சாக்லேட்டு,ஆப்பிள்,கடவுள்
நர்சரி பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள்
வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கூடையின் மேல், "ஒன்றுக்கு மேல் எடுக்காதீர்கள்; கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்" என எழுதி இருந்தது.
சற்று தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லேட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. ... அந்தச் சாக்லேட் பெட்டியின் மீது ஒரு குழந்தை பின்வருமாறு எழுதியது: "எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்; கடவுள், ஆப்பிளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்!'

மேற்கண்டவாறு எழுதிய
பிள்ளை வார்த்தைகளுக்கு மேலோட்டமான அர்த்தம் கொண்டு எழுதியுள்ளதை விளங்கமுடியும் ஆனால் வயதில் மூத்தவர்களோ வணங்கும்
இடங்களிலோ அல்லது மற்றவர்கள் முன்னோ நேர்மையாளர்களாக காட்டிக் கொண்டு மற்ற
நேரங்களில் இறைவனையும் மனசாட்சியையும் மறந்து விடுகிறார்கள்
பிள்ளைகளை சூதுவாதற்றவர்கள் என்றால்
வயதில் மூத்தவர்களை என்ன சொல்வது நயவஞ்சகர்கள் என்றா?
கருத்துகள்
கருத்துரையிடுக