் சதைகள் !
முதல் மதிப்பெண் பெற்றவர்கள்
மருத்துவம் படித்து சேவை
செய்வேன் என்று பேட்டி கொடுத்தார்கள்
கடைசி வரை தேடிப் பார்க்கிறேன்
சேவை செய்யக்கூடிய மருத்துவரை
பெட்டி செய்தியாய் கூட பார்க்க
முடியவில்லை
கருத்துகள்
கருத்துரையிடுக