A. முஹம்மது அபூதாஹிர் thahiruae@gmail.com குர்ஆன் படைப்பாளன், வணக்கத்திற்குரியவன்”.அல்லாஹ் ஒருவனே “என்கிறது,அவன் எந்தத் தேவையுமற்றவன், அவனுக்கு நிகர் யாருமில்லை.அவனுக்கு பெற்றோர் கிடையாது,அவனுக்கு பிள்ளைகளும் கிடையாது. என்கிறது. மனிதர்கள் அல்லாஹ்வை விட்டு விட்டு அடியார்கள்,இயற்கையின் பொருட்கள், சிலைகள்,சமாதிகள் எவற்றின் முன்னும் மண்டியிடக் கூடாது.மேலும் எவற்றிடமும் யாரிடமும் பிரார்த்தனை செய்திடவும் கூடாது என்பது குர்ஆன் கூறும் ஏகத்துவத்தின் சாராம்சமாகும். குர்ஆன் மனித குலம் அனைத்தும் ஒரே ஆத்மாவில் இருந்து படைக்கப் பட்டது.அவற்றில் இருந்து ஆண் பெண் இரு பாலரையும் அல்லாஹ்படைத்தான்.மனிதர்களில் மிகச் சிறந்தவர் இறையச்சம் உடையவரே என்கிறது குர்ஆன் . மனிதர்கள் சிந்திக்க வேண்டும். பரந்த பூமி ,விரிந்த வானம், உயர்ந்த மலைகள் ,அருந்தும் நீர், அவன் சாப்பிடும் கனிகள்,அவன் படைக்கப் பட்ட விதம் ஆகியன ஒவ்வொன்று குறித்தும் அவன் சிந்திக்க வேண்டும்.சிந்திக்க மாட்டீர்களா என குர்ஆன் பல இடங்களில் கேட்பது கேள்வி மட்டுமல்ல ,சிந்திக்க அழைப்பும...