ஏன் அவர்கள் மவுனமாக இருந்தார்கள் ?
திருச்சி A. முஹம்மது அபூதாஹிர் thahiruae@gmail.com தோஹா – கத்தார் தவ்பீக் சுல்தானா, பதின்மூன்று வயதே ஆன அச்சிறுமி அன்று அறுபத்து ஏழாம் ஆண்டு நாட்டின் சுதந்திர தின விழா கொண்டாட பள்ளிக்குச் சென்றிருக்கிறாள். .அவளுக்குத் தெரியாது அன்றுதான் அவளின் சுதந்திரம் மட்டுமல்ல அவளின் உயிரே பறிக்கப் படப் போகிறது என. . வடக்கின் டெல்லி முதல் தெற்கின் திருச்சி வரை கொடியேற்றிய பிரமுகர்கள் சுதந்திர தின முழக்கங்களை வழக்கம் போல் நீட்டி முழங்கினார்கள்.கூடியிருந்த மக்களுக்கு இனிப்பை வழங்கினார்கள் இந்தியாவில் ஆங்கிலேயர் போனதுதான் மாற்றமே தவிர மற்றபடி சுதந்திரம் எனபது தினமாகத்தான் அனுசரிக்கப் படுகிறது என்பதும் தினம் தினம் அச்சமும் வன்முறையுமே அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்தியா ஆங்கிலேயர் கால அடிமை இந்தியாவை நினைவுப் படுத்துகிறது .என்பதும்தான் அனைவருமே அறிந்த உண்மையாகும் . சுதந்திரம் எனபது கார்ப்பரேட் முதலாளிகள் ,ரவுடிகள் ,கொலைகார்கள் கொள்ளைக் காரர்கள் ,அரசியல்வாதிகள் ,கிரிக்கெட்காரர்கள் ,சினிமாக் காரர்கள் என இவர்களுக்குத்தான் கருத்து சுதந்திரம் ...