இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு தேவையா? சம்சுத்தீன் காசிமி சரியாகத்தான் சொல்கிறாரா ?
திருச்சி A. முஹம்மது அபூதாஹிர் அண்மையில் சென்னை மக்கா மஸ்ஜித் இமாம் மவ்லானா சம்சுத்தீன் காசிமி அவர்கள் இஸ்லாமிய பார்வையில் இட ஒதுக்கீடு கிடையாது என்று பேசினார் . திறமை மற்றும் தகுதி அடிப்படையில்தான் பணிக்கு தேர்ந்தெடுக்கப் பட வேண்டுமே தவிர இனத்தின் அடிப்படையில் ஒரு இனத்திற்கு செய்யும் இட ஒதுக்கீடு அடுத்த இனத்துக்கு செய்யப் படும் அநீதி என்பது இமாம் அவர்களின் கருத்து .இதன் மூலம் தகுதி அற்றவர்கள் பதவிக்கு வருகிறார்கள் அதனால் நிர்வாகம் சீரழிகிறது என்கிறார் அவர் . அதற்க்கு அவர் ஆதாரமாக எடுத்து வைத்த ஹதீஸ் இதுதான் தகுதி அற்றவர்கள் பதவிக்கு தேர்ந்தேடுக்கப் படல் இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்று மவ்லவி பி ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எப்படி போராட்டத்தில் பெண்கள் பங்கேற்க செவிலியறாய் சஹாபி பெண்கள் பங்கேற்றதை கூறி பெண்கள் பங்கேற்கலாம் என முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சு போடுகிறாரோ அவரின் போக்கும் முஸ்லிம் தலைமை பற்றி கூறப் படும் ஹதீஸை அரசு பணிகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் முஸ்லிம்கள் பெறுவதை சம்பந்தப் படுத்தி பேசுவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை . முதலில் இட ஒதுக்கீட...