இடுகைகள்

ஆகஸ்ட், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சூனியம் மூலம் பி ஜே தற்கொலையா ? கொலை முயற்சியா ?

  அண்மையில் தவ்ஹீத் ஜமாஅத்தின் சவாலை ஏற்று  மவ்லவி பி ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு சூனியம் வைக்க திருச்சியை சேர்ந்த அகோரி மணி கண்டன் என்பவர் முன்வந்துள்ளார்.அதன் மூலம் பி ஜே அவர்களை அவர் இறக்க செய்ய வேண்டும் என்றும் அப்படி இறந்தால் சூனியக் காரருக்கு 50 இலட்சம் தவ்ஹீத் ஜமாஅத் கொடுக்குமாம் . குர்ஆனில் தெளிவாக வந்துள்ளது ஹாருத் மாருத் சூனியத்தை கற்றுக் கொடுத்து விட்டு இது ஒரு சோதனை இதில் வீழ்ந்து நிராகரிப்பாளர் ஆகி விடாதீர் என்று .சூனியக் காரர்கள் நபி மூஸா (அலை )முன் அவர்கள் தோல்வி அடைந்து ஈமான் கொண்டனர் என்று .நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப் பட்ட போது இரு குள் சூராக்கள் இறக்கப் பட்டு அவை நீக்கப் பட்டது என்று ஹதீஸில் வந்துள்ளது .சூனியக்காரர்கள் என்பதற்கு "சாஹிரூன் " என்ற அரபி வார்த்தை பயன் படுத்தப் பட்டுள்ளது .இன்று அல்ல என்று பயன் படுத்தினாலும் அதன் அர்த்தம் சூனியக் காரர்கள் என்பதுதான் .சூனியம் என்பது இருக்கிறது.அது முன்னால் செய்யப் பட்டது.இன்று வேண்டுமானால் அது  செயலன்றி இருக்கலாம் .எனினும் சூனியமே இல்லை என்று ஆகி விடாது .நாத்திகர் போன்று எதை எடுத்தாலும் மறுத்து...

இஸ்ரேலிய அமெரிக்க தயாரிப்பு புறக்கணிப்பு நபி வழிப் படி சரியா?

செங்கிஸ்கான் என்னும் சகோதரர் பாலஸ்தீன் படுகொலைகளுக்கு எதிராக இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கத் தயாரிப்புக்களை முஸ்லிம்கள்  செய்யும் புறக்கணிப்பை நபி வழிப் படு தவறு என்று வித்தியாசமான மற்றும் விபரீதமான கருத்தை முன் வைக்கிறார். இஸ்ரேலிய தயாரிப்புக்களை புறக்கணிப்பது சரிதானா? என்ற அவரது கட்டுரைக்கு அவருக்கு நமது மறுப்பே இது. நாம் புறக்கணிக்கும் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க பொருட்கள் எதுவும் பெரும்பாலும் அத்தியாவசிய  பொருட்கள் அல்ல .பல பொருட்களுக்கு பதிலீட்டுப் பொருட்கள்  ( alternative ) உள்ளது. இதனை தடுப்பதால் இஸ்ரேலியர் ஒன்றும் செத்துப் போய் விட மாட்டார்கள். இஸ்ரேல் ஒன்றும் முறைப்படியான நாடோ மேலும் அவர்கள் அந்த பூமியின் பூர்வீக சமூகமோ கிடையாது .அவர்கள் பாலஸ்தீனரின் பூர்வீக பூமியை அபகரித்து அங்கே தங்கி மன்னின்  மைந்தர்களான பாலஸ்தீனர்களை கொலை செய்கின்றனர் கூட்டமாக அங்கே கூடாரம் போட்டு தங்கி இருக்கும் கொலை கார கும்பலுக்கு பொருளாதாரம் வராமல் தடுக்க முயற்சிப்பதை சம்பந்தமேயில்லாமல் சமூகமாக வாழ்ந்த அமைப்பு முறையில் நபி அவர்கள் நடந்துக் கொண்ட முறையை உதாரணம் காட்டுவது தவறாகும் நப...