இடுகைகள்

2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சூனியம் மூலம் பி ஜே தற்கொலையா ? கொலை முயற்சியா ?

  அண்மையில் தவ்ஹீத் ஜமாஅத்தின் சவாலை ஏற்று  மவ்லவி பி ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு சூனியம் வைக்க திருச்சியை சேர்ந்த அகோரி மணி கண்டன் என்பவர் முன்வந்துள்ளார்.அதன் மூலம் பி ஜே அவர்களை அவர் இறக்க செய்ய வேண்டும் என்றும் அப்படி இறந்தால் சூனியக் காரருக்கு 50 இலட்சம் தவ்ஹீத் ஜமாஅத் கொடுக்குமாம் . குர்ஆனில் தெளிவாக வந்துள்ளது ஹாருத் மாருத் சூனியத்தை கற்றுக் கொடுத்து விட்டு இது ஒரு சோதனை இதில் வீழ்ந்து நிராகரிப்பாளர் ஆகி விடாதீர் என்று .சூனியக் காரர்கள் நபி மூஸா (அலை )முன் அவர்கள் தோல்வி அடைந்து ஈமான் கொண்டனர் என்று .நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப் பட்ட போது இரு குள் சூராக்கள் இறக்கப் பட்டு அவை நீக்கப் பட்டது என்று ஹதீஸில் வந்துள்ளது .சூனியக்காரர்கள் என்பதற்கு "சாஹிரூன் " என்ற அரபி வார்த்தை பயன் படுத்தப் பட்டுள்ளது .இன்று அல்ல என்று பயன் படுத்தினாலும் அதன் அர்த்தம் சூனியக் காரர்கள் என்பதுதான் .சூனியம் என்பது இருக்கிறது.அது முன்னால் செய்யப் பட்டது.இன்று வேண்டுமானால் அது  செயலன்றி இருக்கலாம் .எனினும் சூனியமே இல்லை என்று ஆகி விடாது .நாத்திகர் போன்று எதை எடுத்தாலும் மறுத்து...

இஸ்ரேலிய அமெரிக்க தயாரிப்பு புறக்கணிப்பு நபி வழிப் படி சரியா?

செங்கிஸ்கான் என்னும் சகோதரர் பாலஸ்தீன் படுகொலைகளுக்கு எதிராக இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கத் தயாரிப்புக்களை முஸ்லிம்கள்  செய்யும் புறக்கணிப்பை நபி வழிப் படு தவறு என்று வித்தியாசமான மற்றும் விபரீதமான கருத்தை முன் வைக்கிறார். இஸ்ரேலிய தயாரிப்புக்களை புறக்கணிப்பது சரிதானா? என்ற அவரது கட்டுரைக்கு அவருக்கு நமது மறுப்பே இது. நாம் புறக்கணிக்கும் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க பொருட்கள் எதுவும் பெரும்பாலும் அத்தியாவசிய  பொருட்கள் அல்ல .பல பொருட்களுக்கு பதிலீட்டுப் பொருட்கள்  ( alternative ) உள்ளது. இதனை தடுப்பதால் இஸ்ரேலியர் ஒன்றும் செத்துப் போய் விட மாட்டார்கள். இஸ்ரேல் ஒன்றும் முறைப்படியான நாடோ மேலும் அவர்கள் அந்த பூமியின் பூர்வீக சமூகமோ கிடையாது .அவர்கள் பாலஸ்தீனரின் பூர்வீக பூமியை அபகரித்து அங்கே தங்கி மன்னின்  மைந்தர்களான பாலஸ்தீனர்களை கொலை செய்கின்றனர் கூட்டமாக அங்கே கூடாரம் போட்டு தங்கி இருக்கும் கொலை கார கும்பலுக்கு பொருளாதாரம் வராமல் தடுக்க முயற்சிப்பதை சம்பந்தமேயில்லாமல் சமூகமாக வாழ்ந்த அமைப்பு முறையில் நபி அவர்கள் நடந்துக் கொண்ட முறையை உதாரணம் காட்டுவது தவறாகும் நப...

ஓர் கிறிஸ்தவ சகோதரரின் அறியாமை

கத்தாரில் அரசு துறையில் பணிபுரியும் கேரள கிருஸ்தவ சமுதாயத்தை சார்ந்த ஜஸ்டின் கே வில்லியம்ஸ் என்பவர் . தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் எழுதிய ஒரு பதிவு (இஸ்ரேலில் மரணபடுகின்ற ஒரு யூதனுக்கு பதில் 112 முஸ்லிம்களை கொன்றாக வேண்டும் ) என்று பதிவு செய்தார். இதை கண்ட சில முஸ்லிம் சகோதரர்கள் இவரின் கம்பேனியின் உயர் அதிகாரியான பாலஸ்தீனருடம் இதை தெரியபடுத்தினர் உடனே கத்தார் காவல் நிலையத்தில் அந்த பாலஸ்தீன் உயர்அதிகாரி புகார் செய்தார் காவல் துறையினர் இவரை கைது செய்து இவரையும் இவர் மனைவி மக்களின் விசா (visa cancel) செய்து நாட்டிற்க்கு அனுப்பினர்… மிகவும் வருத்தமான உண்மை இவர்  எந்த யூதரை ஆதரிக்கிராரோ அந்த யூத இனத்தின் யூதாஸ் என்பவன் காட்டிக் கொடுத்து ஏரோது என்னும் யூத  அரசனால் அவர்களின் இயேசு (கிறிஸ்தவ நம்பிக்கைப் படி ) சிலுவையில் அறையப் பட்டார் .அதே போல் இயேசுவின் பரிசுத்தமான பிறப்பை இன்றும் இழிவுப் படுத்தி  பேசுபவர்கள் யூதர்கள்  .அவரை அவர்கள் ஏற்றுக் கொள்ளவுமில்லை .ஆனால் அதற்க்கு நேர்மாறாக முஸ்லிம் சமூகம் இயேசுவின் பிறப்பை பரிசுத்தமானது என்கிறது .அவரை இறைதூதராக ஏற்றுக் கொள்ளாதவன்...

பெருநாள் செய்தி

மவ்லவி M. அப்துன் நாஸிர் மன்பஈ இமாம்,ஜைலானியா மஸ்ஜித்,திருச்சி ரமலான் விடைப் பெற்று விட்டதா? நாம் அதை விட்டு விடை பெற்று விட்டோமா என கேட்டால் நிச்சயம் ரமலான் ஒவ்வொரு வருடமும் திரும்ப வரும்.நாம் எதிர்காலத்தில் நமக்கு அல்லாஹ் விதித்திருக்கும் ஆயுளை வைத்து நாம்தான் ரமலானை விட்டும் விடை பெறுவோம் என்பதுதான் பதிலாகும்.அல்லாஹ்விடம் நாம் மீண்டும் மீண்டும் அதிக ரமலான் மாதங்கள் அடைய துஆ செய்வோம். ரமலானில் பல வணக்கங்கள் புரிந்தோம். பல நற்செயல்கள் செய்தோம். பழக்க வழக்கங்கள் கூட நளினம் மற்றும் நன்மைக்குரியதாக இருந்தன.இவையெல்லாம் ரமளானின் அமல்களாக இருக்கலாம்.ஆனால் அவையெல்லாம் நம் வாழ்வு முழுவதும் பிரதிபலிக்க வேண்டியதாக இருக்க வேண்டும். பழங்களுக்கு சீசன் இருக்கலாம் ,ஆனால் நல்ல பழக்க வழக்கங்களுக்கு சீசன் இருக்க கூடாது .வாழ்வு முழுவதும் வர வேண்டும். ரமலான் மாத நோன்பு மற்றும் மற்ற அமல்கள் மூலம் ஈருலகிலும் மனிதனின் நன்மை பெற அல்லாஹ் நாடுகிறான்.அதைதான் அவன் தன் வேதம் மூலமும் தனது நபி மூலமும் கட்டளையிடுகிறான். ரமலான் மாத நோன்பிற்கு அல்லாஹ்வே கூலியாகிறான்.மனிதன் செய்யக் கூடிய ஒவ்வொரு நற்செயலுக...

லைலத்துல் கத்ர் இரவு

லைலத்துல் கத்ர் இரவு ரமலான் மாதம் நோன்பு கடமையாக்கப் பட்டது நீங்கள் பயபக்தியுடை யோராக ஆவதற்கே என்று கூறுகிறது குர்ஆன். யார் ஈமானுடனும் நன்மையை எதிர்ப் பார்த்தும் ரமலானில் நோன்பு நோற்ப்பாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். ரமலானில்  நோன்பு மட்டுமல்லாது தருமங்கள் செய்தல் ,குர்ஆன் ஓதுதல்,இரவு வணக்கங்கள் புரிதல்,இன்னும் உம்ரா செய்தல் என வேறு பல நன்மையான காரியங்கள் செய்யவும் சமூகத்தை அறிவுறுத்தி பல நபி மொழிகள் பேசுகின்றன.நன்மைகளின் பருவக்காலமான ரமலானில் இன்னும் அதன் உச்சக் கட்டமாக கடைசிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் நின்று வணங்கி,பாவமன்னிப்பு கேட்டு   “லைலத்துள் கத்ர் “ என்னும் இரவை அடைந்து மனிதன் தன் வாழ்வினை பரிசுத்தப் படுத்திக் கொள்வதன் மூலம் இன்னும் அவன் அபரிதமான நன்மைகளை பெற்று சுவனம் செல்லும் அறிய வாய்ப்பினை பெறுகிறான். மிகவும் குறுகிய காலங்களின் சில இரவுகளின் அவன் செய்யும் வணக்கங்கள்,ஆம் அவை   பெற்றுத் தருவதோ ஆயிரம் மாதங்கள் நின்று வணங்கிய நன்மைகளை.மனிதனின் குறுகிய ஆயுள் காலம், உடல் வலிமை அவனின் உலக த...

இஸ்லாம் காஃபிர்களை கண்ட இடத்தில் வெட்டச்சொல்கிறதா? இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் -மூர்க்கத்தனத்தையும் தூண்டுகிறதா?

ஜாகிர் நாயக் பதில்  கேள்வி  காஃபிர்களை கண்ட இடத்தில் வெட்டுங்கள். அவர்களை கொலை செய்யுங்கள் என்று சொன்னதின் மூலம் - இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் - மூர்க்கத்தனத்தையும் தூண்டுவதாக இல்லையா ? பதில் : இஸ்லாம் வன்முறையை தூண்டக் கூடிய மார்க்கம் என்னும் கட்டுக் கதையை நிலைநிறுத்த வேண்டி - அருள்மறை குர்ஆனில் ஒருசில தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களை தவறுதலாக புரிந்து கொண்டு - இஸ்லாமியர்களுக்கு - இஸ்லாம் அல்லாதவர்களை கொல்லச்சொல்லி வற்புறுத்துவதாக சொல்கிறார்கள். 1. அருள்மறை குர்ஆனின் வசனம்: இஸ்லாத்தை விமரிசிப்பவர்கள் அருள்மறை குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் ஸுரத்துத் தௌபாவின் 05 வது வசனத்தின் ஒரு பகுதியை மாத்திரம் எடுத்துக் கொண்டு இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் - மூர்க்கத்தனத்தையும் தூண்டக் கூடிய மார்க்கம் என்பதற்கு ஆதாரமாக காட்டப்படுகிறார்கள். ' முஷ்ரிக்குகளை (இறைவனுக்கு இணைவைப்பவர்களையும் , இறை மறுப்பாளர்களையும்) கண்ட இடங்களில் வெட்டுங்கள ் ' என்கிற வசனம்தான் அது. 2. மேற்படி வசனம் போர்ச் சூழலில் சொல்லப்படுகிற வசனம்: இஸ்லாத...

குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதா? உஸ்மான் (ரலி) அவர்களால் தொகுப்பட்ட பிரதிதானே தற்போதுள்ள குர்ஆன்?.

ஜாகிர் நாயக் பதில்கள்  கேள்வி எண் 1. குர்ஆனின் பல பிரதிகள் உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் ; உஸ்மான் (ரலி) அவர்களால் எரிக்கப்பட்டது. குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதல்ல. மாறாக உஸ்மான் (ரலி) அவர்களால் தொகுப்பட்ட பிரதிதானே தற்போதுள்ள குர்ஆன் ?. பதில் : இஸ்லாத்தின் மூன்றாவது கலிபா உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் ஒன்றுக் கொன்று முரண்பட்ட பல குர்ஆனின் பிரதிகளை தொகுத்து ஒரே குர்ஆனாக உருவாக்கப் பட்டதுதான் இன்றைய அருள்மறை என்பது , குர்ஆனை பற்றி உலவுகின்ற கட்டுக்கதைகளில் ஒன்று. எந்த அருள்மறை முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்டதோ அதே அருள்மறைதான் , இஸ்லாமிய உலகத்தினரால் பெரிதும் போற்றி மதிக்கப்படும் அல்லாஹ்வின் வேதமாக இன்றும் இவ்வுலகில் திகழ்கின்றது. இன்றைக்கு இருக்கும் அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட ஒன்று. கட்டுக்கதைக்கான ஆணிவேர் எது என்று நாம் இப்போது ஆய்வு செய்வோம். 1. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் தொகுக்கப்பட்டு , அவர்களால் சரிபார்க்கவும் பட்டதுதான் இ...