அன்பே !
திருச்சி A . முஹம்மது அபூதாஹிர் தோஹா – கத்தர் thahiruae@gmail.com Ø மலர் சூட நீவருவது அழகுதான் ! அதை விட மலர்ந்த முகத்துடன் வா மிகுந்த அழகு ! Ø நெத்திச் சூடியை விட நிரந்தர அழகு புத்தியால் சூடு Ø அணிந்துக் கொள் காதில் தோடு ! அதை விட அழகு நல்ல விசயங்களுக்கு உன் காதைக் கொடு ! Ø எதுக்குப் பவுடர் ? முகத்துக்கு அழகு புன்னகையால் பூசு! Ø ஒதுக்கு லிப்டிக்கை , உதட்டுக்கு அழகு பிறர் மனம் புண்படாமல் பேசு ! Ø மூக்குத்தியெல்லாம் எனக்குப் பிடிக்காது ! மற்றவரைக் குத்திப் பேசாதே அது போதும் ! Ø நீ கொலுசு அணிந்து வருவது அழகுதான் ! பணிவாய் பூமியில் நடந்தது வா அது அதை விட மிகுந்த அழகு ! ...