இடுகைகள்

2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிந்திக்க சில வரிகள்

முஸ்லிம்களின் சமய உரிமை மற்றும் சுதந்திரத்தின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு அவர்களின் கட்டாய கடமையான தொழுகைக்கு அலுவல் நேரத்தில் நேரம் தர வேண்டியது கம்பெனிகளின் பொறுப்பாளர்களின் கடமையாகும். அந்த நேரத்தை அவர்கள் விரும்பினால் ஆபிஸ் முடிந்தப் பின்போ அல்லது அதற்கு முன்போ சேர்த்து வேலை செய்யுமாறு பணிக்கலாம்.அல்லது விரும்பினால் சலுகையாக விட்டு விடலாம். அதே நேரத்தில் முஸ்லிம்களில் சிலர் வேலை நேரத்தில் தொழுவதற்கும், குர்ஆன் ஓதுவதற்கும் அவர்களாக அதிக நேரம் எடுத்துக் கொள்வது விரும்பத் தக்கதல்ல. அது பெரும் ஊதியத்திற்கு பேசப் பட்ட நேரத்தில் குறைவு செய்வதாகும். அவர்கள் குர்ஆனின் பின் வரும் வசனத்தை கவனித்து தங்கள் தவறை சரி செய்துக் கொள்ள வேண்டும் “அவர்கள் மக்களிடம் அளந்து வாங்கும்போது நிறைவாக வாங்கிக் கொள்கின்றனர்.மக்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுத்தால் குறைத்து விடுகின்றனர்”. (குர்ஆன் 83 :2,3) அறிஞர்களின் கருத்துப் படி இந்த வசனம் வியாபாரத்தில் மக்களிடம் குறைவு செய்யும் வியாபாரிகளை மட்டுமல்ல பணிகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு கணக்கிட்டு ஊதியம் பெற்றுக் கொண்டு அதை விட குறைவான நேரத்தில் பணி...

எம்மை வார்த்தப் பள்ளி, வடித்தச் சிற்பிகள்

Ø   எனக்கு அப்போது வயது பதினொன்று . நான் இங்கு சேர்ந்த வருடம் தொண்ணூற்று இரண்டு. Ø   ஜாமியுல் பிர்தவ்ஸ் என்ற ஒரே வரி அதுதான் என் முதல் முகவரி! Ø   “மஜ்லிஸுல் உலமா” தொடக்கப்பள்ளியில் வாசிக்கக் கற்றுக் கொண்டேன்! “ஜாமியுல் பிர்தவ்ஸ்” மேனிலைப் பள்ளியில்தான் நான் யோசிக்கக் கற்றுக் கொண்டேன்! Ø   ஜனாப் அப்துர்ரஹ்மான் அப்போது தலைமை ஆசிரியர் ! அவர் எங்களுக்கு கிடைத்த, தலைசிறந்த ஆசிரியர்! Ø   எனக்கு வேப்பங்கனி யாய் இருந்த கணிதத்தை வெல்லச் சர்க்கரையாய் போதித்தவர். ஆங்கிலப் பாடத்தை மிகவும் அக்கறையாய் போதித்தவர். அவர் பின்னங்களோடு சேர்த்து நல்லெண்ணங்களை போதித்தவர்! ஆங்கில மொழியோடு சேர்த்து அறவழியை கற்பித்தவர்! Ø   ரவ்னக் அலி ஹஜ்ரத்தின் குர்ஆன் கிராஅத் அது ரம்மியமான ஒலி! அவர் அழகாய் கற்றுத் தந்தார் அரபி மொழி! `       Ø   தமிழில் சங்க காலத்தை விட, எங்களுக்கு ரொம்ப தெரிந்தது, எங்க தமிழய்யா சிவ முரளி காலம்தான்! Ø   சிவ பெருமானிடம் நக்கீரன்...

இந்திய முஸ்லிம்களும் குடியரசு தினமும்

திருச்சி   - A. முஹம்மது அபூதாஹிர் Thahiruae@gmail.com +918675881880 ஒவ்வோரு இந்தியனுக்கும் இரண்டு தினங்கள் முக்கியமானவை. இந்திய முஸ்லிமுக்கு இவை மிகவும் முக்கியமானவை.அவற்றின் மூலம் அவனது தேசப் பற்றை அவன் வெளிப்படுத்துகிறான்.மேலும் அவன் வெளிப் படுத்த வேண்டும் என்று எதிர்ப் பார்க்கப்படுகிறான்.ஒன்று  சுதந்திர தினம் (ஆகஸ்டு 15 ) மற்றொன்று குடியரசு தினம் ( ஜனவரி 26) . சுதந்திர தினம் அன்று முஸ்லிம்கள் தங்கள்  முன்னோர்கள் இந்த நாட்டிற்கு செய்த தியாகங்களை உணர்த்த வேண்டியது அவசியமாகும். முஸ்லிம்களின் முன்னோர்களான முகலாயர்கள், சுல்தான்கள், நவாப்கள், சூரிகள், இந்த நாட்டை ஒருங்கிணைக்க பாடு பட்டுள்ளார்கள். சமூக சீர்திருத்தம் செய்துள்ளார்கள்.மக்களுக்கு நல்லாட்சியை வழங்கி உள்ளார்கள்.இந்த நாடு அந்நிய ஆக்கிரமிப்பிற்கு உட்பட்ட போது  பல முஸ்லிம் மன்னர்கள் தங்களின் இன்னுயிர்களையும் அளித்துள்ளார்கள். ஆங்கிலேயரை எதிர்த்து சுதந்திரப்போர் செய்வதை  உலமாக்கள் ஜிஹாத்- புனிதப் போர் என்று பத்வா கொடுத்தார்கள்.அவர்களும் நேரடியாக களத்தில் நின்று பரங்கியரை எதிர்த்துப் போராடி வ...