இடுகைகள்

மார்ச், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாக்யராஜின் பதில்கள் - அரசியல் என்பது சாக்கடையா?

சுமார் 16 வருடங்களுக்கு முன் , பாக்யா வார இதழில் கேள்வி-பதில் பகுதியில் படித்து , மனதில் பதிந்து போன விடயம் இது.பாக்யா   இதழில் கேள்வி பதில் பகுதி ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும். ஒவ்வொரு கேள்விகளுக்கும் ஒரு குட்டிக் கதை , அல்லது வரலாற்றிலிருந்து ஒரு சம்பவத்தை எடுத்துக் காட்டி பதில் சொல்லுவது பாக்யராஜ் அவர்களின் ஸ்டைல். கேள்வி: அரசியல் என்பது சாக்கடையா ? பதில்: இஸ்லாமிய நாட்டில் உமர் என்று ஒரு ஜானதிபதி இருந்தார். அவர் நோய்வாய்ப்பட்டபோது அங்கிருந்த மருத்துவர்கள் சில மருந்துகளை கொடுத்து இதனை தேனில் குழைத்து சாப்பிடுங்கள் என்றார்கள்.அப்போது அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டத்திலுள்ள தேனை சேகரித்து வைத்திருந்தார்கள். அந்நாட்டின் அதிபரான உமர் நினைந்திருந்தால் அதை எடுத்து அருந்தியிருக்கலாம் அவர் அப்படி செய்யவில்லை. மதியம் வேளை தொழுகைக்காக பள்ளிவாசலில் மக்கள் அனைவரும் கூடியிருந்தபோது உமர் எழுந்து நின்று மக்களை நோக்கி , " எனக்கு ஒரு வியாதி இருக்கிறது.அதற்கு மருத்துவர் தேன் கலந்து சாப்பிட சொல்லுகிறார். அரசாங்க பொறுப்பிலுள்ள தோட்டத்திலிருந்து ஒரு கரண்டி தேன் எடுத்து பயன்பட...

அந்தப் பழைய காலுறை... என்னோடு வரவேண்டும்..!!

* ( ஆங்கில மடல் ஒன்றின் தமிழாக்கம்: சகோதரர் இப்னு ஹம்துன்) * எம் அப்துல் காதர் – தம்மாம் ,சவூதி அரேபியா ) Top of Form Bottom of Form அவர் அறிஞர். செல்வந்தரும் கூட. தனக்கு மரணம் நெருங்குவதாக உணர்ந்தார். தன் மகனை அருகழைத்தார். மரண சாசனம் போல ஒன்றைச் சொன்னார்: "என் அருமை மகனே , விரைவில் நான் உங்களனைவரையும் விட்டுப் பிரிந்து விடுவேன். என்னுடலைக் குளிப்பாட்டி சடலத்துணி (கஃபன்) சுற்றுவீர்கள். அப்போது என்னுடைய ஒரேயொரு வேண்டுகோளை நிறைவேற்றுவாயா ?" " என்னவென்று சொல்லுங்கள் தந்தையே!" என்றான் மகன். அறிஞர் கூறினார் : "என் சடலம் அதற்குரிய துணியால் சுற்றப்படும் போது , என்னுடைய பழைய காலுறைகளில் ஒன்றை என் கால்களில் அணிவித்துவிடு. இதுதான் என் எளிய கோரிக்கை" ஊரில் மிகப் பெரும் செல்வந்தர் தன் தந்தை. ஆனால் , என்ன இது விசித்திரமான கோரிக்கை என்று நினைத்துக் கொண்டாலும் , எளிய ஒன்று தானே என்று மகனும் ஒப்புக் கொண்டான். அதற்கடுத்த சில நாள்களில் அந்த முதியவர் , தன் சொத்துகளையும் , மனைவி மக்களையும் விட்டுவிட்டு மாண்டுப் போனார். அவரை உலகிலிருந்...