இடுகைகள்

ஜனவரி, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய முஸ்லிம்களும் குடியரசு தினமும்

திருச்சி   - A. முஹம்மது அபூதாஹிர் Thahiruae@gmail.com +918675881880 ஒவ்வோரு இந்தியனுக்கும் இரண்டு தினங்கள் முக்கியமானவை. இந்திய முஸ்லிமுக்கு இவை மிகவும் முக்கியமானவை.அவற்றின் மூலம் அவனது தேசப் பற்றை அவன் வெளிப்படுத்துகிறான்.மேலும் அவன் வெளிப் படுத்த வேண்டும் என்று எதிர்ப் பார்க்கப்படுகிறான்.ஒன்று  சுதந்திர தினம் (ஆகஸ்டு 15 ) மற்றொன்று குடியரசு தினம் ( ஜனவரி 26) . சுதந்திர தினம் அன்று முஸ்லிம்கள் தங்கள்  முன்னோர்கள் இந்த நாட்டிற்கு செய்த தியாகங்களை உணர்த்த வேண்டியது அவசியமாகும். முஸ்லிம்களின் முன்னோர்களான முகலாயர்கள், சுல்தான்கள், நவாப்கள், சூரிகள், இந்த நாட்டை ஒருங்கிணைக்க பாடு பட்டுள்ளார்கள். சமூக சீர்திருத்தம் செய்துள்ளார்கள்.மக்களுக்கு நல்லாட்சியை வழங்கி உள்ளார்கள்.இந்த நாடு அந்நிய ஆக்கிரமிப்பிற்கு உட்பட்ட போது  பல முஸ்லிம் மன்னர்கள் தங்களின் இன்னுயிர்களையும் அளித்துள்ளார்கள். ஆங்கிலேயரை எதிர்த்து சுதந்திரப்போர் செய்வதை  உலமாக்கள் ஜிஹாத்- புனிதப் போர் என்று பத்வா கொடுத்தார்கள்.அவர்களும் நேரடியாக களத்தில் நின்று பரங்கியரை எதிர்த்துப் போராடி வ...