ஆசிரியர் இல்லாத உலகம் .!
திருச்சி A.முஹம்மது அபூதாஹிர்
செப்டம்பர் ஐந்து நமது முன்னாள் ஜனாதிபதி சர்வ பள்ளி ராதா கிருஷ்ணன்
அவர்களின் பிறந்த நாள் தேசத்தின் ஆசிரியர்
தினம் .
அனைவரும் தம் வாழ்வின் மறக்க முடியாத ஆசிரிய பெருந்தகைகளை நினைவு
கூறும் தினம்
உங்களில் சிறந்தவர் குர்ஆனை தானும் கற்று பிறருக்கும் கற்றுக்
கொடுப்பவரே ! என்றார்கள் இறைத்தூதர் முஹம்மது (ஸல் ) அவர்கள்
எனக்கு அலிப் என்று ஒரு எழுத்தை கற்றுக் கொடுத்தாலும் அவரும் ஆசிரியரே .நான் அவருக்கு அடிமையாகி விட விரும்புகிறேன்
.என்றார் இஸ்லாமிய குடியரசின் நான்காம் தலைவர் ஹஜ்ரத் அலி (ரலி )
ஒரு பள்ளிக் கூடம் திறக்கப் படுவதால் ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்
படுகின்றன என்றார் கவிஞர் ரவீந்திர நாத்
தாகூர் .
என் தந்தையார் அவர்களே அவர்கள்தான் எனக்கு முதல் ஆசிரியர் .எனக்கு
குர்ஆன் ஒத ,அரபி வாசிக்க கற்றுக்
கொடுத்தார்கள் .
என் அன்னையார் சில நேரம் கைப் பிடித்து தமிழ் எழுத பயிற்சிக்
கொடுத்தார்கள் .
காலஞ்சென்ற எனது பாட்டனார் முஹம்மது ஹுஸைன் (ரஹ் ) அவர்கள் ஆங்கில
சொற்களை அகராதி வழி நின்று அழகாக விளக்குவர் .எப்படி அகராதி பார்க்க வேண்டும்
என்று அவர்கள்தான் எனக்கு கற்றுக் கொடுத்தார்கள்.
எனது ஆசிரியர்கள் முதல் வகுப்பில் இருந்து கல்லூரி வரை அனைவரையும்
நன்றியுடன் இன்றும் நினைத்துப் பார்க்கிறேன் .
முதல் வகுப்பு ஆசிரியர் காந்தி டீச்சர் . இரண்டாம் வகுப்பு மேரி
டீச்சர் .அப்துல் கரீம் சார் ,மூன்றாம் வகுப்பு நூர் முஹம்மது ஸார் ,நான்காம்
வகுப்பு இப்ராஹிம் ஸார் .மும்தாஜ் டீச்சர் ,ஐந்தாம் வகுப்பு அப்துல் கரீம் ஸார் ,
ரோஷன் டீச்சர் அவர்கள்தான் எழுத கற்றுத்
தந்தார்கள் .வாசிக்கக் கற்றுத் தந்தார்கள் .கதை சொல்லி படிப்பினை சொல்லித்
தந்தார்கள் .பாட்டு பாடி பாடங்கள் சொல்லித் தந்தார்கள்.வாசிக்க மட்டுமல்ல
அனைவரையும் நேசிக்கவும் கற்றுக் கொடுத்த அன்பானவர்கள் இவர்கள் .
ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு ஆங்கிலம் கணக்கு ,அறிவியல்
ஆசிரியை ஆயிஷா மிஸ் அரபி ஆசிரியர் ,உபைதுல்லாஹ் ஹஜ்ரத் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை
அரபி ஆசிரியர் ரவ்னக் அலி ஹஜ்ரத் ,அறிவியல் ஆசிரியர் மகேஸ்வரன்
,அனைத்துக்கும் மேலாக ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பில் கணக்கும் ஆங்கிலமும்
எளிமையாக சொல்லித் தந்த தலைமை ஆசிரியர் அப்துல் ரஹ்மான் ,வரலாறு ஆசிரியர் லாரன்ஸ்
,தமிழ் ஆசிரியர்கள் சாஹுல் ஹமீது ,மற்றும் வடுவூர் சிவமுரளி என் நினைவுகள் மறக்க
முடியாத ஆசிரிய பெருமக்கள் .சிந்தனை ,வாதங்கள் ,என பாடத்தை தாண்டி உலகை வாசிக்க
கற்றுக் கொடுத்த உத்தமப் பெருமக்கள் இவர்கள்
பதினொன்று மட்டும் பன்னிரெண்டாம் வகுப்பு ஆசிரியர்கள் ஆங்கில ஆசிரியர்
முஹம்மது அலி ,வரலாறு ஆசிரியர் அப்துல் ஸலாம் ஆகியோர் மொழியை மட்டுமல்ல
நல்வழியையும்,வரலாற்றுடன் சேர்த்து அறிவுரைகளையும் சொல்லித் தந்த நன்மக்கள்
அவர்கள் .
என் ஆசிரியப் பெருமக்கள் .அனைவரும் என் நன்றிக்குரியவர்கள்
.ஆசிரியப் பெருமக்கள் அனைவரும் அளித்த அள்ளித் தெளித்த கல்வி
முத்துக்கள்தான் காலங்களைக் கடந்து இன்றும் நம் வாழ்வை ஒளிரச் செய்துக்
கொண்டிருக்கிறது .
ஆசிரியர் இல்லாத உலகம் அறிவு இல்லாத இருள் சூழ்ந்த உலகம் .
ஆசிரியர் அறிவுரை அவமதிக்கும் சமூகம் தன்னைத்தானே அழித்து தற்கொலை
செய்வதற்கு சமம் .
இன்று கையெழுத்து போட ,ஒரு விண்ணப்பம் நிரப்ப, பத்திரிகை வாசிக்க
,கட்டுரை மற்றும் கவிதை எழுத ,கூட்டங்களில் பேச போகும் தருணங்கள் முதன் முதலாய்
எழுத்தை ,எண்ணை படிக்க எழுத ,புரிய ஆசிரியப் பெருமக்கள் கற்றுத் தந்தது என் கண்
முன்னே நிற்கிறது .
கல்வியோடு சேர்த்து அன்பு கருணை ,மனித நேயம் ,பகுத்தறிவு, ,ஆகிவற்றை போதித்த ஆசிரியர்கள் மதிப்பெண்
மட்டுமல்ல சமூகத்தில் மதிப்பான நற்குணங்கள் மூலம் நல்ல சமூகம் மலர வித்திட்டவர்கள்
.அவர்களில் எனக்கு போதித்த ஆசிரியர் அனைவரும் உள்ளடங்குவர் .
இப்படியும் ஆசிரியர் போர்வையில் சிலர் ,
ஒழுக்கம் போதிக்கும் இடத்தில் ஒழுக்ககேடாக நடக்கும் ஆசிரியர்கள்
,சமத்துவம் போதிக்கும் இடத்தில சாதி மத வெறியுடன் செயல் படும் ஆசிரியர்கள் வாங்கும் சம்பளத்துக்கு பாடம் நடத்தாமல்
ஏமாற்றும் ஆசிரியர்கள் ,பள்ளிக் கூடத்தில் பாடம் நடத்தமால் அதே மாணவர்களிடம்
டியூசன் நடத்தி கொள்ளை அடிக்கும் ஆசிரியர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் .அல்லது
அவர்கள் இனம் காணப் பட்டு பள்ளிகளை விட்டே நீக்கப் படவேண்டும் .அவர்களின்
பட்டங்கள் பறிக்கப் பட வேண்டும்
இவர்கள்தான் மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைய ,மனித நேயம் அற்றவர்களாய்
மாற ,ஒழுக்கம் கெட ,மாணவிகள் வாழ்வு பாழாக காரணமாகும் .இவர்களையும் ஓரங்கட்டுவதன்
மூலம் ஆசிரிய சமூகம் அவதூறு துடைக்கப் படும் அப்போதுதான் அனைத்து மாணவர்களும் நாட்டில்
தங்கள் ஆசிரியர் அனைவரையும் நன்றியாய் நினைவு கூறுவர் எதிர் கால இந்தியாவின் .நல்ல
சமூகமாக மலருவர் .
கருத்துகள்
கருத்துரையிடுக