நபி வழியில் நற்குணங்கள்
திருச்சி A . முஹம்மது அபூதாஹிர் தோஹா – கத்தர் thahiruae@gmail.com பரிசுத்தக் குர்ஆன் கூறுகிறது “நபியே நீர் அழகிய நற்குணத்தின் மீது இருக்கிறீர் “ ( 68:4) ( முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராக , கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடுவீராக!. (அல்குர்ஆன்: 3:159 ) . இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்: Ø ““நான் அழகிய குணங்களை முழுமைப் படுத்தவே அனுப்பப் பட்டுள்ளேன்.. Ø இறை நம்பிக்கையில் பரிபூரணம் பெற்றவர்கள் அதிசிறந்த பண்பாளர்களே ' Ø ' உங்களில் சிறந்தோர் அதிசிறந்த பண்பாளர்களே. Ø அதிகமதிகம் மனிதர்களை சுவனத்தில் நுழையச்செய்வ...