அந்தக் கண்கள்
திருச்சி A.முஹம்மது அபூதாஹிர்
தோஹா – கத்தார்
(நாளை எனது அன்னையாருக்கு கண் அறுவை சிகிச்சை நடை பெற இருக்கிறது .
நல்ல தெளிவான கூரிய பார்வை கிடைக்க அவருக்கு துஆ – செய்யுங்கள் )
Ø
என்னை சுமையாக
அல்ல
அவர் பார்த்துகொண்டது
அவரது
கண் இமையாக !
Ø
அந்தக் கண்கள்
இப்போது பார்வை கொஞ்சம் மங்கலாய்
தெரிகிறது !
அதை அறிந்த நாட்களில் இருந்து
எனக்கு நெஞ்சத்தில்
கவலையாய் வருகிறது !
Ø
இரவுகளில் ஆழ்ந்த உறக்கத்தில்
என் கண்கள் இருந்த போது
அவரது கண்கள் இரக்கத்தோடு
எனக்காக விழித்திருந்தது !
Ø
பள்ளிக்குப் போய் விட்டு
நான் வீட்டுக்கு வரும் நேரம்
வாசலில் எதிர்ப் பார்த்து
ஆவலோடு அவரது கண்கள் காத்திருந்தது !
Ø
காணாமல் நான் போன போதும்
என் கால் ஊனமாய் ஆன போதும்
அந்தக் கண்கள்தான் கண்ணீரை சொரிந்தது !
Ø
துன்பங்கள் என்னை ,
துரத்திய தருணங்களில்
அன்பான அந்தக் கண்கள்
கருணையை சொரிந்தது
Ø
சாப்பிடும் நேரம்
சரியாக சாப்பிடுகிறேனா என்று
கவனமாய்
அந்தக் கண்கள்தான் பார்த்துக் கொண்டது !
Ø
படிக்கும் நேரம்
பக்கத்தில் அமர்ந்து
பரிவாய்
அந்தக் கண்கள்தான் பார்த்துகொண்டது !!
Ø
ஆம் அவை
என் அன்பு அன்னையின் கண்கள் !
(ஏதாவது கண் படம் இந்தக்
கவிதைக்கு போடலாம் என நினைத்தேன் .
எனினும் அவை எதுவும் என் அன்னையின் கண்ணாக இல்லாததால் போடாமல்
தவிர்த்தேன். நிஜமான அந்தக் கண்களுக்கு நிழற்படத்தில் கற்பனையாக எந்தக் கண்களும்
போட விரும்பவில்லை )
கருத்துகள்
கருத்துரையிடுக