இடுகைகள்

ஜூலை, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஓர் கிறிஸ்தவ சகோதரரின் அறியாமை

கத்தாரில் அரசு துறையில் பணிபுரியும் கேரள கிருஸ்தவ சமுதாயத்தை சார்ந்த ஜஸ்டின் கே வில்லியம்ஸ் என்பவர் . தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் எழுதிய ஒரு பதிவு (இஸ்ரேலில் மரணபடுகின்ற ஒரு யூதனுக்கு பதில் 112 முஸ்லிம்களை கொன்றாக வேண்டும் ) என்று பதிவு செய்தார். இதை கண்ட சில முஸ்லிம் சகோதரர்கள் இவரின் கம்பேனியின் உயர் அதிகாரியான பாலஸ்தீனருடம் இதை தெரியபடுத்தினர் உடனே கத்தார் காவல் நிலையத்தில் அந்த பாலஸ்தீன் உயர்அதிகாரி புகார் செய்தார் காவல் துறையினர் இவரை கைது செய்து இவரையும் இவர் மனைவி மக்களின் விசா (visa cancel) செய்து நாட்டிற்க்கு அனுப்பினர்… மிகவும் வருத்தமான உண்மை இவர்  எந்த யூதரை ஆதரிக்கிராரோ அந்த யூத இனத்தின் யூதாஸ் என்பவன் காட்டிக் கொடுத்து ஏரோது என்னும் யூத  அரசனால் அவர்களின் இயேசு (கிறிஸ்தவ நம்பிக்கைப் படி ) சிலுவையில் அறையப் பட்டார் .அதே போல் இயேசுவின் பரிசுத்தமான பிறப்பை இன்றும் இழிவுப் படுத்தி  பேசுபவர்கள் யூதர்கள்  .அவரை அவர்கள் ஏற்றுக் கொள்ளவுமில்லை .ஆனால் அதற்க்கு நேர்மாறாக முஸ்லிம் சமூகம் இயேசுவின் பிறப்பை பரிசுத்தமானது என்கிறது .அவரை இறைதூதராக ஏற்றுக் கொள்ளாதவன்...

பெருநாள் செய்தி

மவ்லவி M. அப்துன் நாஸிர் மன்பஈ இமாம்,ஜைலானியா மஸ்ஜித்,திருச்சி ரமலான் விடைப் பெற்று விட்டதா? நாம் அதை விட்டு விடை பெற்று விட்டோமா என கேட்டால் நிச்சயம் ரமலான் ஒவ்வொரு வருடமும் திரும்ப வரும்.நாம் எதிர்காலத்தில் நமக்கு அல்லாஹ் விதித்திருக்கும் ஆயுளை வைத்து நாம்தான் ரமலானை விட்டும் விடை பெறுவோம் என்பதுதான் பதிலாகும்.அல்லாஹ்விடம் நாம் மீண்டும் மீண்டும் அதிக ரமலான் மாதங்கள் அடைய துஆ செய்வோம். ரமலானில் பல வணக்கங்கள் புரிந்தோம். பல நற்செயல்கள் செய்தோம். பழக்க வழக்கங்கள் கூட நளினம் மற்றும் நன்மைக்குரியதாக இருந்தன.இவையெல்லாம் ரமளானின் அமல்களாக இருக்கலாம்.ஆனால் அவையெல்லாம் நம் வாழ்வு முழுவதும் பிரதிபலிக்க வேண்டியதாக இருக்க வேண்டும். பழங்களுக்கு சீசன் இருக்கலாம் ,ஆனால் நல்ல பழக்க வழக்கங்களுக்கு சீசன் இருக்க கூடாது .வாழ்வு முழுவதும் வர வேண்டும். ரமலான் மாத நோன்பு மற்றும் மற்ற அமல்கள் மூலம் ஈருலகிலும் மனிதனின் நன்மை பெற அல்லாஹ் நாடுகிறான்.அதைதான் அவன் தன் வேதம் மூலமும் தனது நபி மூலமும் கட்டளையிடுகிறான். ரமலான் மாத நோன்பிற்கு அல்லாஹ்வே கூலியாகிறான்.மனிதன் செய்யக் கூடிய ஒவ்வொரு நற்செயலுக...

லைலத்துல் கத்ர் இரவு

லைலத்துல் கத்ர் இரவு ரமலான் மாதம் நோன்பு கடமையாக்கப் பட்டது நீங்கள் பயபக்தியுடை யோராக ஆவதற்கே என்று கூறுகிறது குர்ஆன். யார் ஈமானுடனும் நன்மையை எதிர்ப் பார்த்தும் ரமலானில் நோன்பு நோற்ப்பாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். ரமலானில்  நோன்பு மட்டுமல்லாது தருமங்கள் செய்தல் ,குர்ஆன் ஓதுதல்,இரவு வணக்கங்கள் புரிதல்,இன்னும் உம்ரா செய்தல் என வேறு பல நன்மையான காரியங்கள் செய்யவும் சமூகத்தை அறிவுறுத்தி பல நபி மொழிகள் பேசுகின்றன.நன்மைகளின் பருவக்காலமான ரமலானில் இன்னும் அதன் உச்சக் கட்டமாக கடைசிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் நின்று வணங்கி,பாவமன்னிப்பு கேட்டு   “லைலத்துள் கத்ர் “ என்னும் இரவை அடைந்து மனிதன் தன் வாழ்வினை பரிசுத்தப் படுத்திக் கொள்வதன் மூலம் இன்னும் அவன் அபரிதமான நன்மைகளை பெற்று சுவனம் செல்லும் அறிய வாய்ப்பினை பெறுகிறான். மிகவும் குறுகிய காலங்களின் சில இரவுகளின் அவன் செய்யும் வணக்கங்கள்,ஆம் அவை   பெற்றுத் தருவதோ ஆயிரம் மாதங்கள் நின்று வணங்கிய நன்மைகளை.மனிதனின் குறுகிய ஆயுள் காலம், உடல் வலிமை அவனின் உலக த...

இஸ்லாம் காஃபிர்களை கண்ட இடத்தில் வெட்டச்சொல்கிறதா? இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் -மூர்க்கத்தனத்தையும் தூண்டுகிறதா?

ஜாகிர் நாயக் பதில்  கேள்வி  காஃபிர்களை கண்ட இடத்தில் வெட்டுங்கள். அவர்களை கொலை செய்யுங்கள் என்று சொன்னதின் மூலம் - இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் - மூர்க்கத்தனத்தையும் தூண்டுவதாக இல்லையா ? பதில் : இஸ்லாம் வன்முறையை தூண்டக் கூடிய மார்க்கம் என்னும் கட்டுக் கதையை நிலைநிறுத்த வேண்டி - அருள்மறை குர்ஆனில் ஒருசில தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களை தவறுதலாக புரிந்து கொண்டு - இஸ்லாமியர்களுக்கு - இஸ்லாம் அல்லாதவர்களை கொல்லச்சொல்லி வற்புறுத்துவதாக சொல்கிறார்கள். 1. அருள்மறை குர்ஆனின் வசனம்: இஸ்லாத்தை விமரிசிப்பவர்கள் அருள்மறை குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் ஸுரத்துத் தௌபாவின் 05 வது வசனத்தின் ஒரு பகுதியை மாத்திரம் எடுத்துக் கொண்டு இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் - மூர்க்கத்தனத்தையும் தூண்டக் கூடிய மார்க்கம் என்பதற்கு ஆதாரமாக காட்டப்படுகிறார்கள். ' முஷ்ரிக்குகளை (இறைவனுக்கு இணைவைப்பவர்களையும் , இறை மறுப்பாளர்களையும்) கண்ட இடங்களில் வெட்டுங்கள ் ' என்கிற வசனம்தான் அது. 2. மேற்படி வசனம் போர்ச் சூழலில் சொல்லப்படுகிற வசனம்: இஸ்லாத...

குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதா? உஸ்மான் (ரலி) அவர்களால் தொகுப்பட்ட பிரதிதானே தற்போதுள்ள குர்ஆன்?.

ஜாகிர் நாயக் பதில்கள்  கேள்வி எண் 1. குர்ஆனின் பல பிரதிகள் உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் ; உஸ்மான் (ரலி) அவர்களால் எரிக்கப்பட்டது. குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதல்ல. மாறாக உஸ்மான் (ரலி) அவர்களால் தொகுப்பட்ட பிரதிதானே தற்போதுள்ள குர்ஆன் ?. பதில் : இஸ்லாத்தின் மூன்றாவது கலிபா உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் ஒன்றுக் கொன்று முரண்பட்ட பல குர்ஆனின் பிரதிகளை தொகுத்து ஒரே குர்ஆனாக உருவாக்கப் பட்டதுதான் இன்றைய அருள்மறை என்பது , குர்ஆனை பற்றி உலவுகின்ற கட்டுக்கதைகளில் ஒன்று. எந்த அருள்மறை முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்டதோ அதே அருள்மறைதான் , இஸ்லாமிய உலகத்தினரால் பெரிதும் போற்றி மதிக்கப்படும் அல்லாஹ்வின் வேதமாக இன்றும் இவ்வுலகில் திகழ்கின்றது. இன்றைக்கு இருக்கும் அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட ஒன்று. கட்டுக்கதைக்கான ஆணிவேர் எது என்று நாம் இப்போது ஆய்வு செய்வோம். 1. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் தொகுக்கப்பட்டு , அவர்களால் சரிபார்க்கவும் பட்டதுதான் இ...

கல்லும் மரமும் யூதனை காட்டிக் கொடுக்கும் நாளுக்கு காத்திருப்போரே

கல்லும் மரமும் யூதனை காட்டிக் கொடுக்கும் நாளுக்கு காத்திருப்போரே! உங்கள் மனம் கல்லாய் ஆகிவிட்டது. உங்கள் உடல் மரமாய் ஆகி விட்டது. அதற்கென்று அக்கிரமக்காரர்கள் அநீதியை எதிர்த்துப் போராட இறைவா நீ எங்களுக்கு உதவி செய் என்று பாதிக்கப் பட்டோர் பிரார்த்திக்க உங்களுக்கு இறைப்பாதையில் போராடாமல் இருக்க என்ன நேர்ந்தது என்ற குர்ஆனின் வசனம் என்ன மறந்தா போய் விட்டது? . மவுனமாய் இருக்கிறீரா ? மயானத்தில் அடக்கமாகி இருக்கிறீரா ? மறுமை நம்பிக்கையில்லாதவன் கூட தன் வர்க்கம் காக்க உயிர் கொடுக்கிறான் ! ஈமான் கொண்டவனே ஏன் சுவர்க்கம் நிச்சயம் உனக்கிருக்க ஏன் உயிர் தர மறுக்கிறாய்! நீ பெருநாளுக்கு புத்தாடை இங்கே தேடிக் கொண்டிருக்கிறாய் அதோ பலஸ்தீனில் உன் சகோதரர்களுக்கும் ,சகோதரிகளிக்கும் கபனாடை அணிவிக்கப் பட்டு கொண்டிருக்கிறது. நீ வீடு கட்டி கொண்டிருக்கிறாய் அதோ அவர்களின் வீடு இடிக்கப் பட்டு கொண்டிருக்கிறது! திருச்சி A .முஹம்மது அபூதாஹிர் 

பயங்கரவாதம் - சிலுவை முதல் துப்பாக்கி வரை !

 அனைத்து நாடுகளும் சுதந்திர தினம் கொண்டாடும் வேளையில் ஒரு நாடு அடிமைப் படுத்தப்பட்டுக் கிடக்கிறது !  நாஸிசத்தால்  விரட்டப் பட்ட சமூகம் , சியோநிசத்தால்  அடுத்த சமூகத்தை கொடுமைப் படுத்துகிறது !  வந்தேறிகள் அந்த பூமிக்கு வாரிசுகளானார்கள் ! சொந்த பூமிகாரர்கள் அகதிகளாய் ஆனார்கள் !  வெள்ளை அங்கி வாடிகனே ! வெள்ளை மாளிகை வாஷிங்டனே ! இயேசுவின் ரத்தம் உலக மக்களின் பாவங்களுக்காக சிந்தப்பட்டது எனில் (கிறிஸ்தவ நம்பிக்கைப் படி ) இயேசு பிறந்த பூமியில் பிஞ்சு சிசுக்களின் ரத்தம் யாரின் பாவத்திற்காக சிந்தப் படுகிறது? பயங்கரவாதம் சிலுவையில் தொடங்கி துப்பாக்கிகள் வரை !  ஏரோது மன்னன் தொடங்கி யஹுத் பராக் வரை !  சமாதான பிரபுவின் வாரிசுகளே ! சிலுவை மரணம் மட்டும்தான் துயரமானதா? ஜெருசலத்தில் இயேசு இரத்தம் சிந்தப்பட்டது மட்டும்தான் கொடூரமானதா?  துப்பாக்கிகளால் கொல்லப்படும் பச்சிளம் குழந்தைகள் உயிர்கள்? பீரங்கிகளால் தாக்கப்பட்டு பீச்சிட்டு வரும் அப்பாவி மக்களின் இரத்தங்கள் ? உங்கள் கண்ணுக்கு தெரிவதில்லையா ? அல்லது நீங்கள் க...

மனசாட்சி உள்ளவர்களுக்கு மட்டும் !

மனசாட்சியுள்ள மக்களே மதம் பார்க்காதீர்கள் .தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது என்று அடிக்கடி நியாயம் பேசும் மக்களே இதோ ஏன்  பலஸ்தீனில் பாதிக்கப் பட்டவர்கள் மற்றும் படுகொலை செய்யப் பட்டவர்களுகள் முஸ்லிம்கள் எனில்  கண்ணீர் வடிக்க அந்தப் படுகொலையை கண்டிக்க மட்டும் ஏன் மதம் பார்க்கிறீர்கள் ? ஏன் மனிதம் பார்க்க வேண்டியதுதானே ?  நாம்  நம்மை அடிமைப் படுத்திய ஆங்கிலேயனை எதிர்த்துப் போராடிய நம் மக்களை நமது எதிரிகளான ஆங்கிலேய கொலைகார கூட்டம் பயங்கரவாதிகள் என அழைத்தாலும் நாம் அவர்களை சுதந்திரப் புருஷர்களாக பார்க்கிறோம்.போராளிகள் என அழைக்கிறோம்.ஏன் பலஸ்தீனில் அதே ஆங்கிலேய மற்றும் அமெரிக்க இரத்தக் காட்டேறிகள்  பலஸ்தீனை ஐ நா என்னும் அயோக்கிய சபை மூலம் பிரித்து அங்கு யூதர்களை குடியமர்த்தி அந்த மண்ணின் மைந்தர்களான பாலஸ்தீனர்களை பச்சிளம் குழந்தைகள் முதல் பெண்கள் ,முதியவர்கள்,இளைஞர்கள் என அனைவரையும் படுகொலை செய்கிறார்கள்.தாங்கள் நாட்டின் பட்ஜெட்டில் இஸ்ரேல் காரன் பாலஸ்தீன் மக்களை படுகொலை செய்ய பயங்கர ஆயுதங்கள் செய்ய நிதியுதவி செய்கிறார்கள் .ஆயுதங்கள் அள்ளிக் கொடுக்கிறார்கள்.அவர்கள் ...

பாலஸ்தீன் - முஸ்லிம்களின் பிரச்சினையா ?

பலஸ்தீனப் பிரச்சினையை ஏதோ முஸ்லிம்களின் பிரச்சினை என்பதுப் போலதான் இதன் உண்மை நிலைப்  பற்றி அறியாத எமது பல  சகோதரர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அது மட்டுமல்ல அங்கு இஸ்ரேலிய பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப் பட்ட பலஸ்தீன மக்கள்,பாதிக்கப் பட்ட மக்கள் கூட அவர்களின் இந்த நிலை அவர்களுக்கு நியாயமானது.அவர்கள் பயங்கரவாதிகள் கொல்லப் படுவது தவறில்லை என்ற விஷ சிந்தனையை ஊடகங்கள் மக்களின் மனத்தில் ஊட்டி அதை நிலைக்கவும் செய்து விட்டன.ஹிட்லரின் யூதப் படுகொலை,இலங்கை தமிழர் படுகொலை,பாகிஸ்தான் தேவாலயத்தில் இரண்டு கிறிஸ்தவர்கள் சுட்டுக்கொலை,உலக வர்த்தக மையம் தகர்ப்பு  என பத்திரிக்கை எதனை பிரின்ட் செய்கின்றனவோ அவை மட்டுமே மனித குலத்தின் பிரச்சினையாக பார்க்கப் படுகிறது.பாலஸ்தீன் பிரச்சினை முஸ்லிம்களின் பிரச்சினை அல்ல இது மனித குலத்தின் பிரச்சினை .நாகரீக சமூகம் மீது காட்டுமிராண்டிகள் தொடுத்துள்ள போர்.கருணை இரக்கம் அன்பு மனிதாபிமானம் ஆகியவற்றின் எதிரிகள்,இனம் , மத மற்றும் இரத்த வெறி பிடித்த யூதர்கள் அமெரிக்காவின் ஆசியுடன் நடத்தும் ஏன் அமெரிக்காவே நடத்தும் முஸ்லிம் சமூகம் மீதான  மறைமு...

காந்தியின் தேசமே ஏன் மவுனம் ? நரேந்திர மோடி அவர்களே தங்கள் கவனம் !

நம் தேசப் பிதா காந்திஜியிடம் யூதர்கள் இஸ்ரேல் நாட்டுக்கு ஆதரவு தருமாறு கோரிக்கை வைத்த  போது அவர் மறுத்து விட்டார் .யார் யார் எந்த தேசத்தில் பிறந்தார்களோ அந்த தேசத்திற்கே  அவர் சொந்தம் கொண்டாட முடியுமே தவிர அடுத்த நாட்டை ஆக்கிரமித்து அங்கு சொந்த தேசமாக உரிமை கோருவது முடியாது என்றார் மகாத்மா .அங்கு குடியேறியுள்ள யூதர்கள் (அந்த பூமியின் பூர்வீக யூதர்கள் ஒரு சதவீதத்தை தவிர்த்து ) அனைவரும் அமெரிக்கா ,ஜெர்மனி ,பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாட்டில் இருந்து அங்கு வந்தவர்களே நமது தேசத்தின் அனைத்து தலைவர்களும் ராஜீவ காந்தி வரை இந்தியா இஸ்ரேல் என்னும் கள்ள தேசத்தை  அங்கீகரிக்க வில்லை .ஆனால் நரசிம்மராவின் ஆட்சியில்தான் இஸ்ரேலை இந்தியா அங்கீகரித்தது மட்டுமல்லதூதரக உறவையும் தொடங்கியது .நாம் ஓர் ஆக்கிரமிப்பிடம் ஆங்கிலேய கொலைகார கொள்ளை கார கூட்டத்திடம் இருந்து விடுதலை பெற்ற நாற்பதுகளில் பாலஸ்தீன் தேசம் ஐ நா என்ற உலக கட்டப் பஞ்சாயத்து மேலும் ஆங்கிலேய இரத்த வெறிப் பிடித்து நாய்களால் பறிக்கப் பட்டு ஒரு சிறு கோடு போட்டு பிரிக்கப் பட்டு உலகம் முழுவதும் இருந்து வந்த யூதர்களுக்கு இஸ்ரேல் என்னு...