சூனியம் மூலம் பி ஜே தற்கொலையா ? கொலை முயற்சியா ?

 அண்மையில் தவ்ஹீத் ஜமாஅத்தின் சவாலை ஏற்று  மவ்லவி பி ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு சூனியம் வைக்க திருச்சியை சேர்ந்த அகோரி மணி கண்டன் என்பவர் முன்வந்துள்ளார்.அதன் மூலம் பி ஜே அவர்களை அவர் இறக்க செய்ய வேண்டும் என்றும் அப்படி இறந்தால் சூனியக் காரருக்கு 50 இலட்சம் தவ்ஹீத் ஜமாஅத் கொடுக்குமாம் .
குர்ஆனில் தெளிவாக வந்துள்ளது ஹாருத் மாருத் சூனியத்தை கற்றுக் கொடுத்து விட்டு இது ஒரு சோதனை இதில் வீழ்ந்து நிராகரிப்பாளர் ஆகி விடாதீர் என்று .சூனியக் காரர்கள் நபி மூஸா (அலை )முன் அவர்கள் தோல்வி அடைந்து ஈமான் கொண்டனர் என்று .நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப் பட்ட போது இரு குள் சூராக்கள் இறக்கப் பட்டு அவை நீக்கப் பட்டது என்று ஹதீஸில் வந்துள்ளது .சூனியக்காரர்கள் என்பதற்கு "சாஹிரூன் " என்ற அரபி வார்த்தை பயன் படுத்தப் பட்டுள்ளது .இன்று அல்ல என்று பயன் படுத்தினாலும் அதன் அர்த்தம் சூனியக் காரர்கள் என்பதுதான் .சூனியம் என்பது இருக்கிறது.அது முன்னால் செய்யப் பட்டது.இன்று வேண்டுமானால் அது  செயலன்றி இருக்கலாம் .எனினும் சூனியமே இல்லை என்று ஆகி விடாது .நாத்திகர் போன்று எதை எடுத்தாலும் மறுத்து  பேசும் மவ்லவி பி ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு  புரட்சியாளர் என்ற பட்டம் தரலாம் .சமூகத்தில் எதை எடுத்தாலும் மறுக்கக் கூடாது என்று பித் அத் மற்றும் கப்ர் வழிபாடுகளை நியாயப்படுத்தி ஷிர்க் - இணை வைப்பின் பக்கம் சுன்னத் ஜமாஅத்தை சேர்ந்த சிலர் போகவும் எதை எடுத்தாலும் மறுத்து தற்போதுஅதன் உச்சக் கட்டமாக குர்ஆனில் சூனியம் நடந்த நிகழ்வுகள் கூட இருக்க  சூனியம் என்பது இல்லை என்றுக் கூறி  தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் உள்ளவர்கள் குப்ர்  -நிராகரிப்பின் பக்கம் போகவும் பார்க்கிறோம் .ஆல்லாஹ் இந்த வழிகேடுகளை விட்டும் நம்மை காப்பாற்ற வேண்டும்.
பி ஜே அவர்கள் ஷைத்தான்,ஜின்,மலக்கு  ஆகியோரை அவர் பார்க்க வில்லை.இவர்களை கண் முன் காட்டுமாறு கூட பிற்காலத்தில் சவால் விடக் கூடும்.
முதலில் பி ஜே அவர்கள் பந்தயம் கட்டுவது எந்த நபி வழி என்று தெரியப் படுத்த வேண்டும் .சரி அவர் பந்தயம் கட்டுவது அவரது வழி அதை விட்டு விடுவோம்.ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் உழைப்பு ,இரத்தம் ,மற்றும் வியர்வையில் சேர்ந்த ஜகாத் மற்றும் ஸதகா தருமங்களை கொண்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் நிதியை சூனியக் காரனுக்கு பந்தயம் கட்ட இவருக்கு எப்படி மனசாட்சி வந்தது.மக்களிடம் அப்படிக் கேட்டா வசூல் செய்தார்கள் ?.
அவர் செய்த இந்திய அரசின் பத்திரத் தாளின் அந்த ஒப்பந்தம் செய்துள்ளார்.அது சட்டப் படி செல்லாதது (null and void )ஆகும் ,ஏனெனில் கொலை முயற்சி,கொலை செய்ய அனுமதி ஆகியன கொண்ட இந்த ஒப்பந்தம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது ஆகும்.மார்க்கப் படியும் முற்காலத்தில் யாரும் இது போன்று அறிவற்ற ஒப்பந்தங்கள் எதுவும் செய்ததாக ஆதாரம் எதுவும் இல்லை.
சூனியக்காரரிடம் இவர் செய்துள்ள ஒப்பந்தப் படி இவர் சூனியம் பீடிக்கப் பட்டு இறந்தால் (அல்லாஹ் அவரை காப்பாற்ற வேண்டும் ) இவரை பின்பற்றும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நிலை என்னாவது ? அவர்கள் அனைவரும் அகோரி மணிகண்டனுடன் சூனிய ஜமாஅத்தினை ஆரம்பித்து விடுவார்களா ?
அல்லது இதை பயன் படுத்தி இவரது எதிரிகள் (கொள்கை அல்லது தனிப் பட்ட அளவில் ) ஏதாவது அருகில் உள்ள நபர்களை வைத்தோ அல்லது மற்றவர்களை வைத்தோ இவரை கொன்று விட்டு சூனியக் காரன் மீது போட்டு விட்டால் ?
சூனியக் காரன் ஐம்பது இலட்சம் வேணாம் என்கிறார் ?அவர் அதை விட அதிக இலட்சம் பி ஜே வின் எதிரிகளிடம் வாங்கி இருந்தால் அது இல்லாத வேறு வகையில் உணவு, அவர் அறியா வண்ணம் விஷ ஊசி ,கிருமி, வாகனத்தை மேலே விட்டு தாக்குதல் ஆகியன மூலம் அவர் எதிரிகள் அல்லது சூனியக் காரன் மூலம் அவரை கொன்று விட்டால் ?
அப்படியே சூனியக் காரன் தோற்று பி ஜேவுக்கு எதுவும் நடக்காமல் இருந்தால் குர்ஆனில் சூனியம் பற்றிய வந்துள்ள வசனங்கள் அனைத்தையும்  பி ஜே மறுப்பாரா ? வரலாற்றில் நாம் பார்க்கும் போது சூனியம் பலித்தும் இருந்துள்ளது.பலிக்காமலும் இருந்துள்ளது .
மிகச் சிறந்த நாவன்மை,ஆதாரப்பூர்வமாக பேச்சு ,எளிமையாக மார்க்கத்தை மற்றவர்களுக்கு புரிய வைத்தல் என்று தொடங்கிய பி ஜே அவர்களின் கொள்கைப் பயணம் இன்று வீண் தர்க்கம், மக்களை குழப்புதல்,ஆதாரங்களை மறுத்தல் என்று திசை மாறிப் போகிறது.
பேருந்தில் ஓட்டுனர் கொஞ்சம் திசை மாறினாலும் அவர் மட்டுமல்ல பயணிகள் அனைவரும் இறக்க நேரிடும் .அதை விட முக்கியமான ஒரு கொள்கை இயக்கத்தின் இலட்சத்திற்கு மேற்ப் பட்டோர் அதன் தலைவர் வழி தவறும் போது அனைவரும் வழி தவற நேரிடும்.இது பி.ஜே விற்கும் தவ்ஹீத் ஜமாஅத்திர்க்கும் அதாவது பி ஜே ஜமாஅத்திர்க்கு மிகவும் பொருந்தும் .

திருச்சி A.முஹம்மது அபூதாஹிர் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாய்த்தமிழே

எங்களுக்கு சொந்தமானது

பயங்கரவாதம் - சிலுவை முதல் துப்பாக்கி வரை !