இடுகைகள்

செப்டம்பர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆசிரியர் இல்லாத உலகம் .!

திருச்சி A. முஹம்மது அபூதாஹிர் thahiruae@gmail.com செப்டம்பர் ஐந்து நமது முன்னாள் ஜனாதிபதி சர்வ பள்ளி ராதா கிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள்   தேசத்தின் ஆசிரியர் தினம் . அனைவரும் தம் வாழ்வின் மறக்க முடியாத ஆசிரிய பெருந்தகைகளை நினைவு கூறும் தினம் உங்களில் சிறந்தவர் குர்ஆனை தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே ! என்றார்கள் இறைத்தூதர் முஹம்மது (ஸல் ) அவர்கள் எனக்கு அலிப் என்று ஒரு எழுத்தை கற்றுக் கொடுத்தாலும்   அவரும் ஆசிரியரே .நான் அவருக்கு அடிமையாகி விட விரும்புகிறேன் .என்றார் இஸ்லாமிய குடியரசின் நான்காம் தலைவர் ஹஜ்ரத் அலி (ரலி ) ஒரு பள்ளிக் கூடம் திறக்கப் படுவதால் ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப் படுகின்றன என்றார்   கவிஞர் ரவீந்திர நாத் தாகூர் . என் தந்தையார் அவர்களே அவர்கள்தான் எனக்கு முதல் ஆசிரியர் .எனக்கு குர்ஆன் ஒத ,அரபி வாசிக்க   கற்றுக் கொடுத்தார்கள் . என் அன்னையார் சில நேரம் கைப் பிடித்து தமிழ் எழுத பயிற்சிக் கொடுத்தார்கள் . காலஞ்சென்ற எனது பாட்டனார் முஹம்மது ஹுஸைன் (ரஹ் ) அவர்கள் ஆங்கில சொற்களை அகராதி வழி நின்று அழகாக விளக்குவர் ....