இஸ்ரேலிய அமெரிக்க தயாரிப்பு புறக்கணிப்பு நபி வழிப் படி சரியா?
செங்கிஸ்கான் என்னும் சகோதரர் பாலஸ்தீன் படுகொலைகளுக்கு எதிராக இஸ்ரேலிய
மற்றும் அமெரிக்கத் தயாரிப்புக்களை முஸ்லிம்கள் செய்யும் புறக்கணிப்பை நபி வழிப் படு தவறு என்று
வித்தியாசமான மற்றும் விபரீதமான கருத்தை முன் வைக்கிறார். இஸ்ரேலிய தயாரிப்புக்களை
புறக்கணிப்பது சரிதானா? என்ற அவரது கட்டுரைக்கு அவருக்கு நமது மறுப்பே இது.
நாம் புறக்கணிக்கும் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க பொருட்கள் எதுவும்
பெரும்பாலும் அத்தியாவசிய பொருட்கள் அல்ல
.பல பொருட்களுக்கு பதிலீட்டுப் பொருட்கள்
(alternative ) உள்ளது. இதனை
தடுப்பதால் இஸ்ரேலியர் ஒன்றும் செத்துப் போய் விட மாட்டார்கள்.
இஸ்ரேல் ஒன்றும் முறைப்படியான நாடோ மேலும் அவர்கள் அந்த பூமியின் பூர்வீக சமூகமோ கிடையாது .அவர்கள் பாலஸ்தீனரின் பூர்வீக பூமியை அபகரித்து அங்கே தங்கி மன்னின் மைந்தர்களான பாலஸ்தீனர்களை கொலை செய்கின்றனர் கூட்டமாக அங்கே கூடாரம் போட்டு தங்கி இருக்கும் கொலை கார கும்பலுக்கு பொருளாதாரம் வராமல் தடுக்க முயற்சிப்பதை சம்பந்தமேயில்லாமல் சமூகமாக வாழ்ந்த அமைப்பு முறையில் நபி அவர்கள் நடந்துக் கொண்ட முறையை உதாரணம் காட்டுவது தவறாகும்
இஸ்ரேல் ஒன்றும் முறைப்படியான நாடோ மேலும் அவர்கள் அந்த பூமியின் பூர்வீக சமூகமோ கிடையாது .அவர்கள் பாலஸ்தீனரின் பூர்வீக பூமியை அபகரித்து அங்கே தங்கி மன்னின் மைந்தர்களான பாலஸ்தீனர்களை கொலை செய்கின்றனர் கூட்டமாக அங்கே கூடாரம் போட்டு தங்கி இருக்கும் கொலை கார கும்பலுக்கு பொருளாதாரம் வராமல் தடுக்க முயற்சிப்பதை சம்பந்தமேயில்லாமல் சமூகமாக வாழ்ந்த அமைப்பு முறையில் நபி அவர்கள் நடந்துக் கொண்ட முறையை உதாரணம் காட்டுவது தவறாகும்
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இப்படி புறக்கணிப்பு செய்ய வில்லை என்று புதிய
விளக்கம் கொடுத்து இஸ்லாத்தில் பெயராலேயே சியோனிஸ
பயங்கராவாதிகளுக்கு பாலஸ்தீனர்களை படுகொலை செய்ய ஆதரவு கொடுப்பது போல் உள்ளது .
ஏதோ வித்தியாசமான விளக்கம் கொடுப்பதாக நினைத்து முஸ்லிம்களுக்கு எதிரான துரோகத்துக்கு
துணை புரியாதீர்கள்.இன்று வெளிப்படையாக உலகமே அறிந்த உண்மை இன்று சுட்டிக் காட்டப்
படும் புறக்கணிக்க வேண்டிய பொருட்களை தயாரிக்கும் கம்பெனிகள் இஸ்ரேலுக்கு ஆயுத பண
உதவி செய்கின்றன .அதன் மூலம் இஸ்ரேல் வளர்ச்சி பெற்று பாலஸ்தீன முஸ்லிம் மக்களை படுகொலை செய்கிறது.
“அன்று நபி (ஸல்) அவர்கள் காலத்தில் யூதர்கள் பொருட்களை புறக்கணிப்பு செய்ய
வில்லையாம். குறைஷிகள் மீது பொருளாதார தடை விதித்த போது நபி அவர்கள் தளர்த்தி தடை
விதித்தார்களாம்”
நன்றாக ஒரு விஷயத்தை புரிந்துக் கொள்ள வேண்டும்.. ஒரு நகரையே திறந்த வெளி
சிறையாக்கி அதில் பெண்கள், குழந்தைகள் மற்றும் பலஹீனமான மக்களை படுகொலை செய்து அந்த ஊருக்குள்
உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளே போவதை தடுத்து அந்த ஊரின்
மக்களின் வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிக் கூடங்கள், மின்சார நிலையங்கள் ஆகியவற்றினை
தரை மட்டமாக்கி மிகக் குரூரமான தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.அதைதான் நாம் அதனை தடுக்கும் அளவுக்கு நமக்கு வலிமை இல்லை.அல்லது
போக வழி இல்லை இப்போது ஒரே வழி நம்மால் முடிந்த அளவுக்கு மனசாட்சி இருந்தால் அதனை பொருளாதார
அளவிலாவது பாதிப்பை ஏற்ப் படுத்தலாம்.இன்று ஒட்டு மொத்த உலக முஸ்லிம் சமூகமும் புறக்கணிப்பு
செய்ததன் விளைவாக பெப்ஸி மற்றும் மாக்டோனாள்டு மிகவும் சரிவைச் சந்தித்து
இருக்கிறது என்பது சி .என் .என் தரும் செய்தி. சிந்தித்துப் பாருங்கள் நீங்கள்
அந்த ஊரில் இருந்திருந்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவர் அங்கு இருந்திருந்தால்
மற்றவர்கள் உங்கள் எதிரிகளுக்கு உதவி செய்கிறார்கள் உங்களை கொல்ல,உங்கள் குடும்பத்தை
அழிக்க,வீட்டை தரை மட்டமாக்க.
யூதர்கள் பொருட்களை நாம் புறக்கணிக்கிறோம்.அது சிறந்த முடிவுதான் அதே
நேரத்தில் இவ்வுலகில் அவர்களின் கண்டுப் பிடிப்புகளுக்கு அடிப்படையாக அமைந்த
முஸ்லிம் விஞ்ஞானிகளின் கண்டுப் பிடிப்புகள் மற்றும் அறிவியல் ஆய்வுகள் ஆகியவற்றை
அவர்கள் புறக் கணிக்க வில்லை அதன் மூலம்தான் அவர்கள் முன்னேறினார்கள் என்பது
குறிப்பிடத்தக்கது .எனவே நாம் தேவையற்றது ,பதிலீடு உள்ளது , புறக்கணிப்பின் மூலம்
நாம் ஜீவிக்க முடியும் என்ற நிலையில் உள்ள பொருட்களை புறக்கணிக்கலாம். புறக்கணிக்க
கூடாது என்பவர்கள் எதிரிகளை நேரடியாக தாக்க அல்லது தடுக்க தகுந்த ஆலோசனை தர
வேண்டும்.களத்தில் நின்று போராடவும் வேண்டும் .
மக்காவில் இருந்து சிரியாவிற்கு சென்றுக் கொண்டிருந்த குறைஷிகளின் வியாபார
கூட்டம் மதீனா அருகே தடுக்கப் பட்டுதான் பத்ரு போர் தொடங்கியது.இதன் நோக்கம் குறைசிகளுக்கு
பொருளாதார அளவில் இழப்பை உண்டாக்க வேண்டும் என்பதே.அவர்கள் முஸ்லிம்களை ஊரை விட்டே
வெளியேற்றினர்,பொருளாதார தடை விதித்தனர். மற்றும் படு கொலை செய்தனர்
இந்த வியாபாரக் கூட்டம் மிகப்பெரிய அளவில் குறைஷித் தலைவர்களுக்குரிய
செல்வங்களுடன் சென்று கொண்டிருந்தது. இவர்களிடம் 50,000 தங்க
நாணயங்களுக்குக் குறையாத அளவு வியாபாரப் பொருட்கள் 1,000 ஒட்டகங்களில்
வந்து கொண்டிருந்தன
அப்போது நபி (ஸல்) முஸ்லிம்களுக்கு அறிவிப்புச் செய்தார்கள். “இதோ...
குறைஷிகளின் வியாபாரக் கூட்டம் அவர்களது பொருட்களுடன் வருகிறது. அக்கூட்டத்தை
நோக்கி நீங்கள் புறப்படுங்கள். அல்லாஹ் அந்தப் பொருட்களை உங்களுக்கு அளிக்கக்
கூடும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
எனவே முஸ்லிம்கள் இஸ்ரேலிய அமெரிக்க தயாரிப்புக்களை புறக்கணிக்க வேண்டும்.குறிப்பாக இன்று பாலஸ்தீன மக்களை காப்பாற்ற வழி தேடிக் கொண்டிருக்கும் போது இஸ்ரேலியர்களை காப்பாற்ற உங்களை நீங்களே மறந்து உதவி செய்வதை விட்டும் விலகி இருக்கவும்.அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் வழியில் முஸ்லிம் சமூகம் தன்னால் முடிந்த அளவுக்கு இந்த அளவுக்காவது பொருட்கள் புறக்கணிக்கவாவது முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது.நீங்கள் அப்படி வாங்கினால் இஸ்ரேலியனை வாழ வைக்கிறீர்களோ இல்லையோ முஸ்லிம்களை கொல்ல உதவி செய்ய வில்லை நீங்களே கூலிப் படைக்கு பணம் கொடுத்து கொலை செய்வது போல பெப்சி காரனுக்கு பணம் கொடுத்து இஸ்ரேல்காரன் பாலஸ்தீன முஸ்லிமை கொலை செய்கிறீர்கள் .ஒரு முஸ்லிமை திட்டுவது பெறும் பாவமாகும.அவனை கொலை செய்வது இறைவனுக்கு மாறு (குப்ர் ) செய்வதாகும் .என்ற நபி மொழியையும் யார் ஒரு ஆத்மாவை கொலை செய்வாரோ உலகில் உள்ள அனைத்து மக்களையும் கொலை செய்தவர் போலாவார்.யார் ஓர் ஆத்மாவை வாழ வைப்பாரோ அவர் உலகில் உள்ள மக்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போலாவர் என்ற வசனத்தையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் -
-திருச்சி A,முஹம்மது அபூதாஹிர்
கருத்துகள்
கருத்துரையிடுக