இடுகைகள்

ஜனவரி, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அவள் (மகளும், மனைவியும்)

 முனைவர்.A. முஹம்மது அப்துல் காதர் அவள் என்னோடு  என் இதயத்தோடு எப்படி கலந்து இருந்தாள் சரித்திரத்தின்  இடமும் காலமுமாய் சமுத்திரத்தின்  ஆழமும் நீளமுமாய் சரீரத்தின்  ரத்தமும் சதையுமாய்  இலக்கியத்தின்  எதுகையும் மோனையுமாய்  இலக்கணத்தின்  நிகழ்ந்து நிகழ்ந்து கடக்கும்  எதிர்காலமாய்  என் பயணத்தில் நயனமாய்  என் உயிரின் நளினமாய்  என்னை நகர்த்திக்  கொண்டே இருக்கும்   நவரச நங்கை மேகமூட்டத்தில்  மெல்லிசையாய்   பெய்யும் மழை  அவளை எழுத  முயற்சிக்கிறேன்  என் மொழி   தடுமாறுகிறது  ஓயாமல் ஓடும்   நதியின் பேரழகை  ஒற்றைப் பார்வையில்  தோற்கடித்து விட்டாள்  மாலை நேரத்து சூரியனின்  மயக்கும் அழகை  தன் சிரிக்கும் விழிகளால்  சரித்து விட்டாள்  பௌர்ணமி நிலவின் பரவசத்தை  தன் முக வசம்  வைத்துக்கொண்டாள்

சாம்பிராணி பாய்

பாதுஷாவின் பரம்பரை   நாங்கள்! இப்போது  பாதுஷா ஸ்வீட் சாப்பிடுகிறோம்! அறுசுவையான  முகல் பிரியாணி இங்கே! இந்தியாவை கட்டி ஆண்ட  பிரம்மாண்ட  முகல் ராஜாக்கள் எங்கே?  உலகத்தையே ஆட்சி செய்த  துருக்கி உஸ்மானியர் வரலாறு  படிக்கவில்லை யாரும்! உஸ்மானியா பிஸ்கட்   பிடிக்காதவர் இல்லை யாரும்! மைசூர் பாக்கு தித்திப்பு  நாவில் இனிக்கும்! மைசூர் திப்புவின்  தியாகம் கேட்க கூட கசக்கும்!  ஆண்ட பரம்பரை நாங்கள்  ஆண்டியாய் ஆகிவிட்டோம்  மகதூர்ஷா பரம்பரை  பக்கீர்சா  பரம்பரையானது!  கணினியின் அல்காரிதம் தந்த மூசா  குவாரிஸ்மி  சரித்திரம் தெரியாது ! கன்னித்தீவின்  மூஸா மந்திரவாதி கதை  படிக்காதவர் கிடையாது! சாம்பிராணி பாய் என்று படத்தில் காட்டப்பட்டோம்!  பாம் வைப்பவராய்  இப்போது பத்திரிகையில் காட்டப்படுகிறோம்!  பாய் பிரியாணி பிடிக்கும் என  எங்களிடத்தில் சொல்லப்பட்டது! ஆனால் பாய் பிடிக்கும் என்று சொல்லப்படுவதில்லை! நாங்கள் படிக்காததால்  எங்கள் பெருமை  எங்களுக்கே தெரியாது! அவ...

மருத்துவமனைகள்

 மருத்துவமனைகள்   முதலில்   கல் மற்றும்  மண்ணால்    கட்டப்படுகின்றன ! பின்னர்   மருத்துவர்களின் கல் மனத்தால்  அவை உயர்த்தப்படுகின்றன! அவற்றின் தூண்கள்  நோயாளிகளின் எலும்புகள்  அவற்றின் அஸ்திவாரம்  நோயாளிகளின் சதைகள் ! முதல் மதிப்பெண் பெற்றவர்கள்   மருத்துவம் படித்து சேவை  செய்வேன் என்று பேட்டி கொடுத்தார்கள்  கடைசி வரை தேடிப் பார்க்கிறேன்    சேவை செய்யக்கூடிய மருத்துவரை   பெட்டி செய்தியாய் கூட பார்க்க        முடியவில்லை

அவசியம்

  வருகின்ற நாட்களிலே    ஒரு நாள்   நாம் பிரிகின்ற நாளாக இருக்கும்!   அது  வாழ்வின்  இறுதி நாளாக இருக்கும்! அதற்குப் பின் உறுதியாக  திரும்புதல் இல்லை  விடை பெறுகின்ற நாள்  ரகசியம்! அதற்கு  தயாரிப்புகள் செய்வது  மிகவும் அவசியம்!