சாம்பிராணி பாய்
பாதுஷாவின் பரம்பரை
நாங்கள்!
இப்போது
பாதுஷா ஸ்வீட் சாப்பிடுகிறோம்!
அறுசுவையான முகல் பிரியாணி
இங்கே!
இந்தியாவை கட்டி ஆண்ட
பிரம்மாண்ட முகல் ராஜாக்கள் எங்கே?
உலகத்தையே ஆட்சி செய்த
துருக்கி உஸ்மானியர் வரலாறு
படிக்கவில்லை யாரும்!
உஸ்மானியா பிஸ்கட்
பிடிக்காதவர் இல்லை யாரும்!
மைசூர் பாக்கு தித்திப்பு
நாவில் இனிக்கும்!
மைசூர் திப்புவின்
தியாகம் கேட்க கூட கசக்கும்!
ஆண்ட பரம்பரை நாங்கள்
ஆண்டியாய் ஆகிவிட்டோம்
மகதூர்ஷா பரம்பரை
பக்கீர்சா பரம்பரையானது!
கணினியின் அல்காரிதம் தந்த
மூசா குவாரிஸ்மி
சரித்திரம் தெரியாது !
கன்னித்தீவின்
மூஸா மந்திரவாதி கதை
படிக்காதவர் கிடையாது!
சாம்பிராணி பாய் என்று
படத்தில் காட்டப்பட்டோம்!
பாம் வைப்பவராய்
இப்போது பத்திரிகையில் காட்டப்படுகிறோம்!
பாய் பிரியாணி பிடிக்கும் என எங்களிடத்தில் சொல்லப்பட்டது!
ஆனால் பாய் பிடிக்கும் என்று சொல்லப்படுவதில்லை!
நாங்கள் படிக்காததால்
எங்கள் பெருமை
எங்களுக்கே தெரியாது!
அவர்களுக்கு
எங்களை பிடிக்காததால்
எங்கள் வரலாற்றை
அவர்கள் சொல்வது கிடையாது!
கருத்துகள்
கருத்துரையிடுக