சுதந்திரப் போராட்டம் - ஜிஹாத்
திருச்சி A .முஹம்மது அபூதாஹிர் தோஹா - கத்தர் thahiruae@gmail.com தாடியும்,தொப்பியும் தீவிரவாத சின்னங்களாகவே தெரியும் சிலருக்கு ! தெரியுமா ? ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தங்கள் இன்னுயிர்களையே தந்தார்கள் சுதந்திரத்திற்கு! மத வழிப்பாட்டுத் தளங்கள் எல்லாம் மந்திரம் ஓதவே பயன் படுத்தப்பட்டது ! மசூதிகளில் குத்பாக்களில்தான் சுதந்திரத்திற்காக முதலில் குரல் கொடுக்கப் பட்டது ! “ஜிஹாத்“ என்றாலே பயங்கரவாதம் என பிரச்சாரம் செய்யப்படுகிறது ! நாட்டின் சுதந்திரபோராட்டம் “ஜிஹாத்” - புனிதப் போர் என்றுதானே முஸ்லிம்களால் பிரகடனப் படுத்தப்பட்டது ! அவரோடு சேர்ந்து சாப்பிடக்கூடாது, அவர் நம் தெருவில் நடக்கக் கூடாது , ஆச்சாரியங்கள் இப்படித்தான் ! ஆங்கிலேயர் கீழ் பணியில் இருக்கக் கூடாது ! ஆங்கிலம் கற்கக் கூடாது!, உலமாக்கள் “பத்வா” மதக் கட்டளையிட்டார்கள் முஸ்லிம்களுக்கு, ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம் அப்படித்தான் ! ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா முதல் தேசிய கீதம் எழுதியது நாங்கள் ! யாரோ சொல்கிறார்கள் வந்தே மாதரம் பாடாவிட்டால் எங்களுக...