இந்திய தூதரக பெண் அதிகாரி கைது . விமர்சனங்களும் ,வினாக்களும்
திருச்சி A .முஹம்மது அபூதாஹிர் thahiruae@gmail.com இந்தியாவின் பெண் தூதரக அதிகாரி தேவயாணி அமெரிக்காவில் கைது செய்யப் பட்டதற்கு இந்தியா எடுத்துள்ள பதில் நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கது. இதற்கு முன் பல தடவை இந்திய ஜனாதிபதி ,அமைச்சர்கள்,மற்றும் இந்தியாவின் முக்கிய பிரமுகர்கள் விமான நிலையங்களில் சோதனையிடப்பட்டு அவமானப் படுத்தப் பட்ட போது அப்படியெல்லாம் செய்யக் கூடாது என அன்பாக கண்டித்த இந்தியா முதல் முறையாக இப்போது தனது தூதர் கைது செய்யப் பட்டதற்கு அதிரடி நடவடிக்கை எடுத்து அமெரிக்காவை அதிர வைத்துள்ளது.தேர்தல் நெருங்கும் நேரமாக இருப்பதால் தேசத் தலைவர்களும் நாட்டுப் பற்றுடன் ஓட்டுப் பற்றும் கொண்டு மிகவும் அடிக்காத குறையாக அறிக்கையோடு நிறுத்தியுள்ளனர்.. இது பல வினாக்களையும்,சிந்தனைகளையும் தேச மக்கள் மனதில் எழுப்பியுள்ளது. இந்திய தூதரக அதிகாரி அமெரிக்காவில் கை விலங்கிடப் பட்டு அவமானப் படுத்தப் பட்டது ,கைது செய்யப் பட்டது தூதரக விதிமுறைகளை மீறிய செயல் என பொங்கும் மத்திய அரசு ஏன் இதுவரை இலங்கை அரசு ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மீனவர்களை கொன்றுக...